மயிலாடுதுறையில் சாதி ஆணவப் படுகொலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
சென்னை, செப். 16 - மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ள சாதி ஆணவப் படுகொலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 10 ஆண்டுகளாக காதல் மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்தவர் தோழர் வைர முத்து. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டாரத் துணை தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவரும், அதேபகுதியில் வசித்து வரும் மாலினி என்பவ ரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள னர். ஆனால், இவர்களது காதலை அறிந்த மாலினியின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு வருடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடு களைச் செய்துள்ளனர். காவல்துறை முன்பே கொலை மிரட்டல் இந்நிலையில் வைரமுத்துவும், மாலினி யும் சந்தித்த போது மாலினியின் சகோதரர்கள் குணால் மற்றும் குகன் ஆகியோர் வைர முத்துவைக் கடுமையாக தாக்கியுள்ளனர். மாலினி யின் தாயார், வைரமுத்து பணி செய்யும் இடத்திற்கே சென்று அவரைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் முறை யாக புகார் தரப்பட்டுள்ளது. இப்புகாரை விசாரித்த காவல்துறையினர், வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்பாகவே வைரமுத்துவை, “நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம்” என்று மாலினியின் சகோதரர்கள் மிரட்டி விட்டு சென்று உள்ளனர். அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை அதைத்தொடர்ந்து, 15.9.2025 அன்று இரவு சுமார் 10:30 மணி அளவில் வைரமுத்து, பணி களை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, அவரை வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன், குணால் ஆகிய இருவரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வைரமுத்துவை வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்து உள்ளனர். மாலினியின் தாயார் தனது மகளை தனது சொந்த சாதியில் திருமணம் செய்து வைப்ப தற்கு முயன்றுள்ளார். அதற்கு வைரமுத்து இடையூறாக இருக்கிறார் என்பதால் அவரை கொலை செய்ய தனது மகன்களை தூண்டி விட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூரமான படு கொலை அரங்கேறியுள்ளது. காவல்துறை மெத்தனத்தால் மீண்டும் ஒரு உயிர் போனது வைரமுத்து, மாலினி ஆகியோரின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாத மாலினியின் சகோ தரர்கள் குகன் மற்றும் குணால் ஆகியோர், காதல் தம்பதியை காவல்துறையினர் முன்பாகவே பகிரங்கமாக மிரட்டிய நிலையில் கடுமை யான நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறிய தாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க மறுத்ததாலும் மேலும் ஒரு சாதிய ஆணவப்படுகொலை தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு காவல்துறையின் மெத்தனப் போக்கு கடுமையான கண்டனத்துக்குரியது என சுட்டிக்காட்டுவதோடு, இக்கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தை யாக இருந்தவர்கள், அனைவரையும் உடனடி யாக கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும், படு கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பம் திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தனிச்சட்டம் கொண்டுவர வலியுறுத்துகிறோம் மேலும் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சாதிய ஆணவப்படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.