காசா இனப் படுகொலைகள் மக்களின் மனசாட்சி விழிக்கட்டும்
மானுட சமூகத்தின் கண்ணெதிரே “நேரலை இனப்படுகொலை” நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 66,000 மனித உயிர்களைக் கொன்றுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தையின் உயிரை பறித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் இனவெறி அரசு. எங்கிருந்து தொடங்குகிறது? பாலஸ்தீன மக்களின் நூற்றாண்டு வரலாற்றை மேலோட்டமாக பார்த்தால் கூட உயிர் வாழ்வதற்கு எந்த ஒரு தேசமும் இப்படிப்பட்ட கொடுமையை எதிர் கொண்டு இருக்காது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திட்டமிட்டு வளர்த்தெடுத்த சியோனிச இனவெறி (யூத இனவெறி) பாலஸ்தீனத்தின் அழிவுக்கு அடித்தளமிட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக முதலா ளிகளின் அடியாளாக உருவெடுத்த அமெரிக்கா, '
ஐ.நா.சபையின் துணைகொண்டு பாலஸ்தீன மண்ணைக் கூறு போட்டது. “ஓர் இன மக்களை ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்துவது, அம்மக்கள் துரத்தப்பட்ட இடத்தில் அவர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றை அழிப்பது, துரத்தப்பட்ட மக்கள் மீண்டும் அவர்களது நிலங்களுக்கு திரும்பி விடாமல் பார்த்துக் கொள்வது” என மூன்று கட்டங்களாக பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் யூத சியோனிசம் வன்முறையை நிகழ்த்தியது. இஸ்ரேல் தனக்கென்று ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்காமல், நாட்டின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்காமல் அமெரிக்க ஏகாதி பத்தியம் - பன்னாட்டு பெரு முதலாளிகளின் கூட்டத்தின் அடியாளாக இரத்த வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறது. ‘காந்தி தேசம்’ சொன்னது என்ன? பாலஸ்தீன மண்ணை, மக்களின் வாழ்வை - சூறையாடும் வகையில் ‘யூத தேசம்’ அமைக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்லி அன்றைய பிரதமர் நேருவுக்கு நெருக்கடி கொடுத்தது
அமெரிக்கா. ஐநா சபையின் இந்திய பிரதிநிதியாக இருந்த விஜயலட்சுமி பண்டிட்டை, தீர்மானத்தை ஆதரிக்க சொல்லி மிரட்டவும் செய்தது அமெரிக்கா. ஆனால் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் உறுதி யாக எதிர்த்து வாக்களித்தன. அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடி பணிந்து 33 நாடுகள் தீர்மா னத்தை ஆதரித்ததால் பாலஸ்தீனம் கூறு போடப் பட்டது. அன்றிலிருந்து இன்னும் மூர்க்கமாக சியோ னிச இனவெறி பாலஸ்தீன மக்களை அழித்தொழித்துக் கொண்டே; இஸ்ரேல் நாட்டின் எல்லைகளை விரி வடையச் செய்து கொண்டே வருகிறது. கோட்சே கூட்டத்தால் பாதை மாற்றப்பட்ட இந்தியா இந்தியா தனது விடுதலைக்கு முன்பிருந்தே பாலஸ்தீன மக்களின் இறையாண்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. ஆனால், பாஜக ஒன்றிய அரசின் அதிகாரத்தை அடைந்தவுடன் சியோனிச இனவெறிக்கு எதிராக, இஸ்ரேலின் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து உலக அரங்கில் உரத்து முழங்கி வந்த இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையை முற்றிலுமாக வேறு திசையில் பயணிக்க வைத்தது. 1998இல் வாஜ்பாய் ஆட்சியில் இனவெறி இஸ்ரேல் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றார் அமைச்சராக இருந்த அத்வானி. அடுத்து சில ஆண்டுகளில் 2001இல் அன்றைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் அரசு முறைப் பயணமாக இந்தியா விற்கு வருவதற்கு இரத்தின கம்பளம் விரித்தார் பிர தமர் வாஜ்பாய். இஸ்ரேலியக் கார்ப்பரேட் முதலா ளிகள் இந்திய மண்ணில் வர்த்தக விளையாட்டை முன்னெ
டுப்பதற்கான வலுவான அடித்தளம் உற்சா கமாக உருவாக்கப்பட்டது. 2014இல் பிரதமர் மோடி, காசா மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த இரத்த வெறி பிடித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை ஐநா சபை கூட்டத்தில் கட்டிப்பிடித்து உரையாடினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2015இல் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றார். விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன மக்களின் உற்ற தோழர் இந்தியா என்ப தற்குச் சாவு மணி அடிக்கும் வகையில் 2017இல் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். இந்திய நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என அனைவரும் இஸ்ரேல் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றது பாஜக ஆட்சியில் தான். ஆர்எஸ்எஸ் இந்துத்துவா, இஸ்ரேல் சியோனிச இனவெறியுடன் இயல்பாக இணைந்ததன் விளைவாக ‘சுதந்திர பாலஸ்தீனம்’ குறித்து இந்தியா கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு எதிர்த் திசை யில் பயணிக்க ஆரம்பித்தது. மேலும், இந்தியா - இஸ்ரேல் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் கொள்ளை யடிப்பதற்கு முழு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலின் இனவெறிப் போரை எதிர்க்கா மல் ஐநா சபையில் மவுனம் காத்தது இந்திய அரசு. மனித இரத்தத்தில் கொழிக்கும் கார்ப்பரேட்டுகள் வயிற்றுப்
பசிக்கு உணவு கிடைக்காமல், உயிர் வாழ்வதற்கு இடம் இல்லாமல் இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் காசா மக்க ளுக்கு ஆதரவாக உலக மக்கள் போராடிக் கொண்டி ருக்கின்றனர். இந்திய நாட்டு மக்கள் உயிர்ப்பு மிக்க ஆதரவுக் குரலை நாடெங்கும் எழுப்பி வருகின்றனர். இஸ்ரேல் ‘காசாவில் இனப்படு கொலை’ செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை பகிரங்கமாக அறிவித்தது. ஆனால், கொடுமை என்னவென்றால் கொலைகார நாடுகளின் அலைவரிசையில் இந்தியா இணைந்து நிற்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இதற்கு அடிநாதமாய் கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் கொள்ளை லாபம் அடங்கியுள்ளது. “லாபம் மற்றும் இனப்படுகொலை - இஸ்ரேலில் இந்திய முதலீடுகள்” என்கிற ஆவணத்தை புது தில்லியைச் சேர்ந்த நிதி பொறுப்புணர்வு மையம் (Center For Financial Accountability) நிறுவ னத்தின் சார்பில் ஹாஜிரா புத்கே என்பவர் 2025இல் செப்டம்பரில் வெளியிட்டுள்ளார். இதில் இந்திய நிறுவனங்கள் இஸ்ரேலில் செய்துள்ள சுயமான முதலீடுகள், இஸ்ரேலுடன் இணைந்து செய்துள்ள முதலீடுகள் மற்றும் இஸ்ரேல் அரசு இந்தியாவில் செய்துள்ள முதலீடுகள் குறித்து விரிவாக பட்டிய லிடப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் பாதுகாப்பு,தொழில்நுட்பம், விவ சாயம், கல்வி, சுகாதாரம், காப்பீடு, போன்ற பல்வேறு துறைகளில் அதானி, அம்பானி, டாட்டா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், இன்போசிஸ், ஜெயின் ஆகிய நிறு வனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்திய கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் மட்டு மல்ல,
உலக முதலாளிகள் பாலஸ்தீன மக்களின் இரத்தத்தில் காசு பார்க்கும் வக்கிர வெறியை அப்பட்டமாக தோலுரித்துக் காண்பித்துள்ளார் பிரான்செஸ்கா ஆல்பனீஸ் என்கின்ற மனித உரிமை செயல்பாட்டாளர். இவர் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் மேற்கொண்டுவரும் இனப் படுகொலைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்துள்ளார். “ஆக்கிரமிப்பு பொருளாதாரம் முதல் இனப்படுகொலை பொருளாதாரம் வரை” (Ecomomy of Occupation to Economy of Genocide) என்கிற அறிக்கையில் பாலஸ்தீன மண்ணில் இரத்த ஆறு ஓடுவதற்கு காரணமாக உள்ள அமே சான், கூகுள், மைக்ரோசாப்ட், பிளாக் ராக், கேட்டர் பில்லர் உள்ளிட்ட ஆயிரம் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்க ளை ஆளுகின்ற அரசுகளோ அந்தந்த நாட்டில் போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆயுதங்களை இஸ்ரேல் நாட்டிலிருந்து பெறுவதற்கு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஜெர்மனி 350 மில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலின் ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. மரண வியாபாரிகளுக்கு எதிராக போராட்டம் இந்நிலையில், “காசா மீதான இனப்படு கொலையை நிறுத்து” என்ற முழக்கம் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இனப்படு கொலைக் குற்றவாளி நேதன்யாகு ஐ.நா. அவையில் காலி இருக்கைகளுக்கு முன் பேச வேண்டிய சூழலை உலக மக்களின் போராட்டம் உருவாக்கி யுள்ளது. “சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்” எனும் உரிமை முழக்கம் இந்திய நாடு எங்கும் ஓங்காரமாய் ஒலிக்கிறது. இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், மானுடப் பற்றாளர்கள் வீதியில் போராடுகின்றனர். நாடெங்கும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. “அப்பாவி மனித உயிர்கள் இப்படிக் கொல்லப் படும்போது, மவுனமாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க
முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதி யான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூ ரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களும் காசா மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளார். காசா இனப்படுகொலைக்கு எதிராக நாடெங்கும் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை யில் அக்டோபர் 8 (இன்று) மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கங்களின், மக்கள் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் போராட்டம் எழுச்சியோடு நடைபெற உள்ளது. காசா இனப்படுகொலையை உடனே நிறுத்து! சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்!! இஸ்ரேல் இனவெறி அரசுடன் இந்தியா மேற் கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்!! முழக்கங்கள் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்! பாலஸ் தீன மண்ணில் அமைதி தழுவட்டும்! இனவெறி கோட்பாடுகள் மடியட்டும்! மானுடம் தழைக்கட்டும்!!