வஉசிக்கு வாரிசு நாங்கள்தான்
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசிய தாவது: “சீமான் போன்றவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள் ஒரு இந்துவுக்கும் முஸ்லி முக்கும் திருமணம் செய்து வைப்பார் களா என்று கேட்கிறார். அண்மை யில்தான் நாங்கள் தோழர் ஷாஜாதி நூற்றாண்டு விழா நடத்தினோம். அவர் தோழர் கோவிந்தராஜனை திருமணம் செய்துகொண்ட ஒரு முஸ்லிம் என்பதை சீமான் போன்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட சாதியினர் இரவில் காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும் என்கிற ஒரு காலம் இருந்ததை அறிவீர் களா? திருமணம் ஆனால் முதல் இரவில்கூட வீட்டில் இருக்க முடியாத நிலை இருந்ததா இல்லையா? அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? முத்துராம லிங்கத் தேவரும் பி.ராமமூர்த்தியும் போராடித்தான் அதில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். திருச்செந்தூர் கோவில் கல்வெட்டில் ‘நெஞ்சில் பனை ஏறும் தழும்பு இருந்தால் கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளதே. அதை ஏற்கிறோமா? யார் உள்ளே வரக்கூடாது என்று கூறி னார்களோ அவர்கள் இழுக்காவிட்டால் கோவில் தேர் நகராது என்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கவின் படுகொலையில் திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆனால், அதில் ஒரு இடத்தில்கூட சாதிய ஒடுக்குமுறை பற்றி குறிப்பிடவில்லை. ஆணவப்படுகொலை என்பதை கூற வில்லை. இந்த படுகொலைக்கு பிறகு நெல்லை மாவட்டத்திற்கு 5 முறை வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கொலை சம்பவம், எஸ்ஐ கொலை உட்பட பேசிய எடப்பாடி ஒருமுறைகூட கவின் படுகொலை குறித்து பேசவில்லையே, ஏன்? வஉசிக்கு வாரிசு நாங்கள்தான். அவர் இருந்த காலத்தில் அவரை சாதியை விட்டு விலக்கி வைத்தனர். இட ஒதுக்கீடுக் காக வாதாடியவர் வஉசி, பட்டியல் சாதி பார்வை மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்தவர் வஉசி, தனது மனைவி யின் வரலாற்றை எழுதிய முதல் தமிழர் வஉசி. தயவு செய்து அவரை சாதித் தலைவராக மாற்றாதீர்கள். இளமையில் கல் என எல்லோரும் சொல்கிறார்கள். சாதி தலைவர்களோ இளமையில் கொல் என பயிற்றுவிக் கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் உள்ள 63 கல்லூரி மாணவர்கள மீது வழக்கு இருக்கிறது, அல்லது சிறையில் இருக் கிறார்கள். வாழ்க்கையை இழந்திருக்கும். அந்த இளைஞர்களுக்காக நாம் வருத்தப்படுகிறோம். அத்தகைய வன்முறைப் பாதையிலிருந்து விலகி ஒற்றுமையை பாதுகாக்க அத்தகைய இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.