“சங்கிகளுக்கு அறநிலையத்துறை என்றாலே எரிச்சலாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையை கலைக்கும் கோப்பில்தான் முதல் கையெழுத்திடுவோம் என்கிறார் அண்ணாமலை. ஆரூத்ரா பைனான்ஸ் மோசடி விஷயத்தில் தமிழக அரசு இன்னும் நுணுக்கமாகச் சென்றால், அண்ணாமலை அறநிலையத்துறை கோப்பில் கையெழுத்துப் போடமுடியாது; ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தான் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும். பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, “பழனி ஒன்றும் சுற்றுலாத்தல மல்ல” என ட்வீட் செய்துள்ளார். பழனி ஒன்றும் நீங்கள் கொள்ளையடிப்பதற் கான இடமும் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பேசியதிலிருந்து...