மூன்று அலைகள்
டிரையோண்டா என்றுதான் அந்தப் பந்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். டிரை என்றால் மூன்று என்றும், ஓண்டா என்றால் அலை என்றும் ஸ்பானிய மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளில் பொருள் வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையில் இந்தப் பந்தைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்துதான் இந்தப் போட்டியை நடத்துகின்றன. இந்த நாடுகளைக் குறிக்கும் வகையில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் அந்தப் பந்தில் இடம் பெற்றுள்ளன. அடிடாஸ் நிறுவனம்தான் இந்தப் பந்தைத் தயாரித்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து தற்போது வரையிலும் அடிடாஸ் தயாரித்த பந்துதான் பயன்படுத்தப்படுகிறது.