articles

img

மலை தோன்றும் முன்பே தோன்றிய பாசி மடியும் ஆபத்து - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகின் மிகப்பழமையான பாசி இனத்தாவரம் காலநிலை சீரழிவால் அழியும் ஆபத்தில் உள்ளது. டக்காக்கியா (Takakia) என்ற இந்த பாசி இனத் தாவரம் 390 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இமயமலையில் காணப்படும் இத்தாவரம் எத்தகைய மோசமான காலநிலையையும் சமாளித்து வாழும் திறன் பெற்றது என்றாலும் இப்போது இது அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் காணப்படும் மிக வேகமாக தன்னைத்  தகவமைத்து பரிணாம மாற்றம் பெற்று வாழும் ஒரு  சில தாவரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இது மட்டும் இந்த பாசியை அழிவில் இருந்து காக்கப் போதுமானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய, மெதுவாக வளரும் தன்மை யுடைய இந்த பாசியினம் உலகில் யு எஸ், ஜப்பான்,  திபெத்தில் ஒரு சில குறிப்பிட்ட தொலைதூர இடங்க ளில் சிறிய அளவில் மட்டுமே வாழ்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக இந்த தாவரத்தின் வாழி டம் மற்றும் வாழ்க்கை முறையை காலநிலை  எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய ஆய்வா ளர்கள் இதன் டி என் ஏவை முதல்முறையாகப் பகுப்பாய்வு செய்து ஆராய்ந்தனர். இமயமலை தோன்றுவதற்கு நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாசியினம் தோன்றியது. பிறகு இதன் அடியிலேயே இமயமலை உருவானது. இத னால் இது இப்பகுதியில் விரைவான தகவ மைப்பைப் பெற்று வாழத்தொடங்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உயிர் வாழும் புதைபடிவம்

இதை உயிர் வாழும் ஒரு புதைபடிவமாக (living  fossil) பாதுகாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஜெர்மனி ஃப்ரேபர்க் (Freiburg) பல்கலைக்கழகத்தின் தாவர உயிர்த்  தொழில்நுட்பவியலாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரை யின் ஆசிரியர் ரால்ஃப் ரெஸ்கி (Ralf Reski) கூறு கிறார். இதுபற்றிய ஆய்வுக் கட்டுரை செல் (journal Cell) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

ஆய்வின் சிக்கல்கள்

இமயமலையின் மாறும் மோசமான பருவநிலை  மற்றும் சூழல் அச்சுறுத்தலால் உயரமான இடங்க ளுக்கு விரைவாகச் செல்வதில் இருக்கும் பிரச்ச னைகளால் பழமையான இந்த பாசியைத் தேடிய பயணம் நேரடியாக மேற்கொள்ளப்படவில்லை. இத னால் பருவநிலையின் தன்மைக்கேற்ப ஆய்வுகள்  நாட்கணக்கில் நடத்தப்பட்டன என்று பயணத்திட்டத்  தின் துணைத்தலைவர் மற்றும் தாவரவியல் நிபு ணர் ராயங் ஹூ (Ruoyang Hu) கூறுகிறார். பரிணாம மாற்றங்களால் டி என் ஏவில் மாறு தல்களை ஏற்படுத்தி புற ஊதாக்கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்தில் இருந்து மீண்டு வந்து இத்தாவ ரங்கள் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழும் திறனைப் பெற்றன. பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன.

பனிப்பொழிவினால் பாதிப்பு

இத்திறமையால் இவை நெகிழ்வுத்தன்மை யுடன் உறுதியாக பல கிளைகளுடன் வளர்ந்து கடு மையான பனிப்புயல்களை சமாளித்து வாழ்கின்றன  என்று பெய்ஜிங் கேப்பிட்டல் நார்மல் பல்கலைக் கழ கத்தின் தாவரவியல் ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்  கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் யிகுன் ஹி  (Yikun He) கூறுகிறார். இதன் வளரும் சூழல் பற்றி  விரிவாக ஆராயப்பட்டது. இது வளரும் இடத்தின் பருவநிலையில் நிலவும் வெப்பம் படிப்படியாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் உணர்ந்த னர். வெப்ப உயர்வால் பனிப்பாறைகள் உருகு கின்றன. இது இவற்றை முன்பு இல்லாத அளவு புற  ஊதாக்கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாக்குகிறது. பத்தாண்டு கால ஆய்வில் இந்த பாசியின் வளர்ச்சி  மற்றும் இதன் பரவல் ஆண்டிற்கு 1.6% என்ற அள வில் குறைவது தெரியவந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முழுவதும் இத்தாவரம் வாழ்வதற்கு தகுதியான நிலப்பரப்பு 1000-1500 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிடும் என்று ஹூ எச்சரிக்கிறார். உயிர் காக்கும் முயற்சிகள் ஆய்வுக்கூடத்தில் இதன் சில மாதிரிகளை பெருக்கமடையச்செய்து திபெத்தில் உள்ள சில குறிப்பிட்ட சோதனை நிலப்பகுதிகளில் வளர்த்து மறு நடவு செய்வதன் மூலம் டக்காக்கியாவை பாது காத்து இதன் ஆயுளை நீட்டிக்கச்செய்யும் முயற்சி யில் தாவரவியல் ஆய்வாளர்கள் இப்போது தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பனி மலையில் உருவான இந்த அரியவகை பாசியினம் பூமியில் இருந்து அழியாமல் பாதுகாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.