articles

img

உள்ளிருந்தே உருக்குலைக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் - திகேந்தர் சிங் பன்வார்

ஆர்எஸ்எஸ்-ன் ஊதுகுழலான  ‘பாஞ்சஜன் யா’வால், தில்லியில் உள்ள காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை, பொதுத்துறை நிறுவனங்கள் அழிந்துபோகும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாராந்திர இதழான பாஞ்சஜன்யா, ஹோட்டல் லீ மெரிடி யனில் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த ஒரு மாநாட்டை நடத்தியது.  ஏராளமான பணத்தை ஆடம்பர மாகச் செலவிட்டு, இப்படியொரு மாநாட்டை ஒரு வாராந்திரப் பத்திரிகை நடத்துவதற்கு, சில வருடங்களு க்கு முன்பு வரை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடி யாது.  இந்த நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த போதிலும், அந்த விளம்பரப் பலகை இன்னும் அந்தச் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது.  புதுதில்லி முனிசிபல் கார்ப்பரேசன் அதை இலவசமாக தொங்கும் படி அனுமதித்ததா அல்லது கட்டணம் வசூலிக்கிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சமாகும்.

ஆனால் ஆச்சரியப்படாதீர்கள், இவ்வளவு பெரிய விளம்பரப் பலகை வைப்பதற்கு, பாஞ்சஜன்யாவின் கஜானாவில் இருந்து பணம் வரவில்லை என்பது  தெரிகிறது. சில பொதுத்துறை நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இந்த பெரிய நிகழ்ச்சிக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளன.  அந்நிறுவனங்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சர்வதேச சோலார் அலையன்ஸ், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், நமாமி கங்கே (கங்கை நதி சுத்திகரிக்கும் திட்டம்), நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் (WAPCOS) ஆகியவை ஆகும்.  அவர்களின் கார்ப்ப ரேட் சமூகப் பொறுப்பு நிதியானது (CSR Fund) ஆர் எஸ்எஸ்-ன் ஊதுகுழல் நடத்தும் நிகழ்ச்சிக்கு பயன் படுத்தப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அமைப்பான பாஜகவின் வெறுப்பு எப்போதும் மறைக்கப்பட்ட தில்லை.  உண்மையில், அவர்கள், இந்தியாவில் பொ துத்துறை நிறுவனங்கள் உருவான காலத்திலிருந்தே, அவற்றின் வளர்ச்சிக்கு எதிராகவே இருந்தனர்.  ஆனால் இப்போது அவர்களின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கொண்டு, இந்த பொதுத்துறை நிறுவனங்களின் முடிவெடுக்கும் தன்மையையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது நிறுவப்பட்ட நிறுவன அமைப்பிலிருந்து, தானே விடுபட விரும்புவதைப் போன்றது. 2014 முதல், பொதுத்துறை நிறுவனங்களை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளின் விவரங்களுக்குள் செல்லாமல், உண்மையில் பாஜக, நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் அதன் நபர் களை நியமிப்பதன் மூலம் மிகவும் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை கட்டுப்படுத்தியுள்ளது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களின் மீதான இந்தக் கட்டுப்பாட்டின் மூலம், தில்லியில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பரமான பாணி யில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டிற்கு பொதுத் துறை நிறுவனங்கள் நிதியுதவி அளித்ததை பாஞ்சஜன்யா மாநாட்டின் மூலம் காணலாம். இந்த பொதுத்துறை நிறுவனங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் அந்த நிறுவனங்களுக்கு எதிரானவை என்பதை பாஜகவும் உறுதி செய்துள்ளது.

சுயேச்சை இயக்குநர்கள் பெரும்பாலோர்  பாஜகவைச் சேர்ந்தவர்களே 

2021 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு சுயாதீனமான ஆய்வில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்கள் அடிப்படை யில், மகாரத்னா, நவரத்தினா மற்றும் மினி ரத்னா  பொதுத்துறைகளின் இயக்குனர் குழுவில் உள்ள 172 சுயேச்சை இயக்குநர்களில், 86 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களில் சிலருக்கு அந்தந்த பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய புரிதல் அல்லது அது தொடர்பான நிபுணத்துவம் ஏதும் இல்லை. இந்த சுயேச்சை/பாஜக இயக்குநர்களால் கட்டுப் படுத்தப்படுகின்ற, மேலும் மூன்று ஆண்டுகளில் ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டும் சில முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின்   பெயர்கள்:

1.பாரத் ஹெவி  எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்

மணிஷ் கபூர்: உ.பி, பாஜகவின் துணைப் பொருளாளர், ஜனவரி 30, 2020 அன்று இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டார்.

ராஜேஷ் சர்மா: முன்னாள் தேசிய ஒருங்கி ணைப்பாளர்,  உ.பி, பாஜகவின் பட்டயக் கணக்கா ளர் குழு, பிப்ரவரி 20, 2019 அன்று நியமிக்கப்பட்டார்.

ராஜ் கமல் பிண்டல்: 1996 முதல் பாஜக உறுப்பி னர். ஜனவரி 30, 2020 அன்று பொதுத்துறை நிறு வனத்தில் சேர்ந்தார்

2.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

ராஜேந்திர அர்லேகர்: முன்னாள் சபாநாயகர், கோவா சட்டசபை; முன்னாள் அமைச்சர். ஜூலை 24, 2019 அன்று பொதுத்துறை நிறுவனத்தில் சேர்ந்தார்.

லதா உசெந்தி: துணைத் தலைவர், சத்தீஸ்கர் பாஜக; முன்னாள் அமைச்சர்; முன்னாள் எம்.எல்.ஏ., கொண்டகான்.

3.ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்

என்.சங்கரப்பா: மாநில செயற்குழு உறுப்பினர், கர்நாடக பாஜக, முன்னாள் எம்எல்சி; முன்னாள் மாநில ஓபிசி கமிஷன் தலைவர்.

4.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

ஜி.ராஜேந்திரன் பிள்ளை: மாநில செயற்குழு உறுப்பினர், கேரள பாஜக, 1996 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்.

 5.கெயில் லிமிடெட்

பாண்டோ தேவி கட்டாரியா: மத்திய இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியாவின் மனைவி.

6.பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

ஏ.ஆர். மகாலட்சுமி: துணைத் தலைவர், தமிழக பாஜக, 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி யடைந்தவர்.

7.ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

விஜய் துல்ஷிராம்ஜி ஜாதவ்: 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வேட்பாளர், இரண்டு முறையும் தோல்வியடைந்தவர்.

மவ்ஜிபாய் பி சோரத்தியா: பட்டயக் கணக்கா ளர் குழு கன்வீனர், குஜராத் பாஜக; அஞ்சார் நகரத்தின் முன்னாள் மேயர்.

8.நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்

ஜோதி கிரண் சுக்லா: முன்னாள் செய்தி தொடர்பா ளர், ராஜஸ்தான் பாஜக; மாநில நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர்.

9.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

எஸ்.மல்லா ரெட்டி: தெலுங்கானா பாஜக முன்னாள் துணைத் தலைவர்.

10.இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (பாஞ்சஜன்யா நிகழ்வில் பங்கு பெற்ற நிறுவனம்)

சுபாஷ் சர்மா: பொதுச் செயலாளர், பஞ்சாப் பாஜக.

11.இந்திய விமான நிலையங்கள் ஆணையம்

கசம் வெங்கடேஷ்வரலு: செயலர், தெலுங்கானா பாஜக, 2009 மற்றும் 2014ல் நடந்த சட்டசபை தேர்தல்க ளில் தோல்வியடைந்தவர்.

12.மத்திய நிலக்கரிவயல் நிறுவனம்

சுப்பு காஷ்யப்: பாஜக சத்தீஸ்கர் மாநில செயற்குழு உறுப்பினர்; 2018 சட்டமன்ற தேர்தலில் தோல்விய டைந்தவர்.

13.சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

ரஷ்மி சிங்: உபி பாஜக; 2012 சட்டசபை தேர்த லில் போட்டியிட்டவர்.

அவர்கள் பாஜகவில் இருப்பதற்கும், பொ துத்துறை நிறுவன வாரியங்களில் இயக்குநர்களாக அவர்கள் நியமனம் பெற்றதற்கும், எத்தகைய முரண் பாடும் இல்லை என்று இந்த நியமனம் பெற்றவர்கள் அனைவரும் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்த னர். பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா மற்றொரு அரசு நிறுவனமான, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் என்பதையும் நினைவில் கொள்ளத் தவறாதீர்கள்.

முடிவெடுப்பதில் பாதிப்பு

நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வழிநடத்த அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சுயாதீன’ இயக்குநர் குழுவினரின் சில பெயர்கள் மேற்கூறப்பட்டவை.  அவர்கள் அனைவரும் பாஜக வைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவ னங்களுக்கு எதிராக உள்ளார்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளதோடு, அந்த நிறுவனத்தை உள்ளி ருந்து உருக்குலைப்பதில் உறுதியாக உள்ளனர். இந்த சுயாதீன இயக்குநர்கள், அந்தந்த பொ துத்துறை நிறுவனங்களின் நலன்களுக்கு எதிரான வற்றை வலியுறுத்துபவர்களாக உள்ளனர்.  நம்பகமான வட்டாரங்களின் தகவல்களின்படி, நிறுவ னங்களின் விவகாரங்களில் அவர்கள் தலையிடும் முறை ஒரே மாதிரியாக இருக்கிறது எனத் தெரிய வருகிறது.  மேலும், பொதுத்துறை நிறுவனம் சில லாபகரமான பணிகளில் ஈடுபட டெண்டர்களில் பங்கெடுக்க அனுமதிக்கப்படாது, அதற்குப் பதிலாக, ஆடம்பரமான செலவினங்களைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு பொருளாதாரச் சுமையுடன் இருக்கும்.  “நிலையான வளர்ச்சி” என்ற போர்வை யில் மேற்கூறிய பாஞ்சஜன்யா மாநாடு போன்ற நிகழ்வு களுக்கு, நிதியுதவி செய்யப்பட வேண்டிய கட்டா யத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.  விலையுயர்ந்த ஹோட்டல்களில் நடத்தப்படும் இத்தகைய மாநாடு அவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.  ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புக்கள், உண்மையில், அரசு இயந்தி ரத்தை அப்பட்டமாகப் பயன்படுத்தி, அதன் கஜானா வை நிரப்புவதோடு மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களின் வீழ்ச்சியையும் உறுதிப்படுத்து கின்றன.

2022 ஏப்ரலில் கனரக தொழில்துறை அமைச்ச கத்தால் நடத்தப்பட்ட, பெருநிறுவன ஆளுகைக்கான இயக்குநர் மாநாட்டில், செயல்பாட்டு இயக்குநர் கள் யாரும் தங்கள் கருத்துக்களை பேச அனுமதிக்கப் படவில்லை என்பதோடு, ‘சுயாதீனமான’ இயக்குநர் கள் மட்டுமே அரசியல் தொனியுடன் கூடிய உரை களை நிகழ்த்தினர். செயல்பாட்டு இயக்குநர்களுக்கு எதிரான சுயாதீன இயக்குநர்களின் விகிதம் கவலைக்குரியது.  வேண்டு மென்றே, அரசாங்கம் பல பொதுத்துறை நிறுவனங்க ளில் செயல்பாட்டு இயக்குநர்களை நியமிக்கவில்லை யாதலால், நிறுவனங்களின் முடிவெடுக்கும் விவ காரங்களில் அரசு செல்வாக்கு செலுத்துகிறது.

வெளியிலிருந்தும்  உள்ளிருந்தும் திட்டமிட்டுத் தகர்ப்பது

பல்வேறு அமைப்புகளின் கீழ் அணிதிரட்டப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்  சிலர், நிறுவனங்களின் மீதான இத்தகைய தாக்கு தல்களுக்கு எதிராக குரல் எழுப்பினால், அமைதியாக  இருக்குமாறு மிரட்டப்படுகிறார்கள்.  இந்த முழு அத்தியாயத்தின் துரதிர்ஷ்டவசமான பகுதி என்ன வென்றால், பொதுத்துறை நிறுவனங்களின் செயல் பாட்டைப் பற்றிய விவரங்கள் பொது வெளியில் எதுவும் இல்லை என்பதும், நிறுவனங்களின் திறமை யின்மையே அதன் நஷ்டத்திற்கும், வீழ்ச்சிக்கும் கார ணம் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்.  அதே சமயம், இவை அனைத்தும் வெளியில் இருந்தும், உள்ளே இருந்தும் உறுதியான திட்டத்துடன் இந்த பொதுத்துறை நிறுவனங்களைத் தகர்ப்பதை உறுதிசெய்து, அவற்றைத் அடிமாட்டு விலையில் தனியார் முதலாளிகளுக்கு  விற்பனை செய்வது என்பதே உண்மை. ‘தேசியவாத சக்திகள்’ என்று தங்களைக் கூறிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டாளி கள், உண்மையில் நாட்டின் சுயசார்பு பொருளாதா ரத்திற்கு பெரும் பங்களித்த இந்த பொதுத்துறை நிறுவனங்களின் அடித்தளத்தையே தகர்க்கிறார்கள்.  பாஜக-வின் தேசியவாதம் என்பது நாட்டின் வளங்களை தனியார்மயமாக்குவதுதான். அது பொரு ளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி இந்திய தேசியவா தத்துக்கும் கேடு விளைவிக்கும்.

இத்தகைய பின்னணியில் ‘நீடித்து நிலைத்த வளர்ச்சி’ என்ற பெயரில்,  மேற்கூறப்பட்ட ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது, அரசின் கஜானாவைக் காலி செய்வதற்கும், அவற்றைத் தங்கள் அரசியல் நலன்களுக்காக ஆடம்பரமாகப் பயன்படுத்துவ தற்குமான ஒரு திரைமறைவு வேலையாகவே இருக்கிறது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, (ஜுலை 18-24), 
தமிழாக்கம். செல்வம் அருணாசலம், புதுச்சேரி.


 

;