articles

img

மதுராந்தகம் ‘மெகா’ சீரியல்

மதுராந்தகம் ‘மெகா’ சீரியல் வஞ்சிக்கப்படும் தமிழகமும்,  வசதியாகக் கைகோர்த்த துரோகங்களும்!

தில்லியில் இருந்து ஒரு ‘ஸ்பெஷல் பிளைட்’ கிளம்பி, கேரளா வழியாகத் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கியபோது, வானத்தில் தெரிந்த மேகங்களை விட, மதுராந்தகம் மைதானத்தில் தெரிந்த பிளக்ஸ் பேனர்கள் தான் அதிகம். ஒரு வழியாகத் தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எனும் ‘நான்-ஸ்டார்ட்டர்’ இன்ஜினை ஸ்டார்ட் செய்ய, பிரதமர் மோடியே நேரடியாகத் தன் கையில் ‘கீ’ (Key) எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். பங்காளிகளின் “பாசமழை”:  ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம்! மேடையில் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் டிடிவி தினகரன். கடந்த எட்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் “துரோகி” என்றும், “ஊழல் மாஃபியா” என்றும் அர்ச்சனை செய்தவர்கள், இப்போது ஒரே சோபாவில், ஒரே காற்றைச் சுவாசித்துக் கொண்டு அமர்ந்திருப்ப தைப் பார்க்கும்போது, ‘அரசியலில் நிரந்தரப் பகைவர் எவருமில்லை’ என்ற முதுமொழியே சற்று வெட்கப்பட்டுப் போனது. தினகரன் பேசும்போது, “இது எங்க ஊட்டுப் பங்காளி சண்டைங்க, வெளியில இருக்கற எதிரிக ளுக்கு இது புரியாது” என்று ஒரு பிட்டைப் போட்டார். அது பங்காளி சண்டையா அல்லது ‘பங்கு’ வாங்கும் சண்டையா என்பதைத் தொண்டர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர். தேர்தல் வரை நீடிக்கும் இந்த ‘தேனிலவு’, ரிசல்ட் வந்தவுடன் எங்கே போய் முடியப்போகிறது என்ப தைத் தமிழகம் ஏற்கெனவே பலமுறை பார்த்தி ருக்கிறது. எடப்பாடியோ, தன் உரையில் ஒரு பாதுகாப் பான ரூட்டைத் தேர்ந்தெடுத்தார். திருக்குறளைச் சொன்னார், ஆனால் அதை எழுதியது யார் என்று சொல்லவில்லை. “எதுக்கு வம்பு, திருவள்ளு வருக்குக் காவி சட்டை போடணுமா இல்லை யான்னு ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு, நாம எதுக்கு அந்தப் பக்கம் போகணும்?” என்று ஒரு ‘சேஃப்டி டிஸ்டன்ஸ்’ கடைப்பிடித்தார். பிரதமரை அவர் புகழ்ந்து தள்ளிய விதத்தைப் பார்த்தால், 2019-இல் கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி தானா இவர் என்று சந்தேகம் வருவ தைத் தவிர்க்க முடியவில்லை. “ஒன்றிய அரசு டன் இணக்கமாக இருந்தால்தான் நிதி வரும்” என்று அவர் சொன்னது, ஒரு தேர்ந்த நிர்வாகியின் பேச்சாக இல்லை; ‘பயத்தில் வந்த பவ்யமாகவே’ வெளிப்பட்டது. மோடியின் ‘இந்தி’ முழக்கமும், நிதி ஆயோக் முரண்பாடுகளும்! ஆட்டநாயகன் பிரதமர் மோடி மைக் பிடிப்ப தற்கு முன்பே ட்விட்டரில் “தமிழ்நாடு என்டிஏ உடன் இருக்கிறது” என்று ஒரு கன்பார்ம் டிக்கெட் டைப் போட்டுவிட்டார். ஆனால் மேடையில் அவர் இந்தியில் பேசத் தொடங்கியதும், மொழி பெயர்ப்பாளர் ‘கஷ்டப்பட்டு’ அதைத் தமிழில் மாற்றுவதற்குள், பாதித் தொண்டர்கள் அடுத்த வேளைச் சாப்பாட்டுப் பொட்டலத்தைத் தேடி நகர்ந்துவிட்டனர். “திமுக ஊழல் கட்சி, அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் சொன்னது பழைய கதையாகத் தெரிந்தா லும், ‘பாஜக - என்டிஏ சர்க்கார்’ என்று அவர் சொன் னது அதிமுகவினருக்குப் பகீர் என்றது. “என்னப்பா இது, இது அதிமுக தலைமையிலான கூட்டணியா இல்ல பாஜக தலைமையிலானதா?” என்ற கேள்வி எடப்பாடியின் முகத்திலேயே நிழலா டியது. அதிமுகவை விழுங்கக் காத்திருக்கும் பாஜக வின் பசி, மோடியின் ஒவ்வொரு வார்த்தையிலும் ‘என்டிஏ சர்க்கார்’ என்று எதிரொலித்தது. குறிப்பாக, தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி அவர்  பேசியதுதான் ‘ஆண்டின் சிறந்த நகைச்சுவை’. சொந்த அரசின் நிதி ஆயோக் (NITI Aayog) அறிக்கையிலேயே தமிழ்நாடு வளர்ச்சியில் முதல் மூன்று இடங்களில் இருப்பதாகச் சான்றிதழ் கொடுத்திருக்கும்போது, பிரதமர் மேடையில் நின்று “இங்கே வளர்ச்சியே இல்லை” என்று சொல்வது, ஏக்கர் கணக்கில் பொய் சொல்வதல்ல, சதுர கிலோமீட்டர் கணக்கில் பொய் சொல்வது போல இருந்தது. டபுள் இன்ஜின் என்று பீற்றிக் கொள்ளும் பாஜக ஆளும் மாநிலங்களின் நிலை என்ன? உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) இன்னும் தரை தட்டி நிற்கும் போது, சொந்தக் காலில் நின்று சாதிக்கும் தமிழ கத்தைப் பார்த்து “வளர்ச்சி இல்லை” என்பது அப் பட்டமான வன்மம். குஜராத்தில் திறப்பு விழாவிற்கு முன்பே சரிந்து விழுந்த 21 கோடி ரூபாய் தண்ணீர் தொட்டிச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, தமிழகத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி அவர் கவலைப்பட்டது ‘முரண்’களின் உச்சம். வஞ்சிக்கப்படும் நிதி:  3000 கோடி எங்கே? தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை முடக்க, ‘சமக்ர சிக்சா’ திட்டத்திற்கான 2,152 கோடி ரூபாய் நிதியை (2024-25 நிதியாண்டு) ஒன்றிய அரசு பிடித்து வைத்திருக்கிறது. காரணம்? தமிழ கம் தேசியக் கல்விக் கொள்கையை (NEP) ஏற்கவில்லை என்பதுதான். மாநில உரிமை களைப் பறித்து, கல்வியைக் காவிமயமாக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் இந்தச் செயலை மேடையில் இருந்த ஒரு கூட்டணித் தலைவராவது கேட்டார்களா? இல்லை. மாறாக, “ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் நிதி வரும்” என்று தமிழக மக்களின் வரிப்பணத்தை ஒன்றிய அரசிடம் ‘பிச்சை’ கேட்பது போல எடப்பாடி பேசியது, தமிழக  மக்களுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான துரோகம். நாம் செலுத்தும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வரிக்கும் ஒன்றிய அரசு திருப்பித் தருவது வெறும் 29 பைசா மட்டுமே. ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது. இந்த அநீதியைப் பற்றிப் பேசாத மோடி, “வளர்ச்சி வரணுமா டபுள் இன்ஜின் வேணும்” என்று மிரட்டியது அநியாயத்தின் உச்சம். நீட் எனும் மரணப் பொறி: ஜனாதிபதியின் பிடிவாதமும், பாஜகவின் வன்மமும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக் கோரி அனுப்பப்பட்ட மசோதா, ஜனாதிபதி மாளி கையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. 2025 நவம்பர் 15-இல் தமிழக அரசு இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றிருக்கும் சூழலில், அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை. மாறாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பேசி, ‘சிறுபான்மையினரை திருப்திப்படுத்து கிறார்கள்’ (Minority Appeasement) என்ற  மதவாத அஸ்திரத்தை ஏவினார். திருப்பரங் குன்றம் பிரச்சனையை பிரதமரே மத ரீதியாக மடைமாற்றுவது தமிழகத்தின் சமூக நல்லிணக் கத்தைச் சீர்குலைக்கும் ஆபத்தான விளையாட்டு. தமிழ்நாட்டை மதவெறிக் களமாக்க முயலும் இந்த பேச்சை  ரசித்துக்கொண்டிருந்த கூட்டணித் தலை வர்கள், தமிழக மக்களுக்கு எத்தனை பெரிய துரோ கத்தைச் செய்கிறோம் என்பதைத் தெரிந்தே இருந்தார்கள். இந்த “சீரியஸான” அரசியலுக்கு நடுவே, நித்யானந்தாவின் சீடர்கள் மேடைக்கு வெளியே ‘கைலாசா’ படிவங்களை விநியோகம் செய்தது தான் அல்டிமேட் காமெடி. “மோடி கூட்டத்துக்கு வந்தா கைலாசாவுக்கு ஃப்ரீ டிக்கெட்டா?” என்று மக்கள் கேட்கும் அளவுக்கு அந்தச் சம்பவம் அமைந்தது. மணிப்பூரின் கண்ணீரும், தேர்தல் காலத்து ‘திடீர்’ தமிழ் பற்றும்! மதுராந்தகத்தில் மேற்படி கூட்டணித் தலை வர்கள் புன்னகையோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட அதே நேரத்தில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. நேபாளத்தில் வேலை பார்த்துவிட்டு, தன் காதலியைத் திருமணம் செய்ய வந்த 30 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடி யோக்கள் ரத்தத்தைக் கொதிக்க வைக்கின்றன. இரண்டு இனங்களுக்கு இடையே அன்பைப் பரிமாறிக்கொள்ளக் கூட அனுமதியில்லாத அந்தப் பிராந்தியத்திற்குச் சென்று ஒரு ஆறுதல் சொல்ல நேரமில்லாத பிரதமர், தமிழ்நாட்டிற்கு மட்டும் தேர்தல் நேரத்தில் ‘தமிழ் பாசம்’ பொங்க ஓடி வருவதுதான் விந்தையிலும் விந்தை!  தேர்தல் வந்துவிட்டாலே போதும், தில்லியில் இருந்து கிளம்பும் அத்தனை பாஜக தலைவர்க ளுக்கும் திடீரென சங்க இலக்கியங்கள் நினை வுக்கு வரும். “யாதும் ஊரே” என்று தொடங்கு வார்கள், ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி” என மாநில உரிமைகளின் கழுத்தை நெரிப்பார்கள்.  அதிமுகவின் சரணாகதி அரசியல்: உரிமையா? பிழைப்பா? ஜெயலலிதா இருந்தவரை ஒன்றிய அரசைத் தட்டிக்கேட்ட அதிமுக, இன்று பாஜகவின் ‘பி-டீம்’ ஆகச் செயல்படுவது வேதனையானது. கொடி, சின்னம், பதவி என எல்லாவற்றிற்கும் தில்லியின் தயவை நாடி நிற்கும் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களின் உரிமைகளை தில்லிக்குத் தாரை வார்த்துவிட்டார். “நாங்கள் இணக்கமாக இருந்தால்தான் மருத்துவக் கல்லூரிகள் வரும்” என்று அவர் சொல்வது, தமிழகத்தின் சுய மரியாதையை அடகு வைக்கும் செயல். எடப்பாடி அவர்களே, நீங்கள் இணக்கமாக இருந்ததால்தானே உதய் மின் திட்டம் முதல் ஜிஎஸ்டி வரை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு தமிழகத்தின் நிதி உரிமையை இழந்தோம்? இணக்கமாக இருந்ததால்தானே ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொ டுத்தீர்கள்? இப்போது மீண்டும் அதே ‘இணக்க’ அரசியலைப் பேசி மக்களை ஏமாற்ற முடியாது.  புலிகள் அல்ல; பூனைகள் மதுராந்தகம் கூட்டம் ஒரு பிம்பத்தை (Perce ption) உருவாக்க உதவியிருக்கலாம். அதாவது, ‘திமுகவிற்கு எதிராக ஒரு பலமான கூட்டணி இருக்கிறது’ என்ற தோற்றத்தை. ஆனால், மேடையில் இருந்த தலைவர்களின் இதயங்கள் ஒன்றிணையவில்லை என்பது அவர்களின் உடல் மொழியிலேயே தெரிந்தது. ஒரு பக்கம் நீட் விலக்கு இல்லை, இன்னொரு பக்கம் கல்வி நிதி நிறுத்தம், மற்றொரு பக்கம் கீழடி அகழ்வா ராய்ச்சி அறிக்கையைத் தாமதப்படுத்துவது எனத் தமிழகத்தின் அடையாளங்களையும், உரிமைகளையும் சிதைக்கத் துடிக்கும் சக்திக ளுடன் கைகோர்ப்பது தமிழகத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. ‘டபுள் இன்ஜின்’ என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு இன்ஜின் வஞ்சிப்பதற்கும், இன்னொரு இன்ஜின் சரணடைவதற்கும் சமம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். காகிதப் புலிகளின் இந்தக் கர்ஜனை, தேர்தல் களத்தில் வெறும் பூனைச் சத்தமாகவே முடியும்.  - பட்டாசு