இடது கை சல்யூட்டுகள்
அண்மையில் நடைபெற்ற ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியாவின் முன்கள வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எல்லைக்கருகில் உள்ள படைத்தளம் மீதான ஏவுகணைத் தாக்குதலில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த கார்ப்பொரல் வருண் குமாரின் வலதுகை சேதமானது. அவரது வீர தீரச் செயலைப் பாராட்டி விமானப்படையின் உயர்ந்த விருதான வாயுசேனா மெடல் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த மெடலை அவர் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு ஒட்டுமொத்த விமானப்படையினர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. விமானப்படைத் தளபதியிடம் இருந்து அந்த மெடலை பெற்றுக் கொள்கையில் தனது இடது கையை மேலே கொண்டு போய் சல்யூட் அடித்தார். வழக்கத்துக்கு மாறானதாக இருந்தாலும், இது அங்கிருந்தோர் மத்தியில் வீர முழக்கம் எழுப்பச் செய்தது. கடந்த ஆண்டிலும் இதேபோன்று தாக்குதலில் வலதுகை பாதிக்கப்பட்ட சிப்பாய் தன்சிங்குக்கு விருது வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியிலும் அவர் தனது இடது கையை உயர்த்தி அடித்த சல்யூட் பெரும் பேசுபொருளாகியது.