articles

பசியால் மண்ணைத் தின்னும் குழந்தைகள் - யாசர் அராபத்தின் தியாகத்தை மறக்காதீர் - தமிமுன் அன்சாரி

பசியால் மண்ணைத் தின்னும் குழந்தைகள் - யாசர் அராபத்தின் தியாகத்தை மறக்காதீர்

733 நாட்களாகப் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படுகொலை செய்து கொண்டுள்ளது. 20 அம்சத் திட்டத்தைக் கூறி அமைதிக்கு ஆதர வாக இருப்பது போல் தோற்றத்தை உருவாக்குகிறார். 145 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தபோது 6 முறை தனது வீட்டோ அதி காரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலைக் காப்பாற்றியது பயங்கரவாத அமெரிக்கா. பாலஸ்தீனத்தில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர்  தண்ணீர், உணவுக்குக் காத்திருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 17 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காசா மக்கள்தொகையில் 11 சதவீதம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 92 சதவீத கட்டிடங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடக் கழிவுகளை அகற்ற குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா. கூறியுள்ளது. குழந்தைகள் பசியால் மண்ணை அள்ளித் தின்கிறார்கள். 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க முனைந்தபோது, ஒரு பாசிசக் கும்பல் செய்த நிகழ்வுக்காக நாட்டு மக்களைத் தண்டிக்கக் கூடாது என்று யாசர் அராபத் தடுத்தார். அத்தகைய சுதந்திரப் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைபாட்டை இந்தியா எடுக்க வேண்டாமா?