articles

img

செஞ்சிறுத்தை கவிப்பேரரசு வைரமுத்து

ஒரு நூற்றாண்டுக்கு மேல்
நெஞ்சுரத்தோடு வாழ்ந்த
செஞ்சிறுத்தை
இன்றுமுதல் போராடுவதை
நிறுத்திக்கொண்டது

தடம் மாறாத கொள்கை
தடு மாறாத அரசியல்

பொது வாழ்வுக்கும்
தனி வாழ்வுக்கும்
இடைவெளி இல்லாத எளிமை

சிறைக்கம்பிபோல் 
வளையாத முதுகெலும்பு

சிறைக்கோட்டத்திலும்
காங்கிரஸ்காரர்களைக்
கம்யூனிஸ்ட்களாய் மாற்றிய
குன்றாத கொள்கை

இவற்றின் மொத்த உருவம்
சங்கரய்யா

தங்கள் கடைசித் தலைமுறை
போய்விட்டதோ என்று
நேர்மையும் தியாகமும்
வரிசையில் நின்று
வணக்கம் செலுத்துகின்றன

செவ்வணக்கம்