articles

img

புதிய உலக ஒழுங்கும் ஊடக மோசடிகளும் - எஸ். பாலா

புதிய உலக ஒழுங்கும் ஊடக மோசடிகளும் 

புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்து வதற்கு ஏகாதிபத்திய சக்திகள் கடுமை யான முயற்சிகளை எடுத்து வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனம் இஸ்ரேலின் வேட்டைக்காடாக மாறி நிற்கிறது. இந்த நிகழ்வுகளை மறைப்பதற்கு ஊடகங்களின் அரசியல் தீவிரமாகப் பொய்களை அடுக்கி பவனி வரச் செய்கிறது.  பேக் நியூஸ் என்பது மாறி பேக் சினிமா வரைத் தொடங்கிவிட்டது. இது ஜேம்ஸ் பாண்ட் காலத்துப் பாணி என்றாலும், மீண்டும் அதை பாசிச வலதுசாரி சக்திகள் கையில் எடுத்துள்ளன.  ஊடகங்களின் மீதான கார்ப்பரேட் ஆதிக்கம் எந்த அளவுக்கு வளர்ந்து வரு கிறது, அதனால் எளிய மக்களின் வாழ்க்கை யில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்கு  முன்னால் நாம் வாசிக்க வேண்டிய நூலாக,  சினிமா ஊடகம் தொடர்பான அருண் கண்ணனின் “விலக மறுக்கும் உண்மைகள்” எனும் கட்டுரைத் தொகுப்பு முக்கியமானதாகும்.  

உண்மையின் சக்தியும்  ஊடக திரிபுகளும்

 “ஒரு புகைப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த துயரத்தை எந்தச் சொல்லும் இல்லாமல் பார்ப்பவருக்கு எளிதாகக் கடத்த வேண்டும்” என்று தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கூறுகிறார்.  உலகில் நடைபெறும் விஷயங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்நிலையில்தான் அதில் இருக்கும் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். உலகம் முழுவதும் கார்ப்பரேட்டு களின் கையில் ஊடகங்களும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வலதுசாரி சக்தி களின் கைகளில் அதிகாரமும் முதலாளித்து வத்தின் புதிய காலகட்டத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  இந்நிலையில் போஸ்ட் ட்ரூத் எனும் வார்த்தை ஆங்கில அகராதியில் இடம் பெற்றது. உண்மைகளை மறைத்து உணர்வுகளைத் தூண்டுவிடுகிற செயலுக்கு போஸ்ட் ட்ரூத் என்று விளக்கம் அளித்துள்ள னர்.  

காஷ்மீர் பைல்ஸ் :  வரலாற்றைத் திரிக்கும் சினிமா  

இக்கட்டுரைத் தொகுப்பில் உள்ள காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் வர லாற்றிலிருந்து உண்மையை மறைக் கிறது. தனக்கு விருப்பமானவற்றை மட்டும்  தேர்ந்தெடுத்து பிறர் மீதான வெறுப்பை  உருவாக்கியுள்ளது, மனித உணர்ச்சி களைத் தூண்டி உண்மையை மறைக்கிற செயலை மேற்கொள்கிறது.  இதற்கு அதிகார வர்க்கமும் நிர்வாகமும் எப்படியெல்லாம் மோடி ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இக்கட்டு ரை விரிவாக விளக்குகிறது. இதை ஏதோ ஒரு சினிமா என்று கடந்துபோக முடியாது. அதேசமயம் விவாதிக்க வேண்டிய பல்வேறு  அம்சங்களை அழுத்தமாக எடுத்துரைக் கிறது.  அதானியின் ஊடக ஆதிக்கம்  மோடி ஆட்சிக் காலத்தில் பயன்பெற்ற பெரு முதலாளிகளில் அதானி முதன்மை யானவர். அவரின் சொத்து வளர்ச்சியில் எத்தகைய அசுரத்தனம் உள்ளது என்பதைப் போல, இந்திய ஊடகங்களில் அவரின் அதிகாரம் எந்த அளவுக்கு விரிந்து பரந்துள்ளது என்பதை இரண்டாவது கட்டுரை ஆழமாகச் சொல்லுகிறது.  

பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா

 பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என்று அழைக்கப்பட்ட மர்வான் பார்கவுட்டி குறித்த இரண்டு கட்டுரைகளும் நூலை மேலும் செறிவு படுத்துகின்றன.  “எனது உடலை நீங்கள் சிறையில் அடைக்கலாம், ஆனால் என் மன உறுதியை யும் சுதந்திர தாகத்தையும் உங்களால் ஒருபோதும் கைது செய்ய முடியாது” என பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகப் போராடி 23 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் வாடும் மர்வான் பார்கவுட்டியின் வார்த்தைகள் இவை.  பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி உருவானது முதல் இன்றைய காலகட்டம் வரை, ஏகாதிபத்திய சக்திகளின் ஏவலாளி யாக இஸ்ரேல் வெறித்தனமாக நடந்து வருகிறது. உலகெங்கிலும் பாலஸ்தீன த்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இதை வாசிக்கும்போது மிகுந்த அளவிற்கு மனதைக் கனமாக்கு கிறது.  

இந்தியாவின் மாறிவரும் நிலைப்பாடு

 பாலஸ்தீனத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது என தீர்மானிக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரண்டு நாடுகள் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபை யில் முன்மொழியப்பட்டது. இத்தீர்மா னத்தை 11 நாடுகள் எதிர்த்தன, அதில் இந்தி யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைக்கு இந்தியாவின் நிலை என்ன? அது எப்படி மாறியுள்ளது? வலது சாரி சக்திகளுக்கு ஆதரவாக சியோனிஸ்டுகளுக்கு மோடி அரசு எப்படித் துணை நிற்கிறது? இவற்றை வாசிப்பதன் மூலம் மோடி அரசின் நவீன பாசிச குணாம்சங்களை அறிய முடியும்.  “ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் வர்க்க நலன் ஒளிந்திருக்கிறது” என்கிறார் கார்ல் மார்க்ஸ். அத்தகைய வர்க்க நலனை வெளிச்சம் போட்டு நமக்குக் காட்டக்கூடிய முறையில் வந்துள்ள. நூல் அருண் கண்ணனின் “விலக மறுக்கும் உண்மைகள்” எனும் கட்டுரைத் தொகுப்பாகும். பூவுலகை நேசிக்கும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.