articles

img

திருப்பூர் நிலைமை என்ன? உழைக்கும் மக்கள் சொல்கிறார்கள்

வீ.பாபு (46), தேனி மாவட்டம்

நான் 15 ஆண்டு காலமாக திருப்பூ ரில் சிங்கர் டெய்லராக வேலை செய்து வருகிறேன். இப்போது எனக்கு சீரான வேலை இல்லை. எனது அனுபவத்தில், இப்போது ஏற்பட்டிருப்பது போன்ற நெருக்கடியை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. இப்போது ஏற்பட்டிருக் கும் நெருக்கடிக்கு நூல் விலை உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி குறைந்து இருப்பது, அமெரிக்காவில் நெருக்கடி போன்ற காரணங்களால் திருப்பூருக்கு ஆர்டர் குறைந்து இருக்கி றது என்று நாளிதழ்களில் வரும் செய்தியின் மூலம் தெரி கிறது. இதே போன்ற நெருக்கடியான நிலை நீடித்தால் மீண்டும் சொந்த ஊருக்கு போவதை தவிர வேறு வழி யில்லை. உள்ளூர் தொழிலாளர்கள் சரியாக வேலைக்கு வருவ தில்லை, மது போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள், அதனால்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது என்று சொல்வது உண்மை இல்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த  தொழிலாளர்களும் அப்படி இருக்கிறார்கள் என்று கூறுவது சரியல்ல. முதலாளிகள் ஒரு அமைப்பாக இருந்து இது போன்ற கருத்தை சொல்லும்போது, தொழிலாளிகள் அப்படி அமைப்பாக இல்லை. அதனால் அவர்களது கருத்து உண்மை போல தெரிகிறது. நாங்கள் குடிகாரர்களாக வேலை செய்யாமல் இருந்தால், எப்படி குடும்பம் நடத்த முடி யும்? புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறைந்த சம்ப ளத்திற்கு வேலை செய்வதால் அவர்களுக்கு முதலாளி கள் வேலை தருகிறார்கள். 

மாரிமுத்து (42), ராமநாதபுரம் மாவட்டம்

நான் கடந்த 12 ஆண்டுகளாக திருப் பூரில் டெய்லராக வேலை செய்து வரு கிறேன். எங்கள் ஊரில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அங்கு எனது அப்பாவும், குடும்பத்தினரும் நெல் சாகுபடி செய் கின்றனர். அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ முடியாது என்பதால் நான் இங்கு வந்து வேலை செய்து கொண்டி ருக்கிறேன். ஆனால் இப்போது திருப்பூ ரில் பல கம்பெனிகளில் ஏறி இறங்கினாலும் வேலை இல்லை. நல்ல சீசனில் ஒரு வாரத்திற்கு 7000 ரூபாய் கூட  கிடைக்கும். ஆனால் இப்பொழுது தேடித்தேடி வேலை பார்த்து ரூபாய் 2000, 3000 சம்பாதிப்பதே பெரும்பாடாக உள்ளது. இங்கே கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க் கும் வாழ்க்கை நடத்துவதற்கு சரியாக இருக்கும். சேமிக்க முடியாது. மழையை எதிர்பார்த்து இருக்கும் விவசாயத் தில் கிடைக்கும் வருமானம் கூடுதல் செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும். இப்போது வேலையில்லாத சூழ் நிலையில் சிரமமாக இருக்கிறது. குடும்பத்தில் யாருக் காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவ மனைக்கு தான் போவோம் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு இருந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். வருடத்திற்கு மூன்று, நான்கு மாதம் நானும் ஊரில் சென்று விவசாய வேலை செய்வேன். இப்போது இங்கே வேலை கிடைக்காவிட்டால் வேறு வேலை தேடிப் போவேன். ஏற்கனவே கட்டடத் தொழில், ஹோட்டல் வேலை ஆகிய வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். கிடைக்கக்கூடிய வேலையை செய்வேன். திருப்பூரில் இப்போதைய நிலை தொடர்ந்தால் கஷ்டம் தான். நான் மட்டும் இல்லை இங்கு வேலை செய்யும் பலரும் வேலை கிடைக்காமல் வேறு வேலைக்கு சென்று இருக் கிறார்கள், இங்கிருந்து வேலை கிடைப்பதற்காக வேறு ஊர்களுக்கும் மாறிப் போய் இருக்கிறார்கள். கடந்த ஏழு  ஆண்டுகளாகவே திருப்பூரில் நிலைமை நன்றாக இல்லை. இனி இந்த வேலை நமக்கு ஆகாது என்று தெரியும்போது நானும் கிளம்பி விடுவேன்.

லிபன் (26), ஒடிசா மாநிலம்

நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்கு வந்தேன். நான் சிங்கர் டைலராகவும், எனது அண்ணன் பவர் டேபிளிலும் வேலை செய்கி றோம். சாமுண்டிபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கி றோம். சொந்தமாக சமைத்து சாப் பிட்டு வேலைக்கு போய் வருகிறோம். நான் இங்கு வந்த இந்த 10 ஆண்டு காலத் தில் இப்போது இருக்கும் நிலையை போல் பார்த்த தில்லை. வேலை மிகவும் குறைவாக இருக்கிறது.  நான் குடியிருக்கும் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் 17 பேர் இருக்கிறோம். எல்லோருக்குமே இது தான் நிலைமை. வழக்கமான வேலை கிடைக்கவில்லை. கிடைக் கும் கொஞ்ச வேலையை செய்து சமாளித்துக் கொண்டி ருக்கிறோம். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை, ஊரில் எனது  அப்பா, அம்மா எங்களுக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. அத னால்தான் நானும் எனது அண்ணனும் இங்கு வந்து  வேலை செய்கிறோம். ஆனால் இங்கேயும் நெருக்கடியாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

புலம்பெயர்ந்து வந்த வெளி மாநில தொழிலா ளர்களால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று சொல்லப்படும் நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை என்ற நிலைமையை நேரில் காண முடிகிறது.

-லட்சுமி பழனிச்சாமி, ஈட்டிவீரம்பாளையம்

பையன் படிச்ச அளவுக்கு வேலை கிடைக்காததால கடனுக்கு நாலு மெஷினை வாங்கி தொழில் தொடங்க னோம். ஒரு மூணு மாசத்துக்கு கட்டு இருந்துச்சு. அப்புறம் சுத்தமா கட்டு இல்லாம போயிருச்சு. வேற ஒரு நாலு பக்கம் பார்த்தோம், எங்கேயும் கட்டு கிடைக்கல. ரெண்டு பேரு வேலைக்கு வந்துட்டு இருந்தாங்க அவங்களுக்கும் வேலை கொடுக்க முடி யாம போயிருச்சி. அவங்க வேற கம்பெ னிக்கு போயிட்டாங்க. இப்ப கம்பெ னிக்கு கரண்ட் பில் கட்டணும், அப்புறம் வாங்கின கடனுக்கு வட்டி கட்டுறதுக் காக பையன் வெளிய வேலைக்குப் போயிட்டிருக்கான். திருப்பூர்ல தொழில் ரொம்பவும் பாதிச்சிருக்கிறது. எங்க வீட்டுகாரருக்கு முன்ன மாறி வேலை இருக்குறதில்லை வாரத்துக்கு நாலு நாள் தான் வேலை இருக்கு. திருப்பூர் முன்ன இருந்த மாறி இப்போ இல்ல. 

- முருகன், துணி வியாபாரி, பாண்டியன் நகர்

ஒரு பத்து வருஷமா துணி வியாபா ரம் பண்ணிட்டு இருக்கேன். வண்டியில துணி எடுத்துட்டு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஏரியா போயிட்டு இருக்கேன். பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், அண்ணாநகர், செட்டிபாளையம், குன் னத்தூர் இந்த ஏரியால எல்லாம் நான் துணி வியாபாரம் பண்ணிட்டு இருக் கேன். முன்ன மாதிரி இப்போ ஆளு நடமாட்டமே பார்க்க முடியலை. ரொம்ப கம்மி ஆயி டுச்சு. கடனுக்குத்தான் துணி குடுத்துட்டு இருக்கேன். என் கிட்ட துணி வாங்குனவங்களே நிறைய பேருக்கு வேலை இல்லைன்னு, வாடகை கொடுக்க முடியலைனு சொல் லிட்டு ஊருக்குப் போயிட்டாங்க.  பெட்ரோல் விலை ஏத்திட்டாங்க இப்ப இருக்குற நிலைமைய பார்த்தா கொரோனா காலம் கூட பரவாயில் லைனு தோணுது. பெட்ரோல் அடிக்குற அளவுக்குக்கூட வியாபாரம் இல்ல. முன்னாடி இருந்த ரேட்டுக்கு  இல்லாட்டி யும் கொஞ்சம் நூல் விலை கம்மியா ஆச்சு, ஆனா அப்ப வும் பொருளோட விலை கம்மி ஆகல. அத விட வேலை  ஜாஸ்தியாத்தான்  இருக்கு. அதை  எடுத்துட்டு வந்து நாங்க வியாபாரம் பண்ணும் போது வாங்குற ஆள் இல்லை. நூல் விலை கொறைஞ்சி தொழில் கொஞ்சம் டெவலப் ஆனாத் தான் முன்னமாதிரி வரும். 

-சங்கர், பழைய இரும்பு வியாபாரி, முட்டியங்கிணறு

த்து விற்பனை செய்து வர்ரேன். முன்பு போல இப்பொழுது எங்களுக்கெல் லாம் விலை தர்ரதில்லை. போன வரு சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒரு கிலோ விற்கு 23 ரூபாய் கொடுத்துட்டு இருந் தாங்க. இப்போ வெறும் 18 ரூபாய் தான் தர்ராங்க. அட்டைக்கு ஒரு கிலோ 16 ரூபா தந்துட்டு இருந்தாங்க. இப்போ வெறும் 9 ரூபாய் தான் தர்ராங்க. வியாபாரம் எல்லாம் முன்ன மாதிரி எல்லாம் இல்ல. எது கேட்டாலும் கொரோனா காரணம் சொல்றாங்க ஒரு நாளைக்கு 10 கிலோ மீட்டர்  காலை 6 மணியிலிருந்து, சாயங்காலம் 6 மணி வரைக்கும் இந்த சைக்கிள்ல தான் சுத்திட்டு இருப்பேன். ஏதோ சொந்த  வீடு இருக்கறதுனால பிரச்சனை இல்லை. அன்னன் னைக்கு கிடைக்கிறத வச்சு எப்படியோ சமாளிச்சுட்டு இருக் கேன். சொந்த வீடு இல்லாதவங்கல நினைச்சா ரொம்ப பாவமா தான் இருக்கு. மொத்த வியாபாரிகள் விலையை குறைச்சதா தெரி யல. இங்க இருக்க நடுவுல இருக்க இந்த வியாபாரிகள் தான் வந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிட்டு கம்மியான ரேட் டுக்கு எடுங்க பேசிக்கிறாங்க. அதனால எங்களுக்கு இவ் வளவு ரேட் கம்மியா கொடுக்கிறாங்க. காட்டு வேலை கள் கிடைச்சா காட்டு வேலைக்கு போயிட்டு இருப்பேன் இப்ப காட்டு வேலையும் அவ்வளவு இல்லை. ஆதார் கார்ட் இல்லாதனால நூறு நாள் வேலைக்கு போக முடியல. அப் படியே காலத்த தள்ளிட்டிருக்கேன்.

-மேனகா, மீன் வியாபாரி, பழங்கரை

ஏழு வருஷமா இந்த வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். தினமும் மீன் களை வறுத்து விற்பனை செய்வது தான் என்னுடைய தொழில். முன்னெல்லாம் ஒரு நாளைக்கு 30 கிலோ வித்துட்டு இருந்தேன். இப்ப 10 கிலோ விக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. கிட்டத்தட்ட ஒரு 2500 ரூபாய் சம்பாதிச்சிட்டு இருந்தேன். இப்ப 500 ரூபாய் கிடைக் கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. முன்ன மாதிரி கம்பெனி யில் வேலை  இருக்கிறது இல்லை. நிறைய இந்திக்காரங்க என் கிட்ட மீன் வாங்கி சாப்பிடுவாங்க. இப்போ கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் போயிட்டாங்க. பஸ் எல்லாம் கூட  சாயங்காலம் காலியாக தான் போயிட்டு இருக்கு. ஆனா  மீன் விலை எல்லாம் ஜாஸ்தி ஆயிடுச்சு. நெய் மீன் கிலோ 100 ரூபாய், பாறை மீன் 120 ரூபாய்க்கு வாங்கிட்டு இருந்த இப்ப அதெல்லாம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. மசாலா, உப்பு, எல்லா பொருளோட விலையும் ரேட் ஆயிடுச்சு. நம்ப ரேட் ஏத்துனா வாங்குறதுக்கு ஆல் இல்ல. நாங்க ரேட் ஏத்தல அதுக்கே வாங்குரதுக்கு ஆல் இல்ல. கம்பனி ஆல் இருந்தாதான் எங்களுக்கு வியாபாரம்.

-சதீஷ்குமார், ஆட்டோ ஓட்டுநர், பெருமாநல்லூர்

ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு ஆட்டோ ஓட்டம் இருந் துச்சு 300 ரூபா டீசல், 200 ரூபா ஆட்டோ பராமரிப்பு போக ஒரு 500 ரூபாய் இருக்கும். இப்ப வெல்லாம் 500 ரூபாய்க்கு ஓடு றது ரொம்ப சிரமமாயிருச்சு. வருஷத்துக்கு ஒரு வாட்டி எப்சி ன்னு 25 ஆயிரம் ரூபாய் எடுத்து வைக்கணும். காலைல அஞ்சு மணில இருந்து ராத்திரி 11 மணி வரைக்கும் ஆட்டோஓட்டி வெறும் 500 தான் இப்போ எல்லாம் சம்பாதிக்க முடியுது. இப்போ இல வச பஸ் வந்ததுக்கு அப்புறம். இன்னும் ரொம்ப கம்மியா யிருச்சு. இப்போ வர்ர 500 ரூபாய்ல 200 ரூபாய்க்கு டீசல் போக 300 ரூபாய்ல வண்டி பராமரிப்பு வீட்டு செலவு இதெல் லாம் பாக்கரோம்.

-தினேஷ் குமார் உணவக உரிமையாளர், நியூ திருப்பூர்

நாங்க ஒரு அஞ்சு வருஷமா ஹோட் டல் வச்சிருக்கோம். கம்பெனிக்குள்ள கேண்டின் வச்சிருக்கோம்.  பொங்க லுக்கு முன்னாடி வரைக்கும் கூட ஓர ளவுக்கு வியாபாரம் நடந்துட்டு இருந் துச்சு. ஒரு 45 பேருக்கு அக்கவுண்ட்ல உணவு கொடுத்துட்டு இருந்தோம். பொங்கல் கழித்து ஊருக்கு போன வங்க திரும்ப வரவே இல்ல. போன் பண்ணி கேட்டா வேலைக்கு கூப்பிடல அதனாலதான் ஊர்ல  இருக்கோம்ன்னு சொல்றாங்க. இப்ப 15 பேருக்கு தான் அக்கவுண்ட்ல கொடுக்குறோம். இங்க இருக்குற கம்பெனி களை நம்பி தான் நாங்க இங்க ஹோட்டல் வச்சிருக்கோம். இந்த கம்பெனிகள் நடக்கலைன்னா எங்க வியாபாரமும் நடக்காது. ஒரு நாளைக்கு 7000 ஓடுன இடத்தில இன்னைக்கு வெறும் 2500 ரூபாய் தான். ஓடுது  நாங்க வேலைக்கு ஆறு பேர் வச்சிருந்தோம். ரெண்டு பேத்த வேலைய விட்டு அனுப்பிட்டோம். இப்ப நாலு பேரு தான் இருக்காங்க. வர்ர துக்கும் செலவுக்குமே கரெக்டா இருக்கு. கம்பெனி தொழி லாளர்கள் நம்பி தான் எங்களுக்கான வாழ்வாதாரமே இருக்கு.

- சுவாராக் சிங்கர், டைலர், அசாம்

அசாம்ல இருந்து வந்து இருக்கேன். இங்க வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் ஆச்சு.  சிங்கர் டைலர் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் என்னுடைய குடும்பம் எல்லா ரும் அசாம்ல தான் இருக்காங்க. இங்க நான் வேலை செஞ்சி அங்க பணம் அனுப்புறேன்.  இப்பல்லாம் வேலை ரொம்ப கம்மியா தான் இருக்கு. முன்ன மாதிரி எல்லாம் பணம் அனுப்ப முடியல. இன்னைக்கு கூட வேலை இல்லாம ரூம் கிளம்பி போயிட்டு இருக்கேன். எங்க ஊர்ல வேலை இல் லாம இங்க வந்து வேலை செஞ்சிட்டு இருக்கேன். இப்ப இங்கேயும் வேலை ரொம்ப கம்மி ஆயிடுச்சு. முன்னெல் லாம் ஒரு பட்டி போட்டா ரெண்டு ரூபா தருவாங்க இப்போ  ஒரு ரூபா தான் தராங்க இப்படியே போயிட்டு இருந்துச்சு அடுத்து என்ன பண்ணனும் யோசிக்க வேண்டியதா தான் இருக்கு.

-குரு லட்சுமி, எஸ்.எஸ்.நகர்

எனக்கு 50 வயசுக்கு மேல ஆகுது வீட்டு பக்கத்திலேயே இருக்கிற கம் பெனியில் தான் வேலைக்கு போயிட்டு இருந்தேன். ஒரு நாளைக்கு ஒன்னரை ஷிப்ட் வேலை செஞ்சா, வார செல வுக்கு போதுமானதாக இருக்கும். இப்ப எல்லாம் ஒரு ஷிப்டே கிடைக்கிறது இல்ல. வாரத்துல ரெண்டு நாள் வேலை இருக்கு அவ்வளவுதான். எங்க கம் பெனி எல்லாம் எப்பவுமே மூடவே மாட்டாங்க. இப்ப அடிக் கடி லீவு விடறாங்க. இப்படியே இருந்தா என்ன பண்ற துன்னு தெரியல.

-இந்திரா, அப்பியாபாளையம்

நான் செக்கிங் வேலை செஞ்சுட்டு இருக்கேன்.  எனக்கு ரெண்டு குழந்தைங்க. அதனால கம்பெனிக்கு எல்லாம் போக முடியாது. வீட்டிலேயே கொண்டு வந்து பீஸ் போடு வாங்க. அதை செக் பண்ணி குடுப்பேன். வீட்டு வேலை  எல்லாம் முடிச்சுட்டு குழந்தைகளை தூங்க வச்சுட்டு வேலை செஞ்சா ஒரு நாளைக்கு 150 ல இருந்து ஒரு 200 பீஸ் பார்ப்பேன்.  ஒரு வாரத்துக்கு 1000 இருந்து 1500 ரூபாய் கிடைக்கும். இப்பல்லாம் கம்பெனி ஷிப்ட்க்கே வேலை இல்லன்னு எங்களுக்கு பீஸ் கொண்டு வந்து தர்ரதில்ல.