articles

img

வட்டி உயர்வு வளர்ச்சியைத் தருமா? - அறிவுக்கடல்

வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஏற்றிக்கொண்டே இருக்கிறது. வட்டி விகிதம் உயர்ந்தால் வங்கி களில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் வைப்பு நிதிக்குக் கிடைக்கும் வட்டியும் உயரும். வாங்கியிருக்கிற கடன்களுக்கான வட்டியும் உயரும். என்றாலும், சராசரி இந்தி யர்களில் எவ்வளவு பேர் வங்கியில் வைப்பு  நிதி வைத்திருக்கிறார்கள்? ஆனால், அனே கமாக அனைத்து இந்தியர்களுக்கும் கடன் இருக்கிறது. இஎம்ஐ கட்டாதவர் இந்தியரே இல்லை என்று சொல்லுமளவுக்கு, ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப் பட்டால், முதல் கவலையாக இஎம்ஐ (கடன் தவணை) எப்படிச் செலுத்துவது என்பது தான் வருகிறது. வீடு, வாகனம் போன்றவை மட்டுமின்றி தற்போது மொபைல்கள் போன்ற பொருட்களும்கூட இஎம்ஐயில்தான் அதிகம் வாங்கப்படுகின்றன. அதனால் வட்டி விகிதம் உயர்வு என்பது சாதாரண மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வட்டி விகிதம் ஏன் உயர்த்தப்படுகிறது? பல காரணங்களுக்காக வட்டி விகிதத்தை அரசு பராமரித்தாலும், முக்கியமான காரண மும், தற்போதைய நோக்கமும் பணவீக்கத் தைக் கட்டுப்படுத்துவதுதான். வளர்ச்சியாக இல்லாமல், வழக்கமான அளவை மீறிப் பெரிதாவதைத்தான் வீக்கம் என்கிறோம். அப்படித்தான், பணமும். பணம் அதிகமா கப் புழங்கி, அதனால் அதன் மதிப்புக்குச் சம மான அளவுக்கு பொருள்கள் தரப்பட வில்லையென்றால் பணவீக்கம். தலையைச் சுற்றிக் காதைத் தொடாமல் நேரடியாகச் சொன்னால் விலைவாசி உயர்வு. வட்டி விகிதத்தை உயர்த்தினால், அதிக வட்டி கிடைக்கும் என்று செலவைக் குறைத்து மக்கள் சேமிப்பார்களாம், அதனால் விலை வாசி குறையுமாம்.

மறைமுக வரி உயர்வும் விலைவாசி உயர்வும்

மருத்துவரிடம் சென்ற ஒருவர், அஜீரணத் திற்கு மருந்து கேட்டாராம். அவரைச் சோதித்த அந்த மருத்துவர், அவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டாராம். தான் ஒரு வங்கக் கவிஞர் என்று அவர் பதிலளிக்க, ‘உங்களுக்கு வந்திருப்பது அஜீணரமல்ல, பசி, முதலில் ஏதாவது சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தாராம் என்று ஒரு குஷ்வந்த்சிங் ஜோக் உண்டு. வங்கக் கவிஞர்களுக்கு வரு வாய்க்கு வழியிருக்காது என்ற பொருளில் சொல்லப்பட்டதைப் போலத்தான், பசி ஏப்பத்திற்கும், புளித்த ஏப்பத்திற்கும் வேறு பாடு தெரியாமலிருப்பது. என்னதான் வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், அளவுக்கு மீறிச் செலவு செய்திருந்தால்தானே குறைக்க முடியும்? அத்தியாவசியத் தேவை களுக்கே அதிகச் செலவானால்? மக்களின் கையில் பணம் அதிகமாகப் புழங்கினால் மட்டும் விலைவாசி உயர்வ தில்லை. மறைமுக வரிகள் உயர்ந்தாலும் விலைவாசி உயர்கிறது. மறைமுக வரிகள் என்பவை, பொருட்களின் விலையுடன் சேர்த்து, எப்போதுமே மக்களிடம்தான் வசூ லிக்கப்படுகின்றன. 2012-13 நிதியாண்டில் ஒன்றிய, மாநில அரசுகளின் மொத்த வரி வருவாயில் ரூ.10.37 லட்சம் கோடியாக இருந்த மறைமுக வரிகள், கடந்த (2021-22ஆம்) ஆண்டில் ரூ.25.18 லட்சம் கோடியாக, சுமார் 143 சதவீதமாக அதிகரித்திருக்கின்றன. பொ ருளாதாரம் வளர வளர, வரி வசூலும் அதிக ரிக்கும் என்றாலும், இதே காலகட்டத்தில், நேர்முக வரிகள் வருவாய் 101 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது என்பது, அதிக மறைமுக வரிகள் விதிக்கப்பட்டிருப்பதை விளக்குகிறது.

ஜிஎஸ்டி வசூல் சாதனையின் உண்மை என்ன?

ஜிஎஸ்டி வசூலில் சாதனை படைத்ததாக அரசு அவ்வப்போது அறிவிக்கிறதே, அவ்வள வும் பொருட்களின் விலைகளில்தான் சுமத் தப்படுகின்றன. அதனால், நுகர்வு அதிக ரிக்காமலேயே, அதாவது, மக்கள் ஒன்றும் தேவைக்குமீறிச் செலவெல்லாம் செய்யாம லேயே, விலைவாசி (அரசின் நடவடிக்கை யால்) உயர்ந்திருக்கிறது. அப்படி உயர்ந்த விலைவாசிக்கேற்ப ஊதியம் உயர்வ தில்லை என்பதால், மக்களின் நுகர்வு ஏற்கெ னவே குறைந்துகொண்டுதான் வருகிறது. வட்டி உயர்வு என்பது, அப்படிக் குறைவதை மேலும் குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத் தைத் தாழ்த்தும் பணியையே செய்கிறது. ஆனால், பணவீக்கம் உயர்ந்தால் வட்டி விகிதத்தை உயர்த்துவதைத்தானே ‘பொரு ளாதார நிபுணர்கள்’ பரிந்துரை செய்கிறார் கள்? காய்ச்சல் எதனால் வந்தது என்று பார்க் காமல் சிகிச்சையளித்து எப்படி நோயா ளியை குணப்படுத்த முடியாதோ, அப்படித் தான் இதுவும்! பணவீக்கத்துக்கான காரணம் என்பது, மறைமுக வரிகளின் உயர்வாக இருக்கும்போது, அதைச் சரிசெய்யாமல், எப்படிப் பிரச்சனை தீரும்? சரி... வரி வசூலிக்காமல் எப்படி அரசை நடத்துவது? வரி வசூலிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. சிம்புவும் சந்தான மும் நியூ இயர் பார்ட்டிக்கு நாற்பதாயிரம் ரூபாய் திரட்டுவதற்கு, ஒருவரிடமே கேட்கா மல், நாற்பதாயிரம் பேரிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் கேட்கலாம் என்பார்களே, (அதற்குப் பெயர் பிச்சை என்று பதிலளிப்பாரே!) அதைப் போலத்தான் இப்போதைய வரி வசூல் இருக்கிறது. மறைமுக வரியாக எல்லா மக்க ளிடமும் ஒரே வரி வசூலிக்கப்படுகிறது.

தலைகீழ் வரி விதிப்பு

ஒரே வரி என்றால்? ஒரு சோப் வாங்கி னால் நாம் செலுத்தும் வரியும், அதானி செலுத்தும் வரியும் ஒன்றுதானே? ஆனால், நேரடி வரிகள் என்பவை, வருவாய் போன்ற வற்றின் அளவுக்கேற்ப விதிக்கப்படுவதால், எளிய மக்களை பாதிக்காது. அதையும் கூட, பெரும் வருவாய் உள்ளவர்களைக் கண்டுகொள்ளாமல், நாற்பதாயிரம் பேரி டம் ஆளுக்கு ஒரு ரூபாய் கதையாக, அனை வரிடமிருந்தும் வசூலிக்கவே இந்த அரசு முயற்சிக்கிறது, அதனால்தான் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுவதில்லை. வளர்ந்த நாடுகளின் வரி வருவாயில் 65 சதவீதம் நேரடி வரிகளாகவும், 35 சத வீதம் மறைமுக வரிகளாகவும் இருப்பது பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. 2021-22 நிதியாண்டின் வரி வசூலில் மறை முக வரிகள்தான் 65.75 சதவீதமாக இருந்தி ருக்கின்றன. 34.24 சதவீதம்தான் நேர்முக வரிகள். எளிய மக்களிடம் மிச்சமாகும் தொகை, உடனடியாக அடுத்த செலவிற்குப் பயன்பட்டுவிடும் என்பதால், அதுதான் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். பெரும் செல்வந்தர்களிடம் மிச்சமாகும் தொகை அப்படிச் செலவாகா மல் சொத்து போன்றவையாகச் சேமிக்கப் படும் என்பதால், பொருளாதாரத்தை வளர்க்க அதிகம் பயன்படுவதில்லை. அதனால்தான், வளர்ந்த நாடுகள் இப்படியான விகிதத்தில் வரிகளை வசூலிக்கின்றன. இந்தியாவில் அதைத் தலைகீழாகச் செய்துவிட்டு, பணவீக்கத்துக்கான மருந்து மட்டும் வளர்ந்த நாடுகளைப் போலக் கொடுத்தால், தீர்வு எப்படி வரும்? பணம் புழங்கினால்தான் பொருளாதாரத்திற்கு வளர்ச்சி ஏற்படும். வளர்ச்சிக்கேற்ப வரி வரு வாயும் உயரும். வளர்ச்சிக்கு வழிவிடாம லேயே வரி என்ற பெயரில் சுரண்டினால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ப தெல்லாம் பகல் கனவாகவே இருக்கும்!