“நான் அதை விளக்குகிறேன். கவர்னர் என்பது அதிகபட்சமாய் அது ஓர் அலங்காரப் பதவி மட்டுமே. நிர்வாகம் செய்ய வேண்டிய எந்தப் பொறுப்பும் கவர்னருக்கு இல்லை என்று இந்த அரசியல் நிர்ணய சபையில் உள்ள அனை வரும் அறிவார்கள். நகல் தயாரித்த எங்கள் குழு அவ்வாறே கருதுகிறது. ஒரு மிக முக்கிய மான கோரிக்கையென்றால் கவர்னருக்கு அதை ஏற்கவோ, நிராகரிக்கவோ ஆன அதி காரத்துடனோ, சொந்த முடிவின் அடிப்ப டையிலோ செயல்பட வேண்டிய எந்தப் பொறுப்பும் இல்லை. புதிய அரசியல் அமைப் புச் சட்டத் தத்துவத்தின்படி எல்லா காரி யங்களிலும் அமைச்சரவையின் ஆலோசனை யையே கவர்னர் பின்பற்ற வேண்டும்.”
-அரசியல் நிர்ணய சபையில், கவர்னரை எவ்வாறு நிச்சயிக்க வேண்டும் என்பது குறித்த விவா தத்தில் தலையிட்டு டாக்டர் அம்பேத்கர் இந்த விளக்கம் தந்தார். விவாதங்களில் மூன்று நிலை பாடுகளை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். சில உறுப்பினர்கள் கவர்னர் என்ற பதவியே தேவை யில்லை என்கிற நிலைபாட்டில் இருந்தனர். அரசியல் அமைப்புச் சட்டப்படியான ஜனநாயகத்திற்கு நாடு செல்லும்போது காலனியாக இருந்த காலத்தின் கண்ணோட்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர்கள் கருதினர். அரசியல் அமைப்புச் சட்டக் குழுவின்முன் வைத்த ஆலோசனை என்பது கவர்னர் பதவிக்கு நிச்சயமான தகுதியுள்ள ஒருவரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரை செய்ய வேண்டும் என்பதாகும். பிரஜேஷ்வர் பிரசாத் மற்றொரு திருத்தத்தை முன்வைத்தார். அவர் முன் வைத்த திருத்தம் என்பது மாநிலங்களின் சட்ட மன்றங்கள் பரிந்துரைக்கிற பேனலில் இருந்து (பெயர்ப் பட்டியலிலிருந்து) பெயர் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பதாகும். மற்ற சில உறுப்பினர்களும் இதுபோன்ற ஆலோசனைகளை முன்வைத்தனர். ஒரு ஜனநாயக அமைப்பில், கவர்னரை நியமிப்பது உள்ளிட்ட விஷயங்களில் விசேஷ முன்முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என்பதாக இருந்தது அந்த நிலைபாடு. வேட்பு மனு முறையின் மூலம் கவர்னரை நியமிக்க முடி யாது என்ற நிலைபாடு கொண்டவர்களாக சிலர் இருந்த னர். கவர்னர் வேண்டுமென முடிவு செய்தால் அது வாக்கெடுப்பு மூலமாக நடைபெற வேண்டுமென்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அவ்வாறு பணம் செலவழித்துத் தேர்தல் நடத்தி கவர்னரை நிச்ச யிப்பது வீண் செலவு அல்லவா என்று மற்ற சில உறுப்பினர்கள் வாதிட்டனர்.
‘ஓர் அலங்காரப் பதவி’
இவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக அம்பேத்கர் பேசியது நகைச்சுவை கலந்ததாக இருந்தது. முழுதும் அலங்காரமான இந்தப் பதவிக்குப் போட்டியிடு வதற்கு அபூர்வமாகச் சில நபர்கள்தானே முன்வருவார் கள்?- என்று அவர் கேட்டார். அவர் மேலும் ஒன்றைத் தெளிவுப்படுத்தினார்:
“ஒரு கொள்கையின் அடிப்படையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; ஆனால் கவர்னர் அப்படியல்ல. அவருக்கு எந்தக் கொள்கையும் இல்லை; அதிகாரமும் இல்லை. நம் எல்லோ ருக்கும் தெரியும், கவர்னரின் அதிகாரங்கள் மிகக் குறைவானவை என்று; பெயரளவிலே உள்ளவை என்று. அது ஓர் அலங்காரப் பதவி.”
விரிவான விவாதத்திற்குப் பிறகு, கவர்னர்க்கான பெயரை ஜனாதிபதியே அறிவிக்கலாம் என்ற பரிந்து ரையே அங்கீகரிக்கப்பட்டது. கவர்னரின் அதிகாரங்கள் பற்றியும் பல்வேறு கண்ணோட்டங்களுக்கிடையே அரசியல் நிர்ணய சபையில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. உண்மையில் கவர்னருக்கு என்ன அதிகாரம் என்ற கேள்விக்கு அளித்த கருத்துரையில் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் வாசகங்கள் வரை விவாதங் கள் உண்டாயின. மாநிலங்களின் தலைவர்களுக்குப் பக்குவம் போதாது. அதனால் கவர்னர்களுக்கு விரி வான அதிகாரங்கள் வழங்க வேண்டியுள்ளது என்று சிலர் வாதிட்டனர். அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசாங்கத்தில் மையப்படுத்த வேண்டும் என்கிற நிலைபாடும் அவர்கள் மேற்கொண்டனர். உண்மை யில் இந்தியர்க்கு ஆட்சி நடத்துகிற பக்குவம் வர வில்லை என்றும், அதனால், முழுசுதந்திரம் வழங்க வேண்டியதில்லை என்றும் கருதிய பிரிட்டன் வாதத்தின் தனி நகலாகவே இருந்தது. இந்த வாதம் 1935-ஆம் ஆண்டின் கவர்ன்மென்ட் ஆஃப் இண்டியா ஆக்ட்டின் தனி ஆவர்த்தனமாக இருக்க வேண்டுமென் கிற நிலைபாடாகும். அது முற்றிலும் ஜனநாயக விரோதமானது என்று அம்பேத்கர் தெளிவாக்கினார்.
கவர்னருக்கு அதிகாரம் உண்டா?
கவர்னருக்கு அதிகாரங்கள் எதுவும் இல்லை என்றும், கடமைகள்தான் உள்ளன என்றும் அம்பேத் கர் தெளிவாக்கினார். நகல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 143-வது பிரிவை (இப்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 163) ஏற்கவும் நிராகரிக்க வுமான கடமைகளை நிர்வகிப்பது சம்பந்தமாக மிக அதிக விவாதங்கள் எழுந்தன. பண்டிட் குன்ஸ்ரு அத னுடன் முரண்பட்டார். எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் தருகிற சொற்கள் இருப்பது அரசி யல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கண்ணோட் டத்தையே பலவீனப்படுத்திவிடும் என்று அவர் வாதிட்டார். கவர்னருக்கு விவரங்கள் தருவது சம்பந்தமாக 147-வது பிரிவு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஜன நாயக உணர்வுக்கு எதிரானது என்பது எச்.வி.காமத் அவர்களது நிலைபாடு. அமைச்சரவை முடிவு செய்கிற விஷயங்களில் தலையிடுவதற்கு கவர்ன ருக்கு அதிகாரம் இல்லையென்றும், அத்தகைய சூழ லில் விஷயங்களை முன்கூட்டித் தெரிவிப்பது வண்டி யைக் குதிரைக்கு முன்பு கட்டுவதுபோல என்றும் நகைச்சுவை நிறைந்த விமர்சனம் எழுந்தது. ஒரு சாணக் கத்திரி ஒரு பாத்திரத்தின் பால் முழுவதையும் பாழ்படுத்துவது போல பிரிவு 147 என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தையே நாசப்படுத்திவிடும் என்று ரோஹின்குமார் சௌத்ரி கருத்துத் தெரிவித்தார்.
சிறப்பு உரிமை ஏதுமில்லை
அரசு நிர்வாகத்திலும், சட்டம் உருவாக்குவதிலும் அமைச்சரவை எடுக்கிற முடிவுகளை முதலமைச்சர் கவர்னருக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது. உத்தர வுகள் கவர்னரின் பெயரில் என்பதால் இது தேவை என்கிற நிலைபாட்டை முடிவில் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. மாநில அரசு நிர்வகிப்பை யும், சட்டம் உருவாக்க ஆலோசனைகள் சம்பந்தமாக வும் கவர்னர் கேட்டுக்கொண்டால் அவருக்கு விவ ரங்கள் தெரிவிக்கும் பொறுப்பு முதலமைச்சருக்கு உண்டு. ஆனால், அன்றாட அரசு நிர்வாகத்தில் கவர்ன ருக்கு சிறப்பு உரிமைகள் எதுவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை. விவரங்கள் பெறுகிற விஷ யத்திலும் கவர்னரின் தொடர் தலையீடுகள் எதையும் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுக ளையும், அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களையும் உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுடன் சேர்த்து வாசிக்கும்போது நல்ல தெளிவு கிடைக்கும். இல்லையென்றால் தவறான புரிதலை ஏற் படுத்துவதுடன், குறுக்கு வழியில் சொந்த முடிவுகளுக் கும் செல்லவேண்டி வரும். எடுத்துக்காட்டாக, அமைச்சரவை அதிகாரத்தில் தொடருவது கவர்னரின் விருப்பத்திற்கு (pleasure) ஏற்ப இருக்கும் என்று அரசியல் அமைப்புச் சட்ட விதி கூறுகிறது. அதனால், தமக்கு விருப்பமில்லையெனத் தோன்றினால் அமைச் சரவையையோ, அமைச்சரையோ வெளியேற்ற தமக்கு அதிகாரம் உண்டு என எந்த கவர்னரேனும் வாதிட்டால் - இவ்வாறெல்லாம் கூறுவதற்கு இட முண்டு என்பதைக் கண்டுதான் அம்பேத்கர் தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார். கவர்னரின் விருப்பத்திற்கு ஏற்ப என்பதன் அர்த்தம் சட்ட மன்றத்தில் பெரும்பான்மை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால், அமைச்சரவை உருவாக்கக் கட்டத்தில்தான் இது பல சமயங்களிலும் விவாதங்களுக்கு உள்ளாகிறது. பல சமயங்களிலும் நடைமுறையில் இது சொந்த முடிவாகவோ, அரசியல் நிலைபாடாகவோ மாறியதனால் பல கட்டங்களிலும் உச்ச நீதிமன்றமே இதில் தலையிட வேண்டி வந்தது.
அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் மிகக் கடுமையான விமர்சனம் எழுந்தது பிரிவு 278 (தற்போது அரசியல் அமைப்புச் சட்டத்தில் 356) தொடர்புடையது ஆகும். அரசுகளைக் கலைத்துவிடுவதற்கான அதிகா ரம் ஜனநாயகத்தில் அங்கீகரிக்க முடியாதது என்று பல ரும் கருத்துத் தெரிவித்தனர். “நாம் கூட்டாட்சியையும் (ஃபெடரல்) சுயாட்சி மாநிலங்களையும் அங்கீகரித்தி ருக்கிறோம். அதனால்தான் பிரிவு 278 இதே வடிவத்தில் தொடரமுடியாது.”என்று ஷிபுலால் ஸக்ஸேனா கருத்துத் தெரிவித்தார். 1959-ல் கேரள அரசைக் கலைத்த நிகழ்வுதான் அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் கௌர வத்தைச் சிதைக்கிற விதமாக ஜனநாயகச் சீரழிவை ஆரம்பித்துவைத்தது. கவர்னரின் தன்னிஷ்டப்படி யான அதிகாரத்தை நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்ற பொம்மை வழக்கின் தீர்ப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைப் பாது காப்பதாக இருந்தது. இதுதான் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக அரசுகளைக் கலைத்துவிடுவ தைக் கட்டுப்படுத்தியது. 1999 பிப்ரவரியில் பீகாரின் ரப்ரி தேவி அரசைக் கலைத்துவிட்ட வாஜ்பாய் அரசுக்கு, மார்ச் மாதம் அவரையே மீண்டும் முதலமைச்சராக்க வேண்டி வந்தது பொம்மை வழக்குத் தீர்ப்பின் விளை வாகும். அரசியல் அமைப்புச் சட்ட நகலை முன்வைக்கும் போது டாக்டர் அம்பேத்கர் தாம் ஆற்றிய உரையில், நகல் அரசியல் அமைப்புச் சட்டம் என்பது ஒரு கூட்டாட்சி (ஃபெடரல்) அரசியல் அமைப்புச் சட்டம் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இதுதான் முத லாவது பிரிவில் உள்ள ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்’ என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழில் : தி.வரதராசன்