யெச்சூரியின் குரல் எதிரொலிக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தல்
2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது, வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, வன உரிமைகள் மசோதா, தகவல் அறியும் உரிமை மசோதா உள்ளிட்ட பல மக்கள் நலச் சட்டங்கள் இடதுசாரிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை இடதுசாரிகளின் கடினத்தன்மை யாகச் சித்தரித்தபோது, அப்போதைய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியிடம், ‘அமைச்சர் பதவி வழங்கப்பட்டும் ஏற்காததால் உங்களுக்கு என்ன பயன்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
யெச்சூரி வழக்கமான புன்னகையுடன் அளித்த பதில்: “2004 ஆம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சி செய்தது வரை, இந்தியாவின் அரசியல் விவாதம் வகுப்புவாதம், மதவெறி போன்ற விஷயங்களால் நிரம்பியிருந்தது. அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, ஏழைத் தொழிலாளர்களின் ஊதியம், பழங்குடியினருக்கு வன நிலம் பெறுதல், ஊழ லைத் தடுக்கும் வழிகள் பற்றி நாடு விவாதிக்கிறதா? அதுதான் நாம் எதிர்பார்க்கும் நன்மை.” தற்போது, 2025 உள்ளாட்சித் தேர்தல்களின் பின்னணியில், கேரளாவில் விவாதிக்கப்படும் தீவிர வறுமை ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களுடன் யெச்சூரியின் இந்தப் பதிலையும் இணைத்துப் பார்க்கும்போது, மதவெறி, வகுப்புவாத சக்திகள் காலூன்ற முயற்சிக்கும் ஒரு சமூகத்தில் கூட, இடதுசாரிகளின் மக்கள் சார்பு நிகழ்ச்சி நிரல்கள் வலுவாக முன் னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. முதல் மற்றும் இரண்டாவது பினராயி விஜயன் அர சாங்கங்களின் முக்கியச் சாதனையும் இதுதான். வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் செல்வாக்கு கேரளத்தில் ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கம், உறுதியான நம்பிக்கை யுடன் ஒரு தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பதுதான் இந்தத் தருணத்தில் முக்கியமான விஷயம்.
சந்தேகத்துக்கு இடமின்றி, இது ஆளும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு உணர்வின் சுவடு கூட இல்லாத ஒரு தேர்தலாக உள்ளது. அதைக் களத்தில் பார்க்க முடிகிறது. அதிகாரப் பரவலாக்கம், தீவிர வறுமை ஒழிப்பு, சமூக நல ஓய்வூதியத்தை ரூ. 2000 ஆக உயர்த்துவது உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் அனைத்து மட்டங்களிலும் மைய மாக உள்ளன. நல்ல சாலைகள், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் சிறந்து விளங்குதல், நல்ல சமூகச் சூழல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தேர்தல் பிரச்சார அரங்கத்தை நிரப்பி வருகின்றன. இந்த அரசாங்கத்தின் சாதனைகளால் பிரச்சாரக் கருப்பொருள்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பது தெளிவாகிறது. யுடிஎப்-இன் தடைகள் இடதுஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசாங்கம் அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் உள்ளது என்ற செய்தி அனைவரையும் சென்ற டைந்துள்ளது. இதனுடன், கடந்த காலத்தில் 18 மாதங்களாக ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மீதான அமைதியான அதிருப்தியும் மக்களிடம் நிலவுகிறது. தற்போது, 35 முதல் 60 வயதுக்குட்பட்ட, முன்னுரிமைப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு மகளிர் பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சியில் யுடிஎப் இறங்கியுள்ளது. யுடிஎப் தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிராக மாநில தேர்தல் ஆணையரி டம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு எப்படித் தடை கோர முடியும்? எனவே இது, யுடிஎப்-இன் உள்நோக்கத்தை, செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. லைப் திட்டத்திற்கு எதிராக யுடிஎப் லைப் திட்டத்தின் கீழ், கேரளாவில் ஒன்பது ஆண்டுகளில் வீடற்றவர்களுக்கு 4,71,442 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது எல்.டி.எப் ஊழியர்கள் இதைப் பற்றி வாக்காளர்களிடம் கூறும்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் லைப் திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2021ஆம் ஆண்டு யுடிஎப் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஹசன் அறிவித்த தை சாமானிய மக்கள் இயல்பாகவே நினைவில் கொள்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், கோவிட் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிட் விநியோகம், ஓய்வூதிய விநியோகம் மற்றும் அரிசி விநியோகம் ஆகியவற்றை நிறுத்துமாறு யுடிஎப் தலைவர்கள் ஆணையத்தில் புகார் அளித்ததை கேரள மக்கள் மறக்கவில்லை. 2021 கோவிட் காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, ஈஸ்டர், விஷு மற்றும் ரம்ஜான் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு 50 லட்சம் குடும்பங்களுக்கு கிட் விநியோகத்தை எதிர்த்து தேர்தல்
ஆணையத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎம் மாநிலம் முழுவதும் 1947 வீடுகளைக் கட்டியுள்ளது. வாலிபர் சங்க ஊழியர்கள் ‘ஆக்ரி’ விற்பனையில் திரட்டிய ரூ.20 கோடியைப் பயன்படுத்தி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வீடுகள் கட்டும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆனால், மறுபுறம் இளைஞர் காங்கிரஸ் சேகரித்த கோடிகள் எங்கே போயின என்ற கேள்விக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பதில் இல்லை.ஊழல், பாலியல் வன்கொடுமைகள் நிறைந்த யுடிஎப் ஆட்சியை ஒப்பிடும்போது, வளர்ச்சி மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி வலுவான நிலையில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) உள்ளது. - தமிழில் சி.முருகேசன்
