articles

img

இந்தியாவில் கல்வியை பின்னோக்கிக் கொண்டு செல்லும் பாஜக அரசு! -

இந்தியாவில் கல்வியை பின்னோக்கிக் கொண்டு செல்லும் பாஜக அரசு!

கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்  எம்.சின்னதுரை குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற எம்.சின்னதுரை பேசியது வருமாறு:  

கல்வியை காவிமயமாக்கும் பாஜக

தரமான கல்விதான் சமூகத்தின் எதிர்காலம். தனி மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமின்றி ஒரு தலைமுறையின் போக்கையை மாற்றக் கூடி யது கல்வி தான். வளர்ந்த நாடுகள் காலத்திற் கேற்ப கற்றல் - கற்பித்தல் முறையை நவீனப் படுத்தி செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கல்வியை பின்னோக்கிக் கொண்டு செல்கிற ஒன்றிய பாஜக அரசு, கல்வியில் தங்கள் ஆளு மையை நிறுவும் காவிக் கொள்கையை திணிக்க வும் கல்வித் துறையை பயன்படுத்தி வருகிறது.  பாஜகவின் வஞ்சகத்தை எதிர்ப்போம்! புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறை, இந்தி - சமஸ்கிருதம் திணிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை கொடுப்போம் என்று அடாவடித்தனம் செய்கி றது ஒன்றிய பாஜக அரசு. தமிழகத்திற்கு தொடர்ந்து  வஞ்சகத்தையே இழைத்து வரும் பாஜக அரசு, சட்டத்தின் ஆட்சியையும், மக்களாட்சியின் மாண் பையும் சீர்குலைக்கிறது. பாஜக அரசின் இத்தகைய செயல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது.  துணிந்து நிற்கும் தமிழகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே, நிறுத்தி வைத்திருக்கும் நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். ஒன்றிய அரசின் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், ரூ. 2,152 கோடியை மாநில அரசே பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. போட்டி அரசாங்கத்தை அனுமதியோம்! தற்போது தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு எதிராக போட்டி அரசை உருவாக்கும் எண்ணத்தில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரான அத்துமீறிய செயலாகும். ஒன்றிய அரசின் முகவ ராக செயல்படும் ஆளுநர் கூட்டும் இந்த மாநா ட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது. துணைவேந்தர்கள் பங்கேற்பது சரியாக இருக் காது. எனவே, ஆளுநரின் அத்துமீறும் நடவடிக் கைகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  தாய்மொழியில் வரைவுக் கொள்கை தேவை நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்கிற போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும். அதில் சட்டரீதியாக நாம் வெற்றி பெற வேண்டும். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான வரைவு அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. அது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழிலும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  8 ஆம் வகுப்பு வரை காலை உணவு ஒன்றிய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுக ளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெறும் வகை யில் அதற்கேற்ற கல்வித் தரம், பாடத்திட்டம் மற்றும் கற்றல் - கற்பித்தல் திறன் உருவாக்கப்பட வேண்டும். நாடே போற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தற்போது 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதை, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கையடக்கக் கணினி எப்போது கிடைக்கும்? அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாக கையடக்கக் கணினி (Tab) வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நிறைவேற்ற வேண்டும். உணவுப் படியை உயர்த்த வேண்டும் மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை, பள்ளிகள் திறந்த உடனே வழங்க வேண்டும். மேலும், அதை 40 கி.மீ தூரம் வரை பயணிக்கும் வகையில் வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாண வர்களுக்கான மாதாந்திர உணவுப்படியை இரட்டிப் பாக உயர்த்த வேண்டும்.அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு மைதானம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்தில் கொண்டு வர வேண்டும். குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் உடன டியாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் பணியிடங்களில் 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. 12 ஆண்டுகளாக அதற்கான தேர்வுகள் நடைபெறவில்லை. தேர்ச்சி பெற்ற பல்லாயிரக்கணக்கானோர் காத்தி ருக்கின்றனர். எனவே, காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். 14 ஆண்டு களாக தற்காலிகமாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டுகிறேன். 1,800 உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் காலிப் பணியி டங்கள் உள்ளன. அதை நிரப்பிட வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் செய்ய வேண்டும். பள்ளிகளை கல்விசார் களமாக மாற்றுக! தென் மாவட்டங்களில், சாதிய நோக்கத்தோடு பள்ளி மாணவர்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதற்கு மாற்றாக மாணவர்களுக்கு ஜனநாயக முறைகள், தலைமைத்துவத் திறன், அரசியல் அனுபவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் கல்வி சார் நடவடிக்கை களமாக மாற்றிட மாணவர் சட்டப்பேரவை உருவாக்குவதற்கு அரசு முன் வருமா என்பதை கேட்டுக் கொள்கிறேன். சாதி வன்முறையை தடுப்பதற்காக, நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை யை வெளியிட்டு, ஆய்வுக்கு உட்படுத்தி அதை அமல்படுத்த வேண்டும். தீண்டாமையை ஒழிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அரசு கலை,  பொறியியல் கல்லூரிகள் துவங்குக! அரசு உதவிபெறும் கல்லூரிகளில், ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, நிலுவை யில் உள்ள கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். விராலிமலை-கந்தர்வக்கோட்டை தொகுதியை மையமாக கொண்டு கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டும் என்பது கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.  கள்ளக்குறிச்சியிலும், தூத்துக்குடி மாநகரி லும் அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின்கீழ் உள்ள 6 உறுப்புக் கல்லூரியையும், மதுரை, தல்லாகுளத்தில் செயல்படும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியையும் அரசுக் கல்லூரி யாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டு கிறேன். சென்னையில் உள்ள டி.பி. ஜெயின் கல்லூரி அரசு உதவிபெறும் கல்லூரியில் முறையாக மாண வர் சேர்க்கை நடைபெறுவதில்லை. எனவே, இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டு கிறேன். தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மட்டுமே அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. எனவே அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரியை துவக்க வேண்டும்.  சமூக நீதிக்கு எதிரானது! தமிழகத்தில் 2 ஆயிரம் தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்ளன. அவற்றை வரையறை களுக்குட்பட்டு செயல்படுத்த வேண்டும். தமிழ் நாட்டில் அரசுக் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரை யாளர்களை விட கௌரவ விரிவுரையாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையாக பணி யாற்றுகின்றனர். குறைவான ஊதியம் என்பது சமூக நீதிக்கு எதிரானது. யுஜிசி அறிவித்துள்ள ஊதியம் வழங்க முடியவில்லை என்றாலும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள சம்பளத்தையாவது வழங்க வேண்டும். மேலும் காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் உறுதிப் படுத்த வேண்டும்.  கல்விக் கட்டணக் கொள்ளை தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் என்பது அதிகப்படியாக உயர்ந்தி ருக்கிறது. தமிழக அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சம்பளம் வழங்குக! சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றிய 120 இணைப் பேராசிரியர்க ளுக்கும், சென்னை உள்ளிட்ட 6 மண்டலங்களில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும்  உதவிப் பேராசிரியர்களுக்கும் இணைப் பேராசிரி யர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அரசு அதை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். ஈரோடு பாரதியார் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். கல்வியில் முன்னேறிய மாநிலம் தமிழகம். ஆனால், எல்லா  மட்டங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதை  நிறைவேற்றுவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதன் மூலமாகத்தான் கல்வியில் சமூக சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும். இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ மாணவர்க ளுக்கான விடுதி வசதியை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எம்.சின்னதுரை பேசினார்.