articles

img

புறக்கணிக்கப்பட்ட குரல்களுக்கான இலக்கியம் எம்ஜே பிரபாகர்

புறக்கணிக்கப்பட்ட குரல்களுக்கான இலக்கியம்

தமிழில் பதின்பருவத்தின ருக்கான சிறார் நாவல்கள் சமீப காலமாக பெரும் பாய்ச்சலில் வந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு களங்களையும் பின்ன ணிகளையும் கொண்ட சிறப்பான படைப்புகள் வெளிவருகின்றன. இருந்தாலும் மாற்றுத்திற னாளிகளைக் கதாபாத்திரங் களாகக் கொண்ட நேரடி தமிழ்ப் படைப்புகளின் வருகை மிகக் குறைந்த அளவில்தான் இருக்கும். இந்தக் குறையை நிரப்பும் வகையில் மலையாளத் தின் சிறந்த படைப்பை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் மொழி பெயர்ப்பாளர் அம்பிகா நட ராஜன்.  எளிமையில் ஆழம்  விமலா மேனன் எழுதிய “நாங்களும் மனிதர்கள் தானே?” என்ற இந்த சிறார் நாவல், ரோகித் மற்றும் ஜோன்ஸ் என்ற இரு  போலியோ பாதிக்கப்பட்ட சிறு வர்களின் நட்புக் கதை. இடுப்புக்கு கீழே செயல்படாத கால்களைக் கொண்ட இரு சிறுவர்களின் உலகை, மந்திர தந்திர வித்தை களோ பெரிய சாகசங்களோ ஏதுவும் இல்லாமல், நம் கண்  முன் எளிமையான வார்த்தை களில் அழுத்தமாக நிறுத்துகிறார் நூலாசிரியர்.  

வண்ணமயமான உலகம்  

பிறர் துணையின்றி நகரக்கூட முடியாத குட்டனுக்கு ஒரு சக்கர நாற்காலி கிடைக்கிறது. அந்த சக்கர நாற்காலி வந்ததும் கருப்பு வெள்ளையான அவனது உலகம் வண்ணமயமாக மாறு கிறது. இந்தக் காட்சியை வாசிக்கும் போது நம் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் வருகிறது.  

சமூகத்தின் மூளைக்குழப்பம்  

மாற்றுத்திறனுடைய குழந்தை களின் குடும்பத்தினர் தவிர பிறருக்கு எப்போதுமே இவர் களின் சிக்கல்களோ சவால்களோ புரிவதில்லை என்ற யதார்த்தத்தை நூலாசிரியர் வெளிப்படையாகப் பதிவுசெய்கிறார். சாதாரணமாக நமக்குப் பழக்கப்பட்டுப் போன ஒரு விஷயம் மாற்றுத்திறனாளிகளின் பார்வையில் எப்படி உள்ளது என்பதையும், நாம் ஏன் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கி க்கொண்டு சிந்திப்பதில்லை என்ற கேள்வியையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.  கதையில் நண்பர்கள் உயரங்களை அடைந்தாலும் இச்சமூகம் எப்படி அவர் களைப் பார்க்கிறது என்பது வெளிப்படையாக பதிவுசெய்யப் பட்டுள்ளது. இந்த நூலுக்கு அழகான கோட்டோவியங்கள் வாசிப்புக்கு பெரிதும் துணை செய்கின்றன.  சமூக மாற்றத்தை விரும்பும், மனித மாண்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசித்து, தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டிய கதைதான் “நாங்களும் மனிதர்கள் தானே?”