articles

img

நெஞ்சை உலுக்கும் பாலஸ்தீன மக்களின் மரணங்கள்! நேதன்யாகு அரசே, அமெ.ஏகாதிபத்தியமே, போரை நிறுத்து! - கே.பாலகிருஷ்ணன்

இன்றைய உலகில் நம் அனைவரின் கண் முன்பே ஒரு  மிகப் பெரும் மனிதத்துயரம் -  திட்டமிட்ட இன அழிப்பு படுகொலை - பாலஸ்தீன பூமியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக சக்திகள் எவ ராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாத அவ லம். ஜியோனிசம் எனப்படும் யூத இன வெறி பிடித்த அதிதீவிர வலதுசாரி பாசிச அர சான - பெஞ்சமின் நேதன்யாகு தலை மையிலான - இஸ்ரேலிய லிக்குத் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம், பாலஸ்தீன மக்களை - குறிப்பாக காஸா பகுதி மக்களை முற்றாக அழித்தொழித்து அந்தப் பிரதேசத்தை கபளீகரம் செய்வது என்ற நோக்கத்துடன் கடந்த ஏழு மாதங்க ளுக்கு மேலாக  கொடிய போரை நடத்தி வருகிறது.

ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் மரணங்கள்

 ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்கள், பாதுகாப்பு கவுன்சில் வற்புறுத்தல்கள், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மா னங்கள். ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகள், சர்வதேசிய கிரிமினல் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. அதிகாரப்பூர்வ கணக்குகளின்படி மே 17 வரை இஸ்ரே லிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ் தீனர்கள் 35303 பேர். இதில் 15000 க்கும் மேற்பட்டோர் பச்சிளங் குழந்தை கள். காணாமல் போனவர்கள் 10000 பேர். படுகாயமடைந்தவர்கள் 79261 பேர். தற் போது வரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50000த்தை நெருங்கும் எனக் கூறப்படுகிறது. மரணமடைந் தோர்களில் சரிபாதிப் பேர் குழந்தைகளும், பெண்களும் என்பது இதயத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்துகிறது. கண்களில் ரத்தம் சொரியச் செய்கிறது. இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதல்க ளால் காஸா நகரமே நொறுங்கிக் கிடக்கி றது. கட்டிடங்கள் நொறுங்கிக் கிடக்கிற காட்சி களும், இடிபாடுகளுக்கு இடையில் தங்க ளது குழந்தைகளை, உறவினர்களை தேடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களின் துய ரக் காட்சிகளும் நெஞ்சை உலுக்குகிறது. 

9 மடங்கு அணு  குண்டுகளுக்குச் சமம் 

காஸா நகரத்தின் மீது மட்டும் இஸ்ரேல் வீசிய குண்டுகளின் அளவும் வீரியமும் - இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை அழித்தொழிக்க அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைப் போல ஒன்பது மடங்கு அணுகுண்டுகளுக்கு சமம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சொந்த நாட்டிலேயே பாலஸ்தீன மக்கள் ஓட ஓட விரட்டி அடிக் கப்பட்டுள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கடைசிப் புகலிட மாக காஸா திட்டின் எகிப்து எல்லையில் இருக்கக் கூடிய ரஃபா நகரத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். 

75 ஆண்டுகளாக நீடிக்கும் பயங்கரம்

இஸ்ரேல் அரசாங்கம் இந்த கொடூர மான மனிதப்படுகொலைக்கு அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய ஏவு கணைத் தாக்குதலை காரணமாக சொல்லு கிறது. ஆனால், உண்மையில் 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல், ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவோடு பாலஸ்தீன மக்கள் மீது இதுவரை காணாத ராணுவ கொடூரத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  அமைதியான பாலஸ்தீன தேசத்தை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் சேர்ந்து 1948ம் ஆண்டு இரண்டாகப் பிரித்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கின. அதற்கு முன்னால் உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இல்லை. 1948இல் இஸ்ரேல் உருவான பிறகு, பாலஸ்தீன  மக்கள் மீது  கொடூர யுத்தம் தொடுத்தனர். அன்று நடந்த அந்த கொடூர மரணத் தாக்குதலை நினைவு கூறும் வகையில் பாலஸ்தீன மக்கள் ‘மே 17 நக்பா நாள்’ என அனுஷ்டித்து வருகின்ற னர். இது பாலஸ்தீன மக்களின் பேரழிவு நாள் என நினைவு கொள்ளப்படுகிறது.  அன்று முதல் கடந்த 75 ஆண்டுக ளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்கள் மீது விவரிக்க முடியாத சித்ரவதைகளையும், ராணுவத் தாக்குதல்களையும் இஸ்ரேல் தொடர்ந்து கொண்டுள்ளது. பாலஸ்தீ னர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நாட்டையும் ஆக்கிரமித்து அம்மக்களை அடித்து விரட்டி வருகிறார்கள். இங்கு வாழும் பல லட்சம் மக்கள் சிறைக் கைதிகளைப் போல அடைக்கப்பட்டுள்ளார்கள். உலகத்தி லேயே பெரிய திறந்தவெளி சிறைச் சாலையாக காசா மாற்றப்பட்டுள்ளது. இம் மக்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவம், உடைகள் உள்ளிட்ட அனைத்து தேவை களையும் இஸ்ரேல் அரசு அனுமதித்தால் மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல முடியும். பல நூறு மக்கள் தினம் தினம் பட்டினியா லும், பசியாலும், நோய்நொடிகளாலும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.  ஹமாஸ் அமைப்பின் செயல்பாடு  இத்தகைய நிலையில் தான்,பாலஸ்தீன மக்களது விடுதலைக்காக கடைசி மூச்சு வரை போராடிய யாசர் அராபத் அவர்களை பலவீனப்படுத்துவதற்காக இஸ்ரேலால் திட்டமிட்டு ஒரு பயங்கரவாத அமைப்பாக  உருவாக்கப்பட்டது தான் ஹமாஸ். எனி னும், யாசர் அராபத் மறைவுக்குப் பின்னர், காசா மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதியாக ஹமாஸ் மாறியது. அப்போது முதல், காசாவை பாதுகாக்க அது போராடி வருகிறது. இந்நிலையில், 75 ஆண்டுக ளுக்கும் மேலாக ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வரும் சித்ரவதைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண் டது. இந்த தாக்குதல் இஸ்ரேல் ஆட்சியா ளர்களை நிலைகுலைய வைத்து விட்டது.  ஏகாதிபத்திய நாடுகளினுடைய ஆதர வோடு காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் இரும்பு குவிமாடம்  ஒன்றை உரு வாக்கியிருந்தது. இதற்காக சில லட்சம் கோடி டாலர்களை செலவழித்திருந்தது. உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத பாதுகாப்புக் கவசமாக இந்த குவிமாடம் இருந்தது. தங்கள் நாட்டின் மீது ஏவப்படும் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தடுத்து நிறுத்தி அழிப்பதுடன் தங்களை தாக்க நினைக்கும் நாட்டின் மீது தானாகவே ஏவு கணைகளை ஏவி அழிக்கும் வல்லமை படைத்த இரும்பு குவிமாடம் இது. 24 மணி நேரமும் தானியங்கியாக செயல்படும் இந்த இரும்பு குவிமாடத்தின்  பலத்த கண் காணிப்புகளையும் மீறி ஹமாஸ் அமைப்பி னர் அக்டோர் 7 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியதோடு இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் உட்பட பலரை பணயக் கைதியாக பிடித்துச் சென்று விட்டனர். இதனை காரணமாகக் கொண்டே, இஸ்ரேல் ராணுவம் தற்போதைய கொடூ ரத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது. 

நேதன்யாகுவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு  

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது இஸ்ரேல் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.  இழந்து வரும் செல்வாக்கை மீட்கவும், நீதிமன்ற தலை யீடுகளை முறியடிக்க நீதிமன்ற அதிகாரங்க ளை பறிக்கும் வகையிலும் சட்டங்களை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து இஸ்ரே லிய மக்கள் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அமை ச்சரவைக்குள்ளே ஏற்பட்டுள்ள முரண் பாடுகளின் காரணமாக, ராணுவத்தை தன் முழுக் கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வும் தனக்கு எதிராக செயல்பட்ட ராணுவ அமைச்சர் கேலண்ட்டை பதவி நீக்கம் செய்தார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு, உள்நாட்டில் மட்டுமில்லாமல் இஸ்ரேலுக்கு நேச நாடாக இருக்கிற அமெரிக்காவும் தனது ஆட்சேபனையை தெரிவித்தது.  இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பி னர் நடத்திய தாக்குதலை காரணமாக வைத்துக் கொண்டு இஸ்ரேலியர்களை பாதுகாக்க தன்னால் தான் முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கவும், தனது செல் வாக்கை உயர்த்திக் கொள்ளவும்  பாலஸ் தீனர்களை ஒட்டுமொத்தமாக அழித்திடும் போரை நேதன்யாகு தொடர்ந்து கொண்டுள்ளார். 

ஏகாதிபத்திய சக்திகளின் குறி

முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக பாலஸ்தீனர்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளை கண்டு கிஞ்சிற்றும் கவ லைப்படாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஹமாஸ் தாக்கு தலை கண்டித்து போர் வெறிபிடித்து தாக்கும் இஸ்ரேலுக்கு மேலும் ராணுவ உதவிகளை வாரி வழங்கி ஆதரித்து வருகின்றன.  இந்தப் போர் இஸ்ரேலின் யூத இன வெறி மற்றும் நேதன்யாகுவின் பதவி மோகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அமெ ரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களும் உள்ளடங்கியது. ஏனென் றால், பாலஸ்தீனம் என்பது ஒரு வளமான பூமி. பாலஸ்தீனம் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசியப் பிரதேசம் முழுவதும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மனிதகுலத்திற்கு தேவையான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த பூமி. இந்த வளங்களை முற்றாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கா கத்தான் நீண்ட காலமாக இப்பிரதேசம் முழுவதும் போர்களையும், வன்முறைக ளையும் பயங்கரவாதத்தையும் திட்டமிட்டு உருவாக்கி வந்திருக்கின்றன அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகள். நீண்ட காலத்துக்கு தங்களது ஆதிக்கம் இங்கு நீடிக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடனேயே 1948ல் ஐ.நா. தீர்மானங்கள் மூலம் பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்தது.  இப்பிரதேசத்தில் நிரந்தர பதற்றம் நீடிப்பது ஏகாதிபத்திய நலன்களு க்கு அவசியத் தேவையாகும். இரண்டாவது உலக யுத்தம் முடிந்தவுடன் உலகத்தை ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அமெரிக்கா இப்பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை முழுவதும் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டது, அன்றைய அமெரிக்க ஜனா திபதி ஐசனோவர் ‘உலகின் மிக முக்கிய மான தளமாக இப்பிரதேசம் மாறும்’ எனக் குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, சமீப ஓரிரு ஆண்டு களாக மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்படத் துவங்கியுள்ளன. ரஷ்யாவும் தனது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இது  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்க ளுக்கும், விருப்பங்களுக்கும் உகந்தது அல்ல. இத்தகைய புவி அரசியல் பிரச்சனை களும் இதில் அடங்கியுள்ளன. இந்த நிலையில்தான் காஸாவை அழிப்பது, பாலஸ்தீனத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவது, அருகில் உள்ள லெப னானைச் சீண்டுவது, அதற்கு அருகில் உள்ள ஈரானை போருக்கு தூண்டுவது - என இஸ்ரேலை ஏவி அமெரிக்க ஏகாதி பத்தியம் ஆடும் ஆட்டம்தான் இன்று நாம் காணும் மனிதப் பேரழிவு. இதைத் தடுத்து நிறுத்துவதற்கும், அழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்க ளின் உயிர்களை காப்பதற்கும் உலக நாடு கள் இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீதும் உலகின் இதர ஏகாதிபத்திய சக்திகள் மீதும் தங்களது நிர்ப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டும். 

இந்தியாவின் ஆதரவு

தொடக்கம் முதலே இந்தியா பாலஸ்தீ னத்துக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தது. பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்த போது இந்தியா எதிர்த்தே வந்தது. 1967-ல் இந்தியா பாலஸ்தீனத்தை தனி சுதந்திர நாடாக அங்கீகரித்தது. அப்போது முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும், சுதந்திர பாலஸ்தீனத்தையும் மிக நெருக்க மான நட்பு நாடாக இந்தியா நடத்தி வரு கிறது. அந்த மக்களின் உரிமைக் குரலுக்கு தனது வலுவான ஆதரவை இந்தியா தெரி வித்து வருகிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் அவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து பெரும் வரவேற்பு கொடுத்தது இந்திய அரசு. யாசர் அராபத் வருகையை இந்திய மக்களும் இடதுசாரிகளும் பேரெழுச்சி யோடு கொண்டாடினார்கள் என்பது வர லாறு. கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும், முதலமைச்சருமான ஜோதிபாசு தலைமை யில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

மோடி அரசின்  மோசமான நிலைப்பாடு 

சுதந்திர பாலஸ்தீனத்துடன் இத்தகைய நெருக்கமான உறவு கொண்ட இந்தியா வின் பாரம்பரியத்தை, தற்போது தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் பாசிச இன வெறி பிடித்த கொடிய இஸ்ரேலிய அரசுடன் அதீத நெருக்கத்தை வெளிப்படுத்தி இஸ்ரே லின் கூட்டாளியாகவே மாறிப் போனதன் மூலம் சிதைத்து அழித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றி யிருக்கிற மோடி அரசு, அமெரிக்காவின் கண் அசைவிற்கேற்ப இஸ்ரேலுடன் வர்த்தக உறவு மட்டுமல்ல, அதிதீவிர ராணுவ உறவையும் மேற்கொண்டிருக்கி றது. இதன் வெளிப்பாடுதான், இன்றைக்கு பாலஸ்தீன மக்களை சுட்டுத்தள்ளுவ தற்காக, குண்டுவீசிக் கொல்வதற்காக இந்தி யாவிலிருந்தே ஆயுதங்களை, ராணுவ உபகரணங்களை அனுப்பி வைப்பதற்கு அனைத்து அனுமதிகளையும் தாராளமாக வழங்கியிருக்கிறது மோடி அரசு. அத னால்தான் சென்னை துறைமுகத்திலி ருந்தே கூட இஸ்ரேலுக்கு சரக்குகள் என்ற  பெயரில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட கப்பல் கள் சென்றுள்ளன. கடந்த பத்து ஆண்டு காலமாக இந்தியா வில் திட்டமிட்டு இஸ்லாமிய வெறுப்பு உணர்வை சமூகத்தில் விஷம் போல பரப்பியுள்ள மோடி அரசு, பாலஸ்தீனத்தில் கொல்லப்படுவது இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பார்க்கிறது; அது சுதந்திரமான, இறையாண்மைமிக்க ஒரு நாட்டின் மீதான போர் என்று பார்க்க மறுக்கி றது. அதனால்தான், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7 அன்று நடத்திய தாக்குதலு க்கு பதிலடி என்ற பெயரில் காஸா மீது ‘போர்’ என்று இஸ்ரேல் அறிவித்த அடுத்த நிமிடமே, நரேந்திர மோடி அதை வரவேற்று பதி விட்டார். காஸா மீதான போரை அமெரிக்கா வும் அதன் கைக்கூலிகளும் தவிர உலகில் வேறு எந்த நாடும் வரவேற்காத நிலை யில், இந்திய பிரதமர் வரவேற்றது உல கோரை அதிர்ச்சியடையச் செய்தது. கடும் கண்டனக் கணைகள் எழுந்தன. அதற்குப் பிறகுதான், போர் தீர்வல்ல என்றும் பாலஸ்தீ னம் சுதந்திர நாடு என்றும் இந்திய அரசுத் தரப்பிலிருந்து ஒரு சமாளிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

இஸ்ரேலுக்கு மோடியின் ஆதரவு

இந்தியா விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு  முதலில் விஜயம் செய்து தனது பேராதரவினை அறிவித்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. மேலும், இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவை 2018ம் ஆண்டு அரசின் சிறப்பு விருந்தினராக இந்தியா வர வழைத்து – இஸ்ரேல் அரசுடன் ராணுவ பாதுகாப்பு மற்றும் வர்த்தக உடன்பாடு களை மேற்கொண்டது மோடி அரசாகும். இது மட்டுமின்றி குஜராத் மாநிலத்தில் பிரத மர் மோடியும் – நேதன்யாகுவும் மக்கள்  மத்தியில் கைகோர்த்துக் கொண்டு சாலை வழி பயணம் செய்து கொண்டாடினார்கள். போரை நிறுத்த வேண்டுமென ஐ.நா. சபையில் 140 நாடுகள் ஆதரவுடன் தீர்மா னம் நிறைவேறிய போது இந்தியப் பிரதிநிதி அவையில் இடம்பெறாமல் வெளியேறி யதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது இந்திய அரசு நடுநிலை வகித்ததும், வரலாறு நெடுகிலும் இந்தியா வகித்து வந்த பெருமைமிகு வெளியுறவுக் கொள்கைக்கு நேர் விரோதமானதாகும். உலக மக்களால் வெறுக்கப்படும் இஸ்ரேல் ஆட்சியாளருடன் கிஞ்சிற்றும் கூச்சமின்றி கைகோர்த்து நிற்கும் அரசாக மோடி அரசு திகழ்ந்து வருகிறது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் முழக்கம்

இஸ்ரேலிய பாசிச அதிதீவிர வலதுசாரி பெஞ்சமின் நேதன்யாகு அரசும் தற்போ தைய இந்திய அதிதீவிர வலதுசாரி நரேந் திர மோடி அரசும் அதை இயக்கும் ஆர் எஸ்எஸ் அமைப்பும் இன அழித்தொழிப்பு எனும் கொடிய கொள்கையைக் கொண்ட வை. இருவரும் ஏகாதிபத்தியத்தின் கூட்டா ளிகளாக இருக்கிறார்கள். இருவருமே தங்க ளது சொந்த நாடுகளிலும் உழைப்பாளி மக்களை இனரீதியாக, மதரீதியாக துண்டா டுகிறார்கள்; ஈவிரக்கமற்ற நவீன தாராள மயக் கொள்கைகளால் சூறையாடுகிறார் கள். இருவருக்கும் எதிராக வலுவான போ ராட்டத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது. இன்று இஸ்ரேலிய அரசின் அட்டூழியங்க ளுக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந் துள்ள போராட்டத்தின் ஒரு பகுதி யாக இந்தியாவில், “இஸ்ரேலே, இனப்படு கொலையை நிறுத்து; பாலஸ்தீனத்திலி ருந்து வெளியேறு” என்றும், “இந்திய மோடி அரசே, இஸ்ரேலுக்கு துணை போ காதே; பாலஸ்தீன மக்களை கொல்வதற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்து; சுதந் திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பு” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழங் குகிறது. போராட்டக் களத்தில் நிற்கிறது.

இஸ்ரேலுடன்  உறவைத் துண்டித்திடுக!

பிரேசில் போன்ற சில நாடுகள் இஸ்ரேலு டன் உறவுகளை துண்டிப்பதாக அறி வித்திருப்பது போல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளை துண்டிப்பதாக அறிவித்து போரை நிறுத்து மாறு நெருக்கடி கொடுக்க வேண்டும்; இஸ்ரேலுக்கு நிதியும், ஆயுதங்களும் வாரி வழங்குவதை நிறுத்தி, போரை நிறுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு நிர்ப்பந்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும்; போரை நிறுத்துமாறு வற்புறுத்துவதற்காக உலக அமைதி மாநாடு நடத்த வேண்டும் என்று சீனா கூறியிருப்பதையும்; எகிப்து மற்றும்  இதர அரபு நாடுகள் சேர்ந்து மேற்கொண் டுள்ள அமைதி முயற்சியையும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்க வேண்டும்.  

இரு நாடுகள் கோட்பாடே இறுதியானது

அதேபோல பாலஸ்தீன பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை யின் ஒப்பந்தங்களின்படி கிழக்கு ஜெருச லேமை பாலஸ்தீனத்தின் தலைநகராக இஸ்ரேல் ஏற்க வேண்டும்; காஸா உள்பட ஆக்கிரமித்துள்ள அனைத்துப் பிரதேசங்க ளிலுமிருந்தும் இஸ்ரேல் உடனடியாக வெளி யேற வேண்டும்; இதுவரையிலும் ஏற்படுத்தி யுள்ள மிக மிக மோசமான பாதிப்புகளுக்கு உரிய நிவாரணத்தை இஸ்ரேல் வழங்க வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம், சுதந்திர இஸ்ரேல் என்ற இரண்டு நாடுகள் கோட்பாடே இறுதியானது. இதை இஸ்ரேல் அமலாக்க வேண்டும். பாலஸ்தீன ஆதரவுக் குரல் உலகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது. லண்டன் மாநகரில் 3 லட்சம் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டம், அமெரிக்காவில் பல பகுதிக ளில் கண்டன இயக்கம், ஹார்வர்டு பல் கலைக்கழகம் உள்பட பல லட்சம் மாண வர்கள் போராடி வருகின்றனர்.  இந்திய மக்களின் குரல் – குறிப்பாக, இடதுசாரிகளின் குரல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல் வலுவாக ஒலித்து வருகிறது. தலைநகர் தில்லியிலும், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக பாலஸ்தீன மக்களின் விடுதலை குரலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிரொலித்தது.  பாலஸ்தீன மக்களைக் காக்கத் தொட ரும் மகத்தான மக்கள் இயக்கத்தில் இந்திய உழைப்பாளி மக்களும் ஒன்றிணைவோம்; மக்கள் சக்தியை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்பதை நிரூபிப்போம்! 

;