articles

உலகம் பார்த்த சினிமா ஆனந்த ஸ்ரீ

    கருப்பு கருணா கனவுப் பட்டறையின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது “இன்று தஸ்தகீர் வீடு” எனும் குறும்படம். எழுத்தாளர் கரீம் அவர்களின் சிறுகதை,இக்குறும்பட வடிவம் பெற்றிருக்கிறது. படத்தின் காட்சியமைப்புகளும்,கேமிரா கோணங்களும் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பிட்ட  ஒரு வீதியில் அசையும் ஆஞ்சநேயரோடு போலீஸ் ஜீப் நிதானமாக உலாத்தும் படத்தின் முதல் காட்சியியே நம்மை  திகிலுக்குள் தள்ளுகிறது.  

    இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடிகரின் உடல்மொழியும் பாவனையும,மிரட்டல் தொனியும் வெகு சிறப்பு.அவர் பேசும்போதே பார்க்கும் நமக்கு எரிச்சல் வருகிறதெனில் அந்தப் பாத்திரப் படைப்புக்கு நடிகர் உயிர் ஊட்டியிருக்கிறார் என்பதே சிறப்பு..!

     தஸ்தகீர் பாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர், ராமச்சந்திரன் துரைராஜ்., ஜி.செல்வா உட்பட,மற்ற நடிகர்களும் தங்கள் பங்கினை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.  

    இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாத த்தோடு தொடர்புடையவர்கள் என்று ஸ்தாபிப்பதற்காக,சநாதனவாதிகளும், சங்கப்பரிவாரங்களும்,இவர்களோடு கருத்திசைவில் உள்ள அதிகார வர்க்கமும் ஓயாமல் தங்கள் சக்தியைப் பயன்படுத்துகின்றன.அதற்கான சதிவலையையும் அழகாய் பின்னுகின்றன என்பதை கதைப் போக்கிலும் உணர்த்தப் பட்டிருக்கிறது.