தோழர் ஏ.பி. என தமிழக உழைப்பாளி மக்க ளால் அறியப்பட்ட வர் ஏ.பாலசுப்பிமணியம். 1977-ஆம் ஆண்டு மன்னார்குடி வெண்ணைதாழி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஏ.பி. அன்றைக்கு தமிழகத்தில் நடை பெற்ற கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தில் தமிழக அரசு தலை யிட்டு தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தினார்.
அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில் ஆனந்தராயர் என்பவ ரும் பங்கேற்றிருந்தார். அவர் திமுக அனுதாபி. தோழர் ஏ.பி.யின் பேச்சைக் கேட்ட அவர், எளிய மக்களையும் வசீகரிக்கக்கூடிய பேச்சாற்றல் மிக்கவர் “அந்தப் பெரியவர்” எனக் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் தொகுதிப் பங்கீடு செய்து மதுரை தொகுதியில் போட்டி யிட்ட தோழர் ஏ.பி. யை எதிர்த்துப் போட்டியிட்டவர் காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சுப்புராமன். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக மதுரை திலகர் திடலில் நடைபெற்ற பொ துக் கூட்டத்தில் மதுரை மேயர் முத்து, அதிமுக தலைவர்களில் ஒருவரான காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது என்றைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வது? நேரம் ஏதும் குறித்து வைத்துள்ளீர்க ளா என மேயர் முத்து ஏ.பி.யிடம் கேட்டார். அதற்கு ஏ.பி., எல்லா நாட்க ளும் நல்ல நாட்களே, நீங்கள் அனைவரும் தயார் என்றால் எப்போது வேண்டுமானாலும் மனுத்தாக்கல் செய்யலாம் என்றார்.
அந்தத் தேர்தலில் நாம் தோற் றோம். பின்னொரு நாள் மன்னார் குடி வந்திருந்தார் ஏ.பி., அப்போது ஆனந்தராயர், மதுரைக் காரர்கள் இவரைப் போன்ற தலைவர்க ளுக்கு ஓட்டுப்போடாமல் வேறொரு வருக்குப் போட்டுள்ளார்கள் எனக் கூறி வருத்தப்பட்டார்
அதற்கு ஏ.பி., மக்களுக்கான போராட்டத்தில் தேர்தல் என்பது வந்து போகக்கூடிய ஒன்று. அவ்வளவு தான் மக்கள் போராட்ட த்தைத் தொடர்வோம். மதுரையில் நமது கட்சி நிச்சயம் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யும் என்றார்.
தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் திண்டுக்கல்லில் தலித் மக்களை, தோல் பதனிடும் தொழி லாளர்களை அணிதிரட்ட போரிட்டது தனிக்காவியம். வர்க்கப் போராட்டமும் சாதி எதிர்ப்புப் போராட்டமும் இணைந்த அந்த போராட்ட களம் புதிய படிப்பினை தரும். பூதிப்புரம் என்ற இடத்தில் தலித் மக்களின் சுடுகாட்டுப் பாதையை மறுத்து ஆதிக்க சக்திகள் கட்டிய சுவரை இடித்துத் தகர்த்தார். அதற்கு மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வாக்களிப்போம் என்ற அவர்களின் நிர்பந்தத்திற்கு பணியமறுத்து அந்த சிறு அளவு வாக்கால் தோல்வியை சந்தோஷ மாக ஏற்றதும் சாதாரணமானதா?
“மனித குலத்திற்குச் சேவை செய்யும் ஒரு வாய்ப்பை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எத்த கைய சுமைகளும், பளுக்களும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. பணிய வைத்திட முடி யாது” என்ற மார்க்சின் கருத்துக் கும் “உழைக்கும் மக்கள் நலனுக்கு போராட முன் வந்தால் நமது முன்னேற்றத்தை எதிர்த்துத் தடுக்க உலகில் எந்த சக்திக்கும் பல மில்லை” என்ற ஏங்கெல்ஸ்சின் கருத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார் தோழர் ஏ.பி.
- சி.ராமகிருஷ்ணன்