மாநிலக்குழு உறுப்பினரும் மலர்க்குழு கன்வீன ருமான கே.ஜி.பாஸ்கரன் பேசுகையில், “தோழர் ஏ.நல்லசிவனின் வாழ்க்கை வரலாற்றை நாம் தனித்துப் பார்க்க முடியாது. நெல்லை மாவட்ட, தமிழக அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் அவரது வாழ்க்கை. பழிவாங்கப்பட்ட வர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்துச் சேவை யும் செய்ய வேண்டும் என்பதை நிரூபித்துக்காட்டியவர். அதற்குச் சிறந்த உதாரணம் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வெற்றி கண்டது. சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது மக்கள் பிரச்சனைகளுக்கும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தார். வீரவநல்லூர் கோமதி மில்லில் அதன் முதலாளி போட்ட பணம் ரூ.7 லட்சம். அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் பணமோ ரூ.70 லட்சம், 90 சதவீதப் பணத்தைப் போட்டு விட்டு 10 சதவீதம் பணம் போட்டவர்களை நிர்வாகிகளாகப் போடக்கூடாது என வாதிட்டவர். எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். அதற்காக ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்தார். இது சரியா? இந்தப் பணத்தைக் கொண்டு வேறு தொழில் தொடங்கலாம் எனச் சில உறுப்பினர்கள் கூறினர், 50 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கி றார்கள். பசித்தவன் முன்னால் கடவுள் கூடச் சோறு வடிவத்தில் வந்தால் தான் வரவேற்பு இருக்கும். சத்துணவுத்திட்டம் அவசியமான ஒன்று. இன்றைக்கும் சத்துணவு தொடர்வ தற்குத் தோழர் நல்லசிவன் முக்கியக் காரணம் என்றார்.