articles

எம்.பி.எஸ் நூற்றாண்டு அரசு... முன்பக்கத் தொடர்ச்சி

எம்.பி.எஸ் நூற்றாண்டு அரசு 

முன்பக்கத் தொடர்ச்சி

வில்லை என்பதற்காக எங்களை இருபத்தைந்து முறை மீண்டும் மீண்டும் உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தார்.  அவரிடமிருந்து நாங்கள் இசை யை மட்டுமே கற்றுக் கொள்ள வில்லை. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கான நற்குணங்களை தன்னுடைய வாழ்க்கையில் அவர்  எப்போதும் கடைப்பிடித்து வந்தார். அடுத்த மனிதனைப் பற்றிய  அக்கறை வேண்டும், அடுத்த மனி தன் மீது அன்பு செலுத்த வேண்டும்  என்பதுதான் அவரது நிலையான பண்பாக இருந்தது. பிறர் அறியா மல் அவர் மற்றவர்களுக்கு செய்கிற  உதவிகள் ஏராளம். அவரால் பயன்  பெற்றவர்கள் ஏராளம் என்பதை நானே அறிவேன். ஆனால் அவர் இது பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்.  சேர்ந்திசை மூலம் அடுத்த தலைமுறையும் பயன்பட வேண்  டும் என்பதற்காகவே மிகப்பல பயிற்சிப்பட்டறைகளை நடத்தி னார். அவரது பாரம்பரியத்தை நாங்களும் தொடர்ந்து கொண்டி ருக்கிறோம். நாங்களும் பள்ளிக்  குழந்தைகளுக்கு தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வருகி றோம். பள்ளிக் குழந்தைகள் 6,000 பேரை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து எம்.பி.எஸ். சேர்ந்திசை நிகழ்ச்சி நடத்தினார். அவரது சேர்ந்திசைப் பாரம்பரியத்தை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுத்துக் கொள் வோம் என்றார்.