articles

img

பார்வை ஐந்து மணிக்கு  அலாரம் அடிக்க எழுந்து போனால் வாசல் தெளிக்க –ஜீவி

ஐந்து மணிக்கு

 அலாரம் அடிக்க

எழுந்து போனால்

வாசல் தெளிக்க

 கோலம் போட்டு

கூடம் பெருக்கி

அடுக்களை கழுவ

ஆறு ஆனது

 பால் தரும் ஆள்வர

காப்பி போட்டு எழுப்பிக் கொடுக்க

ஏழு ஆனது  

சட்டினி அரைத்து

இட்டிலி சுட்டு தட்டில் தருகையில்

சரியாய் எட்டு  

சின்ன மகனுக்கு

சீருடை மாட்டி கேட்டுக்கு

வந்து டாட்டா காட்டி

ஸ்கூலுக்கு அனுப்பி

‘ஹாலுக்குள் நுழைகையில்

மணியோ ஒன்பது

 கணவரின் தேவை கணக்காய்

முடித்து ஆபீஸ்

அனுப்பி பத்துத் தேய்த்தபின் பார்த்தால்

பத்து  அழுக்குத்

துணிகள் பொறுக்கிச்

சேர்த்து வழுக்கும் பாத்ரூம் கழுவிக்

குளிக்க பதினொன்று ஆனது

 பாஸ்கெட் எடுத்து

மார்க்கெட் புகுந்து

பேரம் பேசி வாங்கி

வருகையில் நேரம் பன்னிரண்டை நெருங்கியிருந்தது  

காய்ந்த துணிகளுக்கு

இஸ்திரி போட்டு

உண்டு முடிக்க ஒரு மணி ஆனது  

அலமாரி பீரோ ஒழுங்கு படுத்தி அறையைப்

பெருக்க சரியாய் இரண்டு  வந்தபின் கொடுக்க காப்பிபோட்டு

பிள்ளையை அழைக்கச் செல்கையில்

மூணு  டியூசன் எடுக்கணும் டிபன்

செய்யணும் ஓய்வு இல்லாமல் வேலை

பார்த்தால்தான் பத்து மணிக்காவது படுக்கப் போகலாம்

 எந்திர கதியில் வேளை

நடக்கையில் வந்தார் கணவர்

புது நபருடனே காப்பி கொடுக்கையில்

கணவர் சொன்னார்  

இவ என் மனைவி கூப்பிய கையுடன் வந்தவர்

கேட்டார் என்ன செய்றாங்க பட்டென்று உடனே

பதில் வந்தது சும்மாதான் இருக்கா...!