இந்தியாவின் முதல் அச்சு இயந்திரம் பொறையாறின் வரலாற்றுப்பெருமை
இந்தியாவிலேயே முதன் முதலாக இயந்திரம் மூலம் காகிதம் கொண்டு நூல்களை அச்சடித்து தந்தது பொறையார். கடுதாசிப்பட்டறை-காகித ஆலை-மை தயாரிக்கும் கூடமும் இங்கே தான் முதன் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு மேற்கே சுமார் 1கி.மீதொலைவில் அமைந்துள்ள சிறியநகரம் தான் பொறையார். தரங்கம் பாடிக்கும் பொறையாறுக்கும் மிக நீண்ட வர லாற்றுத் தொடர்புடைய நெருக்கம் மிக அதி கம். 16 ஆம், நூற்றாண்டு முதல் தரங்கம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய டேனிஷ்காரர்களின் அலுவலகம் மற்றும் ஆளுநர் மாளிகைநிர்வா கம் தொடர்புடைய பணிகளில் வேலை செய்த பலரும் பொறையாரில் வசித்ததாகக் கூறப்படு கிறது. அதற்கான வரலாற்றுப் பதிவுகளும் ஏராள மாகவே உள்ளன. ஆசியாவில் இரண்டாவது சீர்திருத்த லுத்தரன் திருச்சபையான (புராட்டஸ்டாண்டு) 1746 இல் கட்டப்பட்டு 280 ஆண்டுகள் பழமையான பெத்லகேம் ஆலயம் அமைந்துள்ள பெருமையும், அந்த ஆலயத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மிஷனரிகள் அடக்கம் செய்யப்பட்ட கலை நுணுக்கமான கல்லறைக் கட்டடங்களும் அதிக அளவில் இருப்பதை தற்போதும் காண முடிகிறது. கப்பல் மூலம் அச்சு எழுத்துக்கள் வரவழைப்பு 1706 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன் பால்கு பொறையாரில் உள்ள ஒரு கிராமமான இன்றளவும் “கடுதாசிப்பட்டறை” என்று அழைக்கப்படுகிற இடத்தில் தான் இந்தியாவி லேயே முதன்முறையாக இயந்திரம் மூலம் அச்சடிக்கக்கூடிய அச்சகத்தை அமைத்தார். அதே இடத்தில் காகித ஆலையையும், மை தயா ரிக்கும் கூடத்தையும் அமைத்துள்ளார். 1710 இல் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹாலி என்னும் இடத்தில் சதுரநிலைக்குத்தலான அச்சு எழுத் துக்களை வடிவமைத்து கடுதாசிப்பட்டறைக்கு கப்பல் மூலம் வரவழைத்தார். அந்த எழுத்துக்கள் அச்சுக்கு ஏற்றதாக இல்லாததால் 1713 இல் பொறையாரில் தரங்கம்பாடியில் வசித்த பொற்கொல்லர்களை (இன்றும் தரங்கம்பாடியில் பொற்கொல்லர் தெரு உள்ளது) வைத்து பித்தளையில் ஆன அச்சு எழுத்துக்களை வடிவமைத்துள்ளார். அதன் பின்னர் 1715 இல் முதன்முறையாக இந்திய மொழிகளிலேயே தமிழில் கிறிஸ்த வர்களின் புனித நூலான பைபிளை (புதிய ஏற்பாடு) அச்சடித்து வெளியிட்டார். தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பி யம், ஆத்திச்சூடி, கொடுந்தமிழ் அகராதி, இஸ்லா மிய, இந்துக்களை பற்றிய நூல்கள் பல்வேறு சமய கடவுள்களின் வரலாறு, தமிழ் பஞ்சாங்கம், தமிழ் காலண்டர், நீதிவெண்பா, 70 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட தமிழ்அகராதியை அச்சடித்து வெளியிட்டார். மலபாரிகளின் தத்துவ வேதாந்தங்கள் (மலபார் என்பது அக்காலத்தில் மேற்கு பகுதியையும், கிழக்குப் பகுதியையும் உள்ளடக்கிய தமிழகத்தை குறிக்கும்) உள்ளிட்ட ஏராளமான நூல்களை காகிதத்தில் அச்சடித்து தமிழிலேயே வெளியிட்ட பெருமை பொறையாருக்கு உண்டு. கடுதாசிப்பட்டறை இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய பொறையாரில் சீகன்பால்குவால் தொடங்கப் பட்ட அச்சுத் தொழில், 1715 இல் பொறையார் கடுதாசிப் பட்டறையில் அச்சகத்தை தொடங்கிய பின்னர், சில காலங்களிலேயே பொறையார் நகரத்தில் ஏராளமான அச்சகங்கள் தொடங்கப் பட்டு இயங்கி உள்ளன. 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திற்கு முன்னரே டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலி ருந்து பிரிண்டிங் மிஷின்கள் கடல்வழி மார்க்க மாக வரவழைக்கப்பட்டு ஏராளமான அச்சுக்கூடங்கள் தமிழர்களால் பொறையாரில் செயல்படுத்தப்பட்டது பெருமைக்குரியதாகும். பொறையாரில் அச்சக தொழில் சிறப்பாக நடைபெற்று வந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தென் மாநிலங்களில் படிப்படியாக அச்சுத் தொழில் வளர்ந்ததாக கூறப்படுகிறது. பொறையாரில் அதிகம் செய்யப்பட்ட நெசவுத் தொழிலுக்கு நிகராக 18 ஆம் நூற்றாண்டில் அச்சுத்தொழிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. தரங்கம்பாடி வணிக மையமாகவும், மாவட்டத் தலைநகராகவும் இருந்ததால் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இருந்ததால் அவைகளுக்கு தேவையான பிரிண்டிங் வேலைகள் பொறையாரில் செயல்பட்டு வந்த அச்சகங்களின் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சி III பக்கம் பார்க்க...I ஆம் பக்கத் தொடர்ச்சி பயணச்சீட்டுக்கள், திரைப்படபோஸ்டர்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேருந்து வசதிகள் வந்த பிறகு பொறை யாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சக்திவிலாஸ் போக்குவரத்து நிறுவனத்தின் 60க்கும் மேற்பட்ட பேருந்து களுக்காக பயணச்சீட்டு மற்றும் இதர பிரிண்டிங் வேலைகளுக்கு அச்சகங்களை பயன்படுத்திக்கொண்டதால் அச்சுத் தொழில் ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்தது. அதை தொடர்ந்து பொறையார், தரங்கம்பாடி, மயி லாடுதுறை, ஆக்கூர், காட்டுச்சேரி, சங்கரன் பந்தல், பெரம்பூர், செம்பனார் கோவிலில் இயங்கி வந்த திரையரங்குகளுக்கான திரைப்பட போஸ்டர்கள், டிக்கெட்டுகள் போன்றவற்றை அச்சடிப்பதற்காக அச்சகத்தை நாடியதால் நலிவின்றி அச்சுத்தொழில் நடைபெற்று வந்தது. படிப்படியாக ஏற்பட்ட கால முன்னேற்றம் காரணமாகவும் நவீன அச்சு இயந்திரங்க ளின் வருகையாலும் பழமையான அச்ச கங்கள் மூடப்பட்டன. திரையரங்குகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டதால் அச்சுத் தொழிலைமட்டுமே நம்பி தொழில் செய்து வந்தஅச்சக உரிமையாளர்கள் அதில் பணியாற்றிய ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேறு தொழிலை கற்றுக் கொண்டு அதை நாடிச் சென்றுவிட்டனர். தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பழமை யான அச்சு எந்திரங்களை எடைக்கு விற்று விட்டனர். இருந்த போதிலும் தற்போது ஓரிரு அச்சகங்களை மட்டும் பொறையார் பகுதி யில் காண முடிகிறது. நீதி அச்சகம் சீகன்பால்கு கற்று தந்த அச்சுத் தொழிலை பொறையார் பகுதி இன்றள வும் மறக்காமல் இருப்பதற்குச் சான்றாக, அடையாளமாக 17, 18, 19 ஆம் நூற்றாண்டு களில் பயன்படுத்திய வெளிநாட்டு பிரிண்டிங் மிஷின்களை இன்றளவும் பணிகளுக்கு பயன்படுத்தி அதனை பாதுகாத்து பாரம்பரிய அச்சுத்தொழிலை நடத்தி வருகிறது. பொறை யார் நீதி அச்சகம் சண்முகம், சிவக்குமார், சதீஷ் ஆகியோர் அதனைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். “எங்கள் தாத்தா காலம் முதல் தலை முறை தலைமுறையாக அச்சுத்தொழிலை செய்து வருகிறோம். பூர்வீக நிலத்தை விற்று எங்களது தந்தை அச்சகத்தை 1958 இல் வாங்கியுள்ளார். கணினி மயமான இந்த காலத்தில் பழமையான பலநூறு ஆண்டு களைகடந்த எந்திரங்களை சலிப்பின்றி வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம்” என்கின்றனர். 1750க்குப் பிந்தையது டென்மார்க் நாட்டின் ஈகிள் மிஷின். இதில் மர எழுத்துக் களை கொண்டு பிரிண்டிங் வேலைகளை செய்யலாம். அதே போன்று 1892 ஆம் ஆண்டை சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் அல்பியன் மிஷின், அதன் பிறகு 19 ஆம் நூற்றாண்டில் வந்த டிரெடில் லெட்டர் பிரிண்டிங் மிஷின்களை வைத்துள்ளோம். இவற்றில் ஈயத்தால் செய்யப்பட்ட எழுத்துக் களை கொண்டும் அச்சடிக்கலாம். அச்சுத் தொழில் அருங்காட்சியகம் இந்த 3 வகையான பழமையான மிஷின் களை கொண்டும் தற்போது பணிகளைச் செய்து வருகிறோம். பாரம்பரிய தொழில் அழியக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். நவீன கால ஓட்டத்தால் பழமையானவைகள் தற்போது காணாமல் போய்விட்டது என கூறும்அவர் களின் பணி பாராட்டுக்குரியது. பொறை யாரில் அச்சு அருங்காட்சியகத்தை அரசு சார்பில் அமைத்தால் அதற்காக தாங்கள் வைத்துள்ள எந்திரங்களை தருவதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறு கின்றனர். சீகன்பால்கு மணிமண்டபம் சமூக செயற்பாட்டாளர் பொறையார் எர்னஸ்ட் நெல்சன் நம்மிடம் பேசிய போது..... ஜெர்மனி நாட்டிலிருந்து வந்து மொழி தெரியாமல் கலாச்சாரம் தெரியாமல், 13 ஆண்டுகளே இங்கு வசித்து தமிழை முழு மையாக கற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை மட்டும் பரப்பாமல் அனைத்து மதங்களை யும் சமமாக நினைத்து சாதிக்கொடுமை களை எதிர்த்து, பல்வேறு சமூக சீர்திருத்தங்க ளையும் தரங்கம்பாடி மற்றும் பொறையார் பகுதிகளில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியதோடு தமிழ்மொழியே எனக்கு தாய்மொழி என பெருமையுடன் கூறி அதை பதிவு செய்த, தமிழ்மொழிக்காக உழைத்த சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 300ஆவது ஆண்டான 2006 இல் அப்போதைய ஒன்றிய அரசு இந்திய அச்சகத் தந்தை என சீகன்பால்குவை புகழ்ந்து தபால் தலை வெளியிட்டது. அதன்பிறகு அவர் வாழ்ந்த பகுதி யில்அவரது நினைவை போற்றும் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்ற நீண்டக் கால கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு தமிழறிஞர் சீகன்பால்கு வுக்கு சிலை யுடன் கூடிய நினைவரங்கத்தை அமைக்க வுள்ளதை நன்றியுடன் வரவேற்கின் றோம். அதே நேரத்தில் பொறையாரில் அச்சுத்தொழிலை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அச்சுத் தொழில் பற்றிய அருங்காட்சியகத்தை அமைப்பதோடு கடுதாசிப் பட்டறை கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு சிறப்பு நலத்திட்டங்களை செய்ய வேண்டுமென கூறினார். பாரம்பரியத் தொழிலான அச்சுத்தொழிலை பாதுகாக்க, பழைய வரலாறுகளை உருவாக்கிய இதுபோன்ற அச்சு இயந்திரங்களை எதிர்கால சந்ததி யினர் அறிந்துகொள்வதற்கு பழைய அச்சக எந்திரங்களின் அருங்காட்சியகத்தை அமைத்தால் பொறையாரின் வரலாற்றுப் பக்கங்கள் இன்னும் இன்னும் கூடுதலாகும்..!
