articles

மணிப்பூர் வன்முறை - வினீத் கரே

மணிப்பூரில் வன்முறைகள் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகின் றன. ஆனால் மாநிலம் முழுவதுமிருந்து உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வரு கின்றன. கடந்த சில நாட்களாக நடந்துவரும் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்த வன்முறை யில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய வந்த உள்துறை அமைச்சகக் குழு, அங்குள்ள தலைவர் கள், அதிகாரிகள், அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. துக்கத்தில் இருக்கும் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெய்டெய் ஆதிக்கம் நிறைந்த அகாஷோய் கிராமத்தை அடைந்தோம். இங்கு ஜனவரி 10ஆம் தேதி கிராமத்தைச் சேர்ந்த 4  பேர் வீடு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களது உடல் அருகில் உள்ள மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த ஓனம் ரொமைன் சிங், அஹந்தேன் தாரா மெய்டெய், தௌதம் இபோம்சா மெய்டெய் மற்றும் அவர்களது மகன் தௌதம் ஆனந்த் சிங் ஆகி யோர் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்காக மரம் விற்று ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்து வந்தனர். அவர்களை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர். நாங்கள் அவர்களது வீட்டை அடைந்தபோது, ​​இறந்தவர்களின் படங்கள் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன.

தாரா மெய்டெயின் மனைவி அழுதுகொண்டே மயங்கிவிட்டார். குடும்பத்தினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். ஓனம் ரொமைன் சிங் இறந்த செய்தி வந்ததில் இருந்து, அவரது மனைவி பிரமோதினி லீமா சாப்பிடு வதை நிறுத்திவிட்டார். வீட்டில் உள்ள பொருட்க ளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த கட்டிலில் கண்க ளை மூடிக்கொண்டு படுத்திருந்தார். குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருந்தது.

இறந்தவர்களில் அவரது மருமகன் தௌதம் இபோம்சா மெய்டெய் மற்றும் பேரன் தௌதம் ஆனந்த் சிங் ஆகியோரும் அடங்குவர்.  இந்த வன்முறை கடந்த ஆண்டு மே மாதம் தொ டங்கியது. மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மெய்டெய் சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறை க்கு முக்கியக் காரணமாக எழுந்தது.

வன்முறை பயத்தின் சூழலில் தவிக்கும் மக்கள்
ஆகாஷோய் கிராமத்திற்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் ஹௌடக் தம்ஃபக்னாவ் கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு சற்று தொலைவில் மலைகள் மற்றும் மரங்கள் நிரம்பியுள்ளன. கிராமத்தில் அமைதி நிலவியது, சாலைகள் காலி யாக இருந்தன. அங்கே சில ஆண்களுடன் சுனில் மைஸ்னமைக் கண்டோம்.

குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, விவசாயத்தை நம்பி யுள்ள சுமார் 400 பேர் வசிக்கும் இந்த மெய்டெய் கிராமத்தில் 100 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்று அவர் கூறினார். “இங்கிருக்கும் பெண்கள், குழந்தைகள் அனை வரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது இங்கு ஆண்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

எங்கிருந்தோ தோட்டாக்கள் வரலாம் என மக்கள்  அச்சத்தில் உள்ளனர். நாங்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் தான் வாழ்ந்து வருகிறோம். நாங்களும் இங்கி ருந்து சென்றால் எங்கள் வீடுகளை தீ வைத்து எரித்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது,” என்கிறார் அவர். திரும்பி வரும்போது, ​​நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய வீட்டை அடைந்தோம். அங்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 45-50 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒருபுறம் மெத்தைகளும், படுக்கைக்குத் தேவை யான பொருட்களும் குவிந்திருந்தன.

சில சிறு குழந்தை கள் காலியான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த னர். அது பகல் நேரமாக இருந்ததால் அங்கே சிறிதளவு வெப்பம் நிரம்பியிருந்தது.ஆனால் இரவில் இங்கே குளிர் அதிகமாக இருக்கிறது.

நிவாரண முகாமில் கழியும் நாட்கள் 

 உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. இம்பாலில் செயல்படும் நிவாரண முகாமில் உள்ள ஒரு பெரிய ஹாலில் மற்ற குடும்பங்களுடன் வசித்து வரும் 26 வயதான மைப்ராம் விக்டோரியா சானு, சமீபத்தில் விவசாயத்தில் மேல்நிலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்த முகாமில் 79 பேர் வசித்து வந்தனர்.

குக்கி இன மக்கள் அதிகம் உள்ள சுராசந்த்பூரில் உள்ள மெய்டெய் குடும்பத்தில் பிறந்த விக்டோரியா, குக்கி மற்றும் மிசோ சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் வளர்ந்ததாகவும், ஆனால் வன்முறையில் அவரது வீடு அழிக்கப்பட்டதாகவும் கூறினார். மற்ற குடும்பங்களைப் போலவே, அவர்களின் வீட்டுப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டன. எங்களிடம் பேசிய அவர், “இது மிகவும் விசித்திர மானது. நாங்கள் இவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு எங்கள் உறவு முறிந்தது.

அவர்களும் நானும் தொடர்பு கொள்ளவில்லை. எங்களுக்கு இடையே இடைவெளி உள்ளது. இந்த தூரம் அதிகரித்து வருகிறது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை,” என்றார். ஒன்பது மாதங்களுக்கு முன்பு இந்தக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை இப்படி மாறும் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது. எங்கள் உரையாடலில், பலர் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஓய்வுபெற்ற அதிகாரியும் கட்டுரையாளருமான டாக்டர் ஆர்.கே.நிமாய் சிங், “இந்தியாவில் ஒரு வாரத் திற்கும் மேலாக இன வன்முறை தொடர்வதை நீங்கள் பார்த்தீர்களா? அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். மணிப்பூரில் மட்டும் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் வரை நீடித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது காட்டு கிறது,” என்கிறார்.

குக்கி மக்களின் நிலை என்ன?
இம்பாலில் இருந்து பல பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைக் கடந்து சுராசந்த்பூரை அடைந்தபோது, ​​அங்கு பெரும் கூட்டம் கூடியிருந்தது. பேச்சாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கருத்துக்களை மக்களி டம் எடுத்துரைத்தனர். மாநிலத்தின் பிரேன் சிங் அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதும், தனி நிர்வாகம் கோருவதும் மக்களின் கைகளில் இருந்த பதாகைகளின் மூலம் தெரிந்தது. பல மாதங்களாகியும், குக்கி மக்கள் வாழும் இந்தப் பக்கமும் வலியின் ஆழம் குறையவில்லை என்பதைக் காட்டுவதற்காக, வாரந்தோறும் இங்கு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வன்முறை தொடங்கியபோது தனது கணவருடன் இம்பாலில் லிங்னேகி லங்டின் என்பவர் வசித்து வந்தார்.

இந்த தம்பதிக்கு மூன்று நாட்களுக்கு முன் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது. மே 4 அன்று தனது கணவரும் சகோதரனும் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், மிகவும் சிரமத்து டன் தான் தப்பித்ததாகவும் துயரத்துடன் அவர் கூறி னார்.

அருகில் வசிக்கும் ஜாங்லெட் ஹாக்கிப், மே 3 அன்று இரவு, அவரது மருமகன் நெஹ்மின்லுன் ஒரு கும்ப லால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறினார். குக்கி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த் பூரில் உள்ள உள்ளூர் மக்கள், தங்களுக்கு தனி நிர்வா கம் கிடைக்கும் வரை நிலைமை சீரடையாது என்றே  எண்ணுகின்றனர். இன்னும் நிலைமை சீரடையாதது ஏன் என, வேதனையுடன் வாழும் மக்கள் கேட்கின்றனர். இதன் விளைவாக, தலைநகர் இம்பாலுக்கும் சுராசந்த்பூருக் கும் இடையிலான வழக்கமான தொடர்புகள் இன்னும்  தெளிவான நிலையை அடையவில்லை.

இது போன்ற ஒரு சூழ்நிலை இங்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. வழியில் பாட்டில்களில் பெட்ரோல் விற்பவர்களைக் கண்டோம். அப்பகுதி மக்கள் கூறுகையில், பொருட்க ளின் விலை அதிகரித்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். பழங்குடியின மக்கள் மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கிஞ்சா வுவல்சாங் கூறுகையில், “இரு  தரப்பிலும் அதிக ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. பல உயிர் கள் பலியாகியுள்ளன. இரு தரப்பு மக்களும் இனி ஒன்றாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஒன்றிய அரசு எங்களின் அரசியல் கோரிக்கையை ஏற்று தனி நிர்வாகம் வழங்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம். இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் அமைதி ஏற்படும்,” என்றார். ஆனால் இந்த கோரிக்கையை மெய்டெய் மக்கள் எதிர்க்கின்றனர். 

அமைதியைத் தேடும் பொதுமக்கள்
மெய்டெய் மற்றும் குக்கியின மக்களின் இரு தரப்பும் அமைதியை விரும்புவதாக நிபுணர்கள் கூறு கின்றனர். ஆனால் சாமானிய மக்கள் தற்போதைய நிலைமையின் சுமைகளைத் தாங்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற அதிகாரியும் கட்டுரையாளருமான டாக்டர் ஆர்.கே. நிமாய் சிங் இது குறித்துப் பேசிய போது, “இரு தரப்பும் தங்கள் கருத்துகளில் உறுதியாக இருப்பதால் நிலைமை மோசமாக உள்ளது. மெய்டெய் மற்றும் குக்கி இன மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள். ஏனெனில் பொருளாதாரம், சுகாதாரம் அல்லது கல்வி என எதுவாக இருந்தாலும், இது போன்ற பிரச்சனைகள் மாநிலத்தின் நிலையை பாதிக்கின்றன.

சுராசந்த்பூரில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையின் காரணமாக குழந்தைகள் உயிரி ழப்பது வருத்தமளிக்கிறது. இருபுறமும் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன.தலைவர்கள் வசதியாக இருக்கிறார்கள், ஆனால் சாதாரண மக்கள் கவலை யில் உள்ளனர்,” என்றார். எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவல், ஆயுதங்களின் பயன்பாடு, போதைப்பொருட்களின் பங்கு போன்றவற்றின் மீதான விவாதங்களுக்கு மத்தி யில், மணிப்பூரில் உள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரி வினரும் வன்முறையின் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.

இங்கே மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகவும் அதிகரித்து விட்டது. முன்பு ஒருவர் மற்றவரின் துக்கங்களிலும், இன்பங்களி லும் பங்கெடுத்துக் கொண்ட நிலை மாறி, காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஒருவரையொருவர் தொலைத்து விட்டனர். இந்த வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் மிகவும் ஆழமானவை.

நன்றி: பிபிசி தமிழ்