அது பழைய ஒயரு... அண்ணாமலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டது பற்றி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் தள இடுகையில், “ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், ‘போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு’ என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச்
சிறிதும் குறைந்ததல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழ கத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
இந்த விமர்சனத்திற்கு எதிராக, பல்வேறு உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலில், கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியது. இது குறித்து, ‘தி இந்து’ (ஆங்கிலம்) செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்குவதற்கு அனுமதி அளித்தார். இந்த துறை நிதி இல்லாததால் மூடப்படும் ஆபத்தில் இருந்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தமிழ்த்துறையின் தொடர்ச்சியான செயல்பாட்டுக்காக ரூ.1,00,64,012 மற்றொரு நிதியுதவி வழங்கப்பட்டது. இது குறித்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்து, நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 22.07.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிதியுதவி, தமிழ்த்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஸ்வென் வோர்ட்மனுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அண்ணாமலையின் தவறான தகவல்
அண்ணாமலையின் கூற்று, தமிழ்த்துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மூடப்பட்டுவிட்டது என்பதாகும். ஆனால், இந்தக் கூற்றுக்கு மாறாக, தமிழ்நாடு அரசின் நிதியுதவி மற்றும் துறையின் தொடர்ச்சியான செயல்பாடு குறித்த ஆவணங்கள் உள்ளன. இந்த நிலையில், அண்ணாமலையின் விமர்சனம் தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகிறது. மேலும், அவர் இந்த ஆவணங்களைப் படிக்காமல், அரசியல் நோக்கங்களுக்காகவே இந்த விமர்சனத்தை முன்வைத்திருப்பது தெளிவாகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட பின்னர், “கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை” எனக் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை,
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை உலக அரங்கில் பரப்புவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக நாம் கருதலாம்.
அண்ணாமலையின் விமர்சனம், தமிழ்நாடு அரசின் நிதியுதவி மற்றும் தமிழ்த்துறையின் தொடர்ச்சியான செயல்பாடு குறித்த உண்மைகளை திரித்து அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டதே தவிர வேறல்ல!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டது பற்றி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் தள இடுகையில், “ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், ‘போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு’ என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச்
சிறிதும் குறைந்ததல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழ கத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
இந்த விமர்சனத்திற்கு எதிராக, பல்வேறு உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலில், கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியது. இது குறித்து, ‘தி இந்து’ (ஆங்கிலம்) செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்குவதற்கு அனுமதி அளித்தார். இந்த துறை நிதி இல்லாததால் மூடப்படும் ஆபத்தில் இருந்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தமிழ்த்துறையின் தொடர்ச்சியான செயல்பாட்டுக்காக ரூ.1,00,64,012 மற்றொரு நிதியுதவி வழங்கப்பட்டது. இது குறித்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்து, நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 22.07.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிதியுதவி, தமிழ்த்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஸ்வென் வோர்ட்மனுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அண்ணாமலையின் தவறான தகவல்
அண்ணாமலையின் கூற்று, தமிழ்த்துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மூடப்பட்டுவிட்டது என்பதாகும். ஆனால், இந்தக் கூற்றுக்கு மாறாக, தமிழ்நாடு அரசின் நிதியுதவி மற்றும் துறையின் தொடர்ச்சியான செயல்பாடு குறித்த ஆவணங்கள் உள்ளன. இந்த நிலையில், அண்ணாமலையின் விமர்சனம் தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகிறது. மேலும், அவர் இந்த ஆவணங்களைப் படிக்காமல், அரசியல் நோக்கங்களுக்காகவே இந்த விமர்சனத்தை முன்வைத்திருப்பது தெளிவாகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட பின்னர், “கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை” எனக் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை,
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை உலக அரங்கில் பரப்புவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக நாம் கருதலாம்.
அண்ணாமலையின் விமர்சனம், தமிழ்நாடு அரசின் நிதியுதவி மற்றும் தமிழ்த்துறையின் தொடர்ச்சியான செயல்பாடு குறித்த உண்மைகளை திரித்து அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டதே தவிர வேறல்ல!