‘மத’யானையை தடுத்து நிறுத்துவோம்; மாணவர் சிந்தனையைப் பாதுகாப்போம்!
இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 11 பேர் கொண்ட ஆர்எஸ்எஸ் காவிக்கூடாரம்தான் தேசிய கல்விக்கொள்கை யை வடிவமைத்த குழு. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் நூற்றாண்டு கால கனவுதான் தேசிய கல்விக்கொள்கை. தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றி ருந்த மும்மொழிக்கொள்கை, இடஒதுக்கீட்டு க்கு எதிரான கருத்துகள், மறைமுகமான குலக்கல்வித்திட்டம், மாநில உரிமை மற்றும் சமூகநீதிக்கு எதிரான கருத்துகளை தமிழ்நாடு அரசு கடுமையாகவும், உறுதியாகவும் எதிர்த்து நின்றது. இந்தப் பின்னணியில், தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை - என்ற தலைப்பில் மிகச்சிறந்த நூலை, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் தனித்துவ நிலைப்பாடு தேசிய கல்விக்கொள்கையில் திருத்தங் களை ஏற்கவில்லை எனில் தமிழ்நாட்டுக் கென தனியான கல்விக்கொள்கை கொண்டு வருவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிபட அறிவித்தார். பாசிசமும், நாசிச மும் கல்விக்கொள்கையில்தான் கை வைத்தது என்பதை நூலாசிரியர் திறம்பட விளக்குகிறார். ஒற்றை அதிகார மையமாக ஒன்றிய அரசு இருக்கவேண்டும் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்ப தையும், அரசியலமைப்புக்கு எதிரானதாகவும், கல்வியை வணிகச்சந்தையாகவும், தனியார்மயமாகவும் எப்படி கொண்டுசெல்கிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். பள்ளிக்கல்வியை சிதைக்கும் திட்டம் பருவகால தேர்வுகள் மூலம் பள்ளிக்கல்வி யை தேசிய கல்விக்கொள்கை எப்படி சிதைக் கிறது என்பதையும், இது குழந்தைகள் மீதான வன்முறை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். தேசிய கல்விக்கொள்கை எப்படிப்பட்ட மாயஜால வார்த்தைகளைப் பேசுகிறது என்பதை நேர்த்தியாகப் படம்பிடித்துக்காட்டுகிறார். கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் மாநில அரசுகளின் பொறுப்பைச் சிதைத்து, இதை தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் இணைக்கிறது என்பதைச் சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
பிரதமரின் நேரடித் தலையீடு தேசிய கல்விக்கொள்கைக்குப் பிரதமரே பொறுப்பு. இதன் மூலம் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தையின் கல்வியில் நம்நாட்டுப் பிரதமர் நேரடியாக - பாதகமான முறையில் தலையிடுகிறார் என்கிறார் நூலாசிரியர். எட்டாம் வகுப்பு மாணவர்களைத் தோல்வியுறச் செய்யக்கூடாது என்ற தமிழ்நாட்டின் கற்றல் நடைமுறைக்கு எதி ரானது தேசிய கல்விக்கொள்கை என பளிச் சென்று பேசுகிறது இந்நூல். மகிழ்ச்சியான கற்றல் முறைக்கு எதிராக மன அழுத்தத்தை உருவாக்கும் கல்விமுறை என்கிறார். குலக்கல்வித் திட்டத்தின் மறைமுகத்திட்டம் பாரம்பரிய குடும்ப அடிப்படையில் கைவினைத்தொழிலில் ஈடுபடுவது கட்டாயம் என்கிறது தேசிய கல்விக்கொள்கை. இது மறைமுகமாகக் குலத்தொழிலுக்குத் தள்ளும் ஏற்பாடு என்பதை விளக்குகிறார். இரண்டு வயதில் கல்வி, 10 வயதில் ராணுவம் என்கிற முசோலினியின் பாசிச கல்விக்கொள்கையின் அப்பட்டமான பிரதியெடுப்புதான் புதிய கல்விக்கொள்கை என்கிறார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சதி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வியில் தமிழ்நாடு அடைந்துள்ள சாதனை இலக்கி னைத் தடுத்து நிறுத்தி, முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற ஏற்பாடுதான் தேசிய கல்விக்கொள்கை என்பதைத் தரவுகளு டன் விளக்குகிறார் ஆசிரியர். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளை ஊக்குவிக்கவேண்டிய ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளை மட்டும் பாலூட்டி, சீராட்டி வளர்ப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.
இந்தி பேசும் மாநிலங்களில் பெரும்பாலும் ஒரு மொழிக்கொள்கை மட்டும் உள்ள நிலையில், தமிழ்நாடு ஏன் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்ற நியாயமான வாதத்தை முன்வைக்கிறார். பெண்கள் குறித்து விரிவான பார்வையற்ற தேசிய கல்விக்கொள்கை, பொது வாக மாணவர்கள் என கடந்து போவதை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழ்நாட்டின் உறுதியான எதிர்ப்பு தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் கல்விக்கட்டமைப்புகளை இடித்து தரைமட்ட மாக்கிவிட்டு, அதே இடத்தில் மீண்டும் கமலா லயங்களைக் கட்டி எழுப்பும் பாஜகவின் திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஓங்கி ஒலித்துள்ளார் நூலாசிரியர். சமஸ்கிருத மோகம் சமஸ்கிருதமே இந்தியாவின் அறிவுப் பொக்கிஷம்; சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்ட படைப்புகளே இந்திய மரபு; சமஸ்கிருத மொழியில் எழுதியவர்களே அறிவு ஜீவிகள் என்கிறது தேசிய கல்விக்கொள்கை என்பதை நுணுக்கமாக ஆய்ந்து பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். ஆசிரியர் நலனுக்கு எதிரான கொள்கை ஆசிரியர் நலனுக்கு எதிரானது தேசிய கல்விக்கொள்கை என்பதை ஆய்ந்து விளக்கி யுள்ளார்.
ஆசிரியர்களை எந்த உரிமையும் அற்ற உழைப்பாளர்கள் என தேசிய கல்விக் கொள்கை மாற்றுகிறது; தன்னார்வலர்கள் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ்-காரர்களை கல்விக்கூடங்களுக்குள் நுழைக்கும் முயற்சியே தேசிய கல்விக்கொள்கை என்கிறார் ஆசிரியர். நிதி ஒதுக்கீட்டில் ஏமாற்றுவித்தை 2025-2026ல் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ஒதுக்கியது ரூ.46,767 கோடி. இந்தியா முழுமைக்கும் ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.78,572 கோடி என்ற புள்ளிவிவரத்தைச் சுட்டிக்காட்டி கல்விக்கு ஒன்றிய அரசு எவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கு கிறது என்பதைக் கவனமாகப் பதிவு செய்துள் ளார் நூலாசிரியர். ஜனநாயக விரோத செயல்பாடு கொரோனா பெருந்தொற்று காலத்தில் சந்தடி சாக்கில் தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய பாஜக அரசு புகுத்தியது. தேசிய கல்விக் கொள்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படவே இல்லை. எந்த ஒரு மாநிலமும் தனக்கான தனியாக ஒரு கல்விக்கொள்கையை உருவாக்காத நேரத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் உருவாக்கியதைப் பெருமையாகக் கூறுகிறார் நூலாசிரியர். ஒரு இனத்தை அழிக்க வேண்டு மென்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்கிற பாசிச, நாசிச சித்தாந்தம் தேசிய கல்விக்கொள்கையில் புதைந்து கிடப்பதை நூலாசிரியர் அம்பலப்படுத்தி யுள்ளார். பொய்யான பெருமைகள் எப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்டது தேசிய கல்விக்கொள்கையெனக் கூறிவிட்டு, அதன் குறைந்தபட்ச நேர்மையைக்கூட தேசிய கல்விக்கொள்கை கொண்டிருக்கவில்லை என்பதை அம்பலப்படுத்துகிறார்.
உலகில் எந்த நாட்டிலும் நாடு முழுமைக்குமான ஒரே கல்விக்கொள்கை கிடையாது என்பதை நாடுகளைப் பட்டியலிட்டுச் சொல்கிறார். மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்ததோடு, பொதுப்பட்டியலிலிருந்து மத்தியப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டுவிட்டது என்கிற மாயாஜால தோற்றத்தை உருவாக்குகிறது பாஜக அரசு என்கிறார் நூலாசிரியர். மையப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பு 12ம் வகுப்பு முடிந்து உயர்கல்விக்குச் செல்ல தேசிய தேர்வு முகமையின் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே கல்லூரிக் கல்விக்குச் செல்லமுடியும்; மையப்படுத்தப்பட்ட மதிப்பீட்டுமுறை உலகில் எங்குமே இல்லை என்கிறார் நூலாசிரியர். மும்மொழிக்கொள்கையின் பதுங்குக்குழி மூன்று விரல்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என நம்பவைத்துவிட்டு, சமஸ்கிருத விரலை மட்டும் தனியே நீட்டுகிறது தேசிய கல்விக்கொள்கை. இதுதான் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில், தேசிய கல்விக்கொள்கை வெட்டிவைத்திருக்கும் பதுங்குக்குழி என அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.
தனியார்மயமாக்கலின் ஆபத்து 2020ம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு உ.பி. உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் 63 சதவீதம் பள்ளிகளை மாநில அரசுகளே நடத்திக்கொண்டிருந்தன. இப்போது ஏறக் குறைய 64 சதவீதம் பள்ளிகள் அங்கு தனியார்மயமாக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் தேசிய கல்விக் கொள்கை அமலானால் எந்தளவுக்குக் கல்வி தனியார்மயமாகும் என்பதன் ஆபத்தை விளக்குகிறார். சமூகநீதி விரோத நிலைப்பாடு “எல்லோரையும் சமமாக நடத்துவதால் மாணவர்களின் தனிப்பட்ட திறமைக் கான வாய்ப்புகள் நமது கல்விமுறையில் கிடைப்பதில்லை” என தேசிய கல்விக்கொள்கை யின் தலைவர் கூறுவதிலிருந்து தேசிய கல்விக்கொள்கை எந்தளவுக்குச் சமூகநீதிக்கு எதிரானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சமஸ்கிருத திணிப்பு எந்த மொழியைப் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் என்றார்களோ, இன்றைக்கு அந்த மொழியையே நம் கல்விக்கூடங்களுக்குள் திணிக்கிறார்கள் என்று சொல்லும் நூலாசிரியரின் கூற்று கவனிக்கப்படவேண்டியதாகும்.
எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக எல்லோரும் படிக்கக்கூடாது என்பதுதான் தேசிய கல்விக்கொள்கை. 135 பக்கங்களில் கருத்துச்செறிவுள்ள படங்களுடன்; வேதகாலத்திற்கு மாணவர்களை இழுத்துச்செல்லும் தேசிய கல்விக்கொள்கையின் ஆபத்தினைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும், படம்பிடித்துக் காட்டுகிறது ‘தேசிய கல்விக்கொள்கை 2020 எனும் மத யானை’. படிக்கவேண்டும்; பாதுகாக்கவேண்டும். இந்தியாவில் உள்ள எந்த மாநில கல்வியமைச்சரும் தேசிய கல்விக் கொள்கையின் அநீதிகளை விளக்கி இப்படி யான நூலை எழுதவில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆயிரம் பணிகளுக் கிடையில் இந்த அருமையான நூலைப் படைத்தமைக்குத் தமிழக மக்கள் சார்பில் சபாஷ் போடலாம். ‘தேசிய கல்விக்கொள்கை-2020’ எனும் மத யானை ஆசிரியர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிப்பகம்: அன்பில் பதிப்பகம் பக்கங்கள்: 136 விலை: ரூ.300