தீக்கதிர் தன்னுடைய 5ஆவது பதிப்பை திருநெல்வேலியில் துவங்குவது வர லாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. 1963 இல் துவங்கி 2023 இல் தனது வைர விழா ஆண்டில் தீக்கதிர் 5ஆவது பதிப்பை திருநெல்வேலியில் 22.09.2023 இல் துவங்குகிறது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) தமிழ்நாடு மாநிலக்குழுவால் நடத்தப்படும் அதிகாரப்பூர்வமான நாளி தழ். பெருமுதலாளிகளாலும், கார்ப்பரேட்டு களாலும் வணிக நோக்கத்துடன் நடத்தப் படும் அச்சு ஊடகங்களுக்கு இடையே லாப நோக்கமின்றி கொள்கைப் பிடிப்புடன், சமரசமின்றி ஒரு தமிழ் நாளிதழ் தொடர்ந்து 60 ஆண்டுகளாக வெளி வருவது என்பது சாதாரண சாதனையல்ல. கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பர உதவியால் மட்டுமே உயிர் வாழும் அச்சு ஊடகங்களின் மத்தியில் அத்தகைய ஆதரவு எதுவுமின்றி உழைப்பாளி மக்க ளின், எளிய மக்களின், பல்லாயிரக்க ணக்கான கட்சி ஊழியர்களின் ஆதரவால் மட்டுமே தீக்கதிர் இத்தகைய சாதனையைச் செய்ய முடிந்திருக்கிறது . கடந்த 60 ஆண்டுகளில் தேசிய அள விலும், மாநில அளவிலும் எத்தனையோ அரசியல் மாற்றங்கள். அதிலும் குறிப்பாக நவீன தாராளமயக் கொள்கைகளும், வகுப்பு வாத அரசியலும் கோலோச்சி வரும் காலத்தில் தீக்கதிரின் பங்கு சாதாரண மானதல்ல. தனது முகப்பு முழக்கமாகப் பிர கடனப்படுத்தியுள்ள ஊடக உலகில் உண்மை யின் பேரொளி எனும் வாசகத்திற்கு ஏற்ப தீக்கதிர் முழுமையாக செயல்பட்டு வருகிறது. சாதகமற்ற சூழல்களில் கூட தொடர்ந்து வெளி வரும் தீக்ககதிரின் பயணம் சவால் நிறைந்தது. சிரமங்கள் மிகுந்தது. எனவே தான் தீக்கதிரின் 5ஆவது பதிப்பின் துவக்கம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
மவுனம் காக்காத மகத்தான ஏடு
கார்ப்பரேட்டுகளின் உற்ற நண்பனா கவும், நம்பிக்கைக்குரிய ஏவலாளாகவும் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான ஆட்சியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கார்ப்ப ரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் சலுகைகளாக, கடன் தள்ளுபடியாக வாரி வழங்கப்பட்டு வருகிறது. எளிய மக்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது. வெற்றுப் பெருமைகளும், சுய பாராட்டுகளும் அள்ளி வீசப்பட்டு, எளிய மக்கள் நய வஞ்சகமாக ஏமாற்றப்படுவதை அன்றாடம் சந்திக்கி றோம். உழைப்பாளி மக்களின் உரிமைகள் சட்ட ரீதியாகவே மறுக்கப்பட்டு, எல்லையற்ற சுரண்டலுக்கான வழிகள் திறந்து விடப்படு கின்றன. அரசியல் சட்டத்தின் மாண்புகளான மதசார்பின்மை மற்றும் ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது. வகுப்பு வெறி ஊட்டப் பட்டு, பசுப் பாதுகாப்பு, மதமாற்றம், லவ் ஜிகாத் என்ற போலி முழக்கங்களால் சிறுபான்மை மக்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகின்ற னர்.
இத்தகைய தாக்குதல்கள் வெகு மக்க ளுக்கு எதிராகவும், உழைப்பாளி மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதி ராகவும் நடைபெறும்போது பெரும்பான்மை வாதத்திற்கு உட்பட்டோ, அரசின் சலுகைகள் பறிக்கப்படும் என்பதனாலோ அல்லது அரசின் கொடும் கரங்கள் தங்களுக்கு எதிராக பாயும் என்ற அச்சத்தினாலோ பெரும்பா லான ஊடகங்கள் அவற்றிற்கு எதிராக எழுதாமல் கள்ள மவுனம் காக்கிற போது, தீக்கதிர் அவற்றை அம்பலப்படுத்துவதோடு அரசுக்கு எதிராக தைரியமாகக் களமாடு கிறது. விவசாயிகள் போராட்டத்தின் போதும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் இதை நேரிடையா கக் கண்டோம். ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ - எனும் குறளுக்கு ஏற்ப தவறுகள் நடக்கும் போதெல்லாம் அவற்றைச் சுட்டிக் காட்டும் ஊடகம் தீக்கதிர் நாளிதழ். தீக்கதிர் நாளிதழ் தனது 5ஆவது பதிப்பை திருநெல்வேலியில் துவங்குவது பெருமைக் குரிய ஒரு தருணம். உடுக்கை இழந்தவன் கை போல சிறுபான்மை மக்கள் தவிக்கும் போது அவர்களின் உரிமைக்காக மட்டு மன்றி பெரும்பான்மை, சிறுபான்மை வகுப்பு வாத பேராபத்துக்கு எதிராகவும், சாதியப் பாகுபாடு, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் சமரசமின்றி சமர் புரியும் தீக்கதிர் சிறுபான்மை மக்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஓர் ஆயுதம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.