articles

img

வேலையின்மையின் தீவிரத்தை குறைத்துக் காட்டும் ஆபத்து! - பேரா. அருண்குமார்

அண்மையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் திரு.விவேக்  தேப்ராய் இந்தியன் எக்ஸ்பிரஸ் தின சரிக்கு எழுதிய கட்டுரையில், மக்கள் தொகை வளர்ச்சி சுமார் 1.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 0.8 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளதை பொருளாதார வல்லுநர்கள் புறக்கணித்து வருவதாகவும், இதனால் வேலை வாய்ப்பு பெருக்கம் அதிகளவில் தேவைப்பட வில்லை என்றும் தற்போது வெளியிடப்படும் வேலை வாய்ப்பு தேவை குறித்த புள்ளி விபரங்கள் 2003-2004 ஆண்டின் அடிப்படையிலான விபரங்கள் என்றும் தற்போது தேவைப்படும் வேலை வாய்ப்புகள் 5 முதல் 8 மில்லியன் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் சக்தி

அவருடைய வாதங்கள் தற்போதைய அரசின் சிந்தனையை பிரதிபலிக்கிறது.எனவே இதனை முறை யாக ஆய்வு செய்யும் தேவை உள்ளது. முதலாவ தாக, தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எவ்வாறு தொழிலாளர் சக்தியை அதிகரிக்கிறது? சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரையறை யின்படி, தொழிலாளர் சக்தி என்பது 15 முதல் 64 வய துள்ளவர்களை - குறிப்பாக வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை குறிக்கும். தற்போதைய மக்கள் தொகை பெருக்கம் என்பது அடுத்த 15 ஆண்டு களுக்கு பின்பே தொழிலாளர் சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அவர்களே பின்னர் வேலைவாய்ப்பை நோக்கி வருவார்கள். விவேக் தேப்ராய் அவர்கள் 2003-2004 மக்கள் தொகை பெருக்க கணக்கீடுகளை தள்ளுபடி செய்தாலும், அப்போது பிறந்த குழந்தைகள்தான் தங்களின் பள்ளிக் கல்வியை முடித்து 2018-2019ல் தொழிலாளர் சக்தியாக  மாறியுள்ளனர். 2020-2021ல் பட்டம் பெற்றவர்களும் வேலைவாய்ப்பு சந்தையில் சேருவர். மேலும் பட்டம் பெற்ற பின்பும் பலர் ‘தொழிலாளர் படையில்’ சேராமல் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த வரு மானம் கொண்ட பிரிவினரின் குழந்தைகள் அதிக நாட்கள் வேலை இல்லாமல் இருக்க முடியாது. அதே போல் மத்திய தர குடும்பத்துக் குழந்தைகளும் சமூக அழுத்தங்கள் காரணமாக வேலை செய்யும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். அதில் மிகவும் சிலர் இளவயது தொழில் முனைவோராக உருவாகி வருகின்றனர். இதற்கு தேவைப்படும் மூலதனம் மற்றும் திறன்களை சிலரே கொண்டுள்ளனர்.

இரண்டாவது, தற்போது இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுள் 70 வயதை தாண்டியுள்ளது. ஆனாலும் குழந்தைகள் இறப்பு அதிகமாகவே உள்ளது. எனவே குழந்தை பிறப்புகளை, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்புகளைக் கொண்டு கழிக்க வேண்டும்.  இதன் மூலம், தொழிலாளர் சக்தியில்  15 வருடங்களில் சேரும் இளம் வயது தொழிலாளர்க ளின் உயர்ந்து வரும் எண்ணிக்கையை கணிக்க முடியும். கடந்த 2000 ஆம் ஆண்டில் இத்தகைய பெருக்கம் என்பது 2,80,61,890 என்ற அளவிலும், 2002 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,79,90,015 என்ற  அளவிலும், கடந்த 2005இல் 2,77,83,231 என்ற அள விலும் கடந்த 2007இல் 2,74,56,018 என்ற எண்ணிக்கை யிலும் இருந்தது. கடந்த 2020இல் இது 2,41,67,206 என்ற எண்ணிக்கையை அடைந்துவிட்டது.

எதற்காக இந்த ஆண்டுகளை தேர்வு செய்தோம் என்றால் இந்த ஆண்டுகளில் ஏற்பட்ட இளம் தொழிலா ளர் பெருக்கம் முதல் 2.4 கோடி முதல் 2.8 கோடி என்ற அளவில் 2000 முதல் 2022 ஆண்டுகளில் காணப் பட்டது. இந்த ஆண்டுகளில் தான் அவர்கள் பள்ளி படிப்பை முடித்தும், இடைநிலை, இளநிலை உயர் கல்வியைப் பெற்றும் வேலை வாய்ப்பு சந்தையை நோக்கி வருகின்றனர். கல்வி தொடர்பான புள்ளி விபரங்களை பார்க்கும் போது, எந்த வகுப்பு பிரிவினர் தங்களை பட்டம் பெற பதிவு செய்து கொள்கின் றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்தமுறை யில் கணிக்கும் போது 2022இல் தொழிலாளர் சக்தி யாக சேருபவர்கள் 172,28,780 என்ற அளவில் 2007இல் பிறந்தவர்கள்; இது முறையே 25,83,841 என்ற அளவில் 2005இல் பிறந்தவர்கள்; 55,98,003 என்ற அளவில் 2002ல் பிறந்தவர்கள்; மற்றும் 14,03,095 என்ற அளவில் 2000இல் பிறந்தவர்கள் என்று கணக்கிட முடியும். இவற்றின் மொத்த எண்ணிக்கை 2,75,13,718 ஆகும். பல்வேறு சமூக காரணங்களால் குறைந்த அளவு பெண்களே தொழிலாளர் சக்தியில் சேருகின்றனர். இத்தகைய எண்ணிக்கை விபரங்களை ஆண்கள் மற்றும் பெண்கள் என்று வேறுபடுத்தி பார்க்க வேண்டும். கடந்த 2022ல் 1068 ஆண்களுக்கு 1000 பெண்கள் இருந்தனர். இது மொத்த மக்கள் தொகை யில் 48.35 சதவீதம் பெண்கள் என்பதை காட்டுகிறது. சுமார் 25 சதவீதம் பெண்கள் பல்வேறு சமூக காரணங்க ளால் வேலை வாய்ப்பு சந்தைக்கு வரவில்லை என்றாலும் சுமார் 2,41,87,591 இளம் பெண்கள் தொழிலாளர் சக்தியாக 2022ல் நுழைந்துள்ளனர்.

அமைப்பு சாரா துறை

தற்போது அமைப்பு சாரா துறைகளும் இயந்திர மயமாக்கப்பட்டு, குறைந்த அளவு வேலை வாய்ப்பு களை கொண்டு இயங்குகிறது. ஏற்கெனவே இத்துறை களில் பணிபுரியும் 94 சதவீத தொழிலாளர்கள் பெரு வாரியாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். கடந்த நவம்பர் 2022ல் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கான இ-ஷ்ரம் இணைய தளத்தில் 28 கோடி பேர் தங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 94 சதவீதம் பேர் மாத வருமானமாக ரூ.10,000க்கு கீழ்  பெறுகின்றனர். படிப்படியாக, முறைசார் தொழில்க ளில் வேலை வாய்ப்புகள் இல்லாத சூழல் அதிக ரிக்கிறது. இவ்வாறு போதிய, உரிய வேலை வாய்ப்பு கள் இல்லாத நிலை காரணமாக, தகுதி குறைந்த வேலைகளில் அமர்வது, புலனாகா வேலையின்மை போன்ற காரணங்களால் சிலர் வேலை வாய்ப்புகளை தேடிச் செல்வதை நிறுத்தியே விட்டனர். 

எவ்வளவு பேருக்கு  வேலை தேவை?

இந்த தரவுகள்வேலைவாய்ப்பு மற்றும் வேலை யின்மை பற்றிய மக்கள் கமிஷன் அறிக்கையின் அடிப்ப டையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் சாத்திய மான சக்தி (2000-2022): இதற்கான ஆதாரம்: இந்திய பிறப்பு விகிதம் 1950-2022. அக்டோபர் 25,2022 அன்று Macro trends இணைய தளத்தில் பெறப்பட்டது.

இரண்டாவது அட்டவணையின் படி 2022இல் தொழிலாளர் சக்தியில் சேரும் பட்டம் பெற்றவர்கள். 

  1.  65.3 சதவீதம் பேர் : 2007இல் பிறந்து, உயிர் தப்பிதொழிலாளர் சக்தியில் சேருபவர்கள் 1,79,28,780
  2.  9.3 சதவீதம் பேர்:  2007இல் பிறந்து உயிர் தப்பி தொழிலாளர் சக்தியில் சேர்ந்தவர்கள் 25,83,841
  3.  20 சதவீதம் பேர்:  2002இல் பிறந்து உயிர் தப்பி தொழிலாளர் சக்தியில் சேர்ந்தவர்கள் 55,98,003.
  4.  5 சதவீதம் பேர்: 2000இல் பிறந்த உயிர்தப்பி சேர்ந்தவர்கள் 14,03,095

மொத்தம்        2,75,13,718

எனவே, திருவாளர் விவேக் தேப்ராயின் கணிப்பும் கருத்தும் தவறானவை. வேலையின்மைப் பிரச்சனை யின் தீவிரத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதாகும்.

எனவே, திருவாளர் விவேக் தேப்ராயின் கணிப்பும் கருத்தும் தவறானவை. வேலையின்மைப் பிரச்சனை யின் தீவிரத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதாகும்.

 



 

;