articles

img

அதானியை விமர்சிப்பதால் ஆத்திரம் ஊடக சுதந்திரத்துக்கு சாவுமணி - ச.வீரமணி

அதானியை விமர்சிப்பதால் ஆத்திரம் ஊடக சுதந்திரத்துக்கு சாவுமணி

இந்தியாவில், விசித்திரமான நிகழ்ச்சிகள் மிகவும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதால், அவை முன்புபோல மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை. குடிமக்களின் கருத்து கூறும் உரிமையைப் பாதுகாத்து,  அரச மைப்புச்சட்டத்தின் 19ஆவது பிரிவு ஏற்றுக்கொள்ளப் பட்டபிறகு அது மிகவும் உயிர்த்துடிப்புடன் இருந்த சமயத்தில்,  இது வியக்கத்தக்க ஒன்றாக மாறி இருந்தது. இவ்வாறு குடிமக்களின் உரிமைகள் உறு திப்படுத்தப்பட்டதற்காக இந்திய அரசமைப்புச்சட்டம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இது நம் நாட்டிற்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக பதவிக்கு வந்தபிறகு நிலைமைகள் மாறிவிட்டன. குறிப்பாக ஊடக உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது.

அதானியின் அவதூறு வழக்கில் நீதிமன்றம் - ஒளிபரப்பு அமைச்சகத்தின் அசாதாரண நடவடிக்கைகள்

அதானி குழுமத்தைக் குறித்து அவதூறாக விமர்சனங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் இரண்டு ஊடக நிறுவனங்கள் மற்றும் பல யூடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, 138 வீடியோக்கள் மற்றும் 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்க உத்தர விட்டிருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், வடமேற்கு தில்லி மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 6 அன்று பிறப்பித்த தீர்ப்பை இந்த உத்தரவு மேற்கோள் காட்டியது. மனித உரிமை  மீறல்கள் தொடர்பான வழக்குகளில் அரிதாகவே காணப்படும் அசாதாரணமான தீவிரத்துடன் அரசாங்கம் செயல்பட்டிருக்கிறது. அதானி குழுமம் குறித்து விமர்சனங்களைச் செய்த இதழாளர்கள் மற்றும் இணையதளங்களிடம் எவ்வித மான விசாரணையையுமே மேற்கொள்ளாமல் மாவட்ட நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான முறையில் அவர்க ளைத் தண்டித்து  ஆணை (ex parte order) பிறப்பித்தி ருக்கிறது. இதற்கிடையில் அதானி குழுமம் இந்தியப் பங்குச்சந்தையில் செய்துள்ள கடுமையான தவறுகள் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோ திலும்கூட இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI-Securities and Exchange Board of India),  அதானி குழுமம் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று அறிவித்துள்ளது. அரசின் சார்பில் நியூஸ்லாண்ட்ரி, தி ஒயர் மற்றும் இதழாளர்கள் ரவிஷ்குமார், அஜித் அஞ்சும், துருவ ரதீ, ஆகாஷ் பானர்ஜி, பரஞ்சோய் குஹா தாகுர்தா  முதலானவர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டி ருந்தபோதிலும், அவர்களில் எவரும் அதானி குழுமம் தொடர்பாக தாங்கள் கூறிய விமர்சனங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் விமர்ச னங்கள் குறித்து உறுதியாக உள்ளார்கள். கார்ப்பரேட் -மதவெறிக் கூட்டணி உறவு இப்படித்தான் செயல்படும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

ஊடகங்களின் சுதந்திரம், பன்முகத்தன்மைக்கு சாவுமணி

இதை முழுமையாகப் புரிந்து கொள்ள, இந்தி யாவின் ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்க ளை சற்றே கூர்ந்து கவனிக்க வேண்டும். 2022 டிசம்பர் 30 அன்று கடன் ஒப்பந்தத்துடன் தொடர்பு டைய கையகப்படுத்தல் பிரிவைப் பயன்படுத்தி அதானி, என்டிடிவி அலைவரிசையைத் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்ட போது, இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டில் செயல்பட்டுவந்த 72 ஊடக அலை வரிசைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தன்னுடைய ‘சர்வ-அலைவரிசை இருப்பை’ (‘omni-channel presence’)ப் பெருமையுடன் விளம்ப ரப்படுத்தியதைப் பார்த்தோம். இவ்வாறு நாட்டின் பெரும்பாலான ஊடகங்களைக் கார்ப்பரேட்டுகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதுடன், தாங்கள் ஜோடிக்கும் கதைக ளையே ஊடகங்களில் ஒளிபரப்புவதன் மூலமாக இந்திய ஊடகங்களிடம் இருந்துவந்த பன்முகத் தன்மைக்கும்,  சுதந்திரமான தலையங்கங்களுக்கும் சாவுமணியும் அடித்துள்ளன. இந்தியா இப்போது உலகின் மிகப்பெரிய ஊடகச் சந்தையாக உள்ளது. 189 மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளில் வெளியிடப்பட்ட 22,000க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் உட்பட 1,40,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் வார, மாத இதழ்கள் உள்ளன. நாட்டில் 900க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் (சேனல்கள்) உள்ளன, அவற்றில் 350 செய்திகளுக்கு ஒதுக்கப் பட்டவைகளாகும். இவை 24x7 ஒளிபரப்பு செய் கின்றன. 850க்கும் மேற்பட்ட எப்எம் (FM) வானொலி நிலையங்களும் உள்ளன. இருப்பினும் அகில இந்திய வானொலி மட்டுமே செய்திகளை ஒளிபரப்ப அனுமதிக்கப்படுகிறது. பிராட்பேண்ட் அணுகலின் மின்னல் வேக விரிவாக்கம் டிஜிட்டல் செய்தி நிறுவ னங்களின் வேகத்தை அதிகரித்துள்ளது. பல மரபு ஊடகக் குழுக்களைச் சேர்ந்தவை என்றாலும், இந்தி யாவின் 82 கோடிக்கும் அதிகமான இணைய பயனர்க ளால் தூண்டப்பட்ட டிஜிட்டல் தளங்களின் எண்ணிக் கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒருதலைப்பட்ச உத்தரவும்  அவசர செயல்படுத்தலும்

வேகமாக மாறிவரும் இந்த ஊடகச் சூழலுக்கு எதிராக, மாவட்ட நீதிமன்றத்தின் ஒருதலைப்பட்ச உத்த ரவின் தன்னிச்சையான தன்மையையும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதை அவசரமாக செயல்படுத்தியதையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். சில காலமாக, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை கடுமை யாக்க அரசாங்கம் வேகம் காட்டி வருகிறது. கார்ப்ப ரேட்டுகளுக்குச் சொந்தமான ஊடகங்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும், சுயேச்சையான ஊடகங்களின் ஒளி பரப்புகள், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை அரசாங்கத்திற்கும் அதன் கூட்டுக்களவாணி கார்ப்ப ரேட்டுகளுக்கும் சங்கடமான நிலைமைகளை ஏற்படுத்தி அவர்களை அமைதியற்றவர்களாகச் செய்து கொண்டிருக்கின்றன.

அதானி குழுமம் மீதான விமர்சனமும் டைனிக் பாஸ்கர் ஆசிரியர் ராஜினாமாவும்

அதனால்தான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமம், பென்னட் கோல்மேன் மற்றும் லிவிங் மீடியாவின் அதிகப்படியான இருப்பு இருந்தபோதிலும் - அவற்றில் பல கையகப்படுத்தல் வெறியில் உள்ளன - சுயேச்சையான குரல்கள் தொடர்ந்து தாக்குத லுக்கு உள்ளாகின்றன. வெளிநாட்டு முதலீடு இந்தியா வின் ஊடகக் காட்சியை மேலும் மறுவடிவமைத்து, அதன் கட்டமைப்புகளில் உலகளாவிய செல்வாக் கைப் பதித்துள்ளது. இதன் விளைவாக பன்முகத் தன்மை மற்றும் தலையங்க சுதந்திரத்தை பலவீனப் படுத்தும் சிக்கலான கட்டுப்பாட்டு வலைகள் உருவாகி யுள்ளன. இந்த மாற்றங்கள் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுடன் கைகோர்த்துச் சென்றுள் ளன. 2019ஆம் ஆண்டில், அதானி குழுமத்தை விமர்சிக்கும் தொடர் அறிக்கைகளை வெளியிட்ட பின்னர் இந்தி நாளிதழான டைனிக் பாஸ்கரின் ஆசிரி யர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட தைப் பார்த்தோம்.

நவீன பாசிச பண்புகளால் சிதைக்கப்படும் ஊடக உண்மைச் செய்திகள்

இவை நவீன பாசிசப் பண்புகளால் குறிக்கப்படும் இருண்ட காலங்களாகும். இங்கே அனைத்து உண்மைச் செய்திகளும், பகுத்தறிவும் பற்பலக் கூறுக ளாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப் படுகின்றன.  தி நியூயார்க் டைம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மெரிடித் கோபிட் லெவியன், டொனால்டு டிரம்பின் 15 பில்லியன் அமெரிக்க டாலர் வழக்குக்கு நிறுவனம் “பயப்படாது” என்று ஏன் அறிவிக்க வேண்டும்? இது அவரது “பத்திரிகை எதிர்ப்பு நாட கத்தின்” ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது. “டிரம்ப்  தனது நண்பர் மோடியின் இந்தியாவின் அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறார்” என்று லெவியன் குறிப் பிட்டார். இவ்வாறு உலகம் முழுவதிலும்கூட, பத்திரிகை அடக்குமுறை வன்முறை திருப்பங்களை கொண்டுள்ளது. காசாவில், நேதன்யாகுவின் சியோ னிசப் படைகள் வேண்டுமென்றே ஊடக ஊழியர்களை குறிவைத்துள்ளன. இவற்றால் ஏற்கனவே 270 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹெர்மன், சாம்ஸ்கியின் எச்சரிக்கைகள்

மக்களின் மனதையும் நனவையும் கட்டுப் படுத்தும் ஒரு கருத்தியல் கருவியாக நவீன ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் என்று 1988ஆம் ஆண்டு எட்வர்ட் எஸ் ஹெர்மன் மற்றும் நோம் சாம்ஸ்கி கோ டிட்டுக் காட்டியதிலிருந்து இப்போது நாம் வெகு தூரம் வந்துவிட்டோம். இன்று அவர்களின் எச்சரிக்கை கள் சிலிர்க்க வைக்கும் தெளிவுடன் எதிரொ லிக்கின்றன.   இந்தியாவில் பத்திரிகைகள் சுயேச்சையான முறையில் வெளியிடும் கருத்துகள் அரசாங்கத்தின் மத்தியிலேயும், அதன் கூட்டுக்களவாணி கார்ப்ப ரேட்டுகள் மத்தியிலேயும் ஆழ்ந்த பதற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளன. சுயேச்சையான பத்திரிகையாளர்கள் செய்வதுபோல இந்த அலையை எதிர்ப்பது ஒன்றே நம்முன் உள்ள ஒரே பாதையாகும்.