articles

img

தொலை தூரமாய் இருக்கும் நீதித்துறையில் பாலின சமத்துவம் - ச.சிவக்குமார்

சமூகத்தில் ,அனைத்துப் பகுதியினரும் அதி காரத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற் படுத்துவதே ஜனநாயகத்தின் குறிக்கோள்.குறிப்பாக, சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண் கள் நமது அரசியலமைப்பு சட்டத்தின் வழியே உரு வாக்கப்பட்டுள்ள ஜனநாயக அமைப்புகளான நாடாளு மன்றம், சட்டமன்றம், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைப்பு களில் உரிய அளவில் பங்கேற்பதற்கான உத்தரவா தத்தை ஏற்படுத்துவது அரசின் மிக முக்கியக் கடமை யாகும். சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றம், சட்ட மன்றம், பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட அரசியல் அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு என்பது ஒரு சிறிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இருந்த போதும், சமூகத்தின் சரி பாதி இருக்கும் பெண் கள் இன்னும் அரசியல் அதிகாரத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக் கையை நிறைவேற்றுவதற்கே இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்ட சரத்து 15...

பல நூற்றாண்டுகளாக இந்திய சமூக அமைப்பு பாலின பாகுபாடுகள் நிறைந்த ஆண் ஆதிக்க சமூக அமைப்பாகவே இருந்து வருகிறது. அரசியல் அதிகா ரங்கள்  எப்படி ஆண் சார்ந்த உரிமையாக அது அரச னின் உரிமையாக இருந்து வந்ததோ அதே போல்  தான் நீதி சொல்லக்கூடிய சட்டத்துறையும் வரலாற்று ரீதியாக பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட துறையா கவே இருந்து வந்திருக்கிறது. பெண் சொல்லி கேட்டு  நடப்பதே தவறு என்கிற மரபில் வந்தது தான் ‘‘தையல் சொல் கேளேல்‘’ என்கிற ஆண் ஆதிக்க சிந்தனை. நம்முடைய இலக்கியங்களிலும், கதைகளி லும் நீதி சொல்லும் இடத்தில் ஆண் தான் இருந்திருக் கிறான். பெண் புத்தியை பின் புத்தியாக கற்பிதம் செய்யும் ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்கள் நீதிபதி களாவது அத்தனை எளிதல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து -15 பாலினத்தின் அடிப்படையில் ஒருவரை பாகுபடுத்தக் கூடாது என்று கூறுகிறது.  அரசியலமைப்புச் சட்டமும், பெண்களை பாதுகாக்கும் பல்வேறு சட்டங்களும் சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்ட போதிலும், பெண்கள் இன்னும் அனைத்துத் துறைகளிலும் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. இதற்கு நீதித்துறையும் விலக்கல்ல என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

மூடப்பட்ட கதவை திறந்தவர்...

அரசியல் அதிகாரத்தின் தலைமைப் பொறுப்பு களான பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தியும்  ஜனாதிபதி களாக பிரதீபா பாட்டீல் மற்றும் திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இதுவரை ஒரு பெண் தேர்வு செய்யப்படாததை நாம் யதார்த்தமாக கடந்து செல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி 1989-இல் தேர்வு செய்யப்பட்டார். சுதந்தி ரத்திற்குப் பின் பெண் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியா வதற்கே 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதிபதி பாத்திமா பீவி ஓய்வு பெற்ற பிறகு அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ‘‘பெண்களுக்கு இதுநாள் வரை மூடப்பட்ட கதவை நான் திறந்தவளானேன்’’ என்று கூறி யிருந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதி களில் மூவர் மட்டுமே பெண்கள். இதுவரை உச்சநீதி மன்றத்திற்கு வெறும் 11 பெண் நீதிபதிகளே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்தவர்களில் இந்து மல் ஹோத்ரா மட்டுமே வழக்கறிஞராக இருந்து நேரடி யாக உச்சநீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் நீதிபதியாவார். மற்றவர்கள் மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளாக இருந்து பதவி உயர்வு பெற்று தேர்வு செய்யப்பட்டவர்கள்.

சம்பிரதாயமாகவே அமையும்

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி பி.வி. நாகரத்தினாவிற்கு 2027இல் முதல் பெண் தலைமை  நீதிபதியாகும் வாய்ப்புள்ளது.  ஆனால் அந்தப் பதவியில் வெறும் ஒரு மாத காலம் மட்டுமே இருந்து அவர் வயது மூப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்றுவிடுவார். அந்த பொறுப்பிற்குரிய தன்மையை உணர்வதற்குள்ளாகவே அவர் ஓய்வு பெறுவார் எனும் போது, முதல் பெண் தலைமை நீதிபதியும் வெறும் சம்பிரதாயமாகவே அந்த பொறுப்பில் இருப்பார் என்பது தான் உண்மை. இதை நம் நாட்டின் நீதித்துறை யின் மற்றொரு பின்னடைவாகவே பார்க்க முடி கிறது. சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகள் கழித்தே ஒரு பெண் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு ஏற்படப்போகி றது என்பது பாலின சமத்துவத்தில் இன்னும் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. நீதிபதி ரமணா அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது பெண் வழக்கறி ஞர்களின் ஒரு கூட்டத்தில் ‘‘உலகத்தில் உள்ள பெண் கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். பெண்களுக்கு இழப்பதற்கு அடிமைச் சங்கிலியை தவிர எதுவும் இல்லை’’ என காரல்மார்க்ஸ் அவர்களின் வாசகத்தை நினைவூட்டக் கூடிய வகையில் பேசினார். மேலும் நீதிபதிகளாக பெண்கள் நியமிக்கப்படுவது கரு ணையின் அடிப்படையில் அல்ல; அது அவர்களின் உரிமை. ஆகவே நீதிபதி நியமனங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் பேசினார்.

வெறும் 4.2 சதவீதமே...

அவரின் பேச்சு வரவேற்க வேண்டிய ஒன்றாக இருந் தாலும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி நிய மனங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி யேயும், கொலீஜியத்தின் பரிந்துரைகளின்படி தான் நடைபெறுகிறதே தவிர இடஒதுக்கீட்டிற்கான எந்த சட்ட நடைமுறைகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை. மேலும்,  உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டு கால வரலாற் றில் இதுவரை நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 256 பேரில் 11 பேர் மட்டுமே பெண்கள் (4.2%). அதிலும் தற்போது நீதிபதிகளாக உள்ள மூன்று பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றவர்கள். இது இந்திய சமூக கட்ட மைப்பில் ஆணாதிக்க மனோபாவம் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

5 உயர்நீதிமன்றங்களில்  பெண் நீதிபதிகள் இல்லை

உச்சநீதிமன்றத்தை விட சற்று ஆறுதல் தரும் அளவில் மாநிலங்களில் உள்ள 25 உயர் நீதிமன்றங்க ளில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய சட்ட அமைச் சர் அளித்த தகவலின் படி மாநில உயர்நீதிமன்றங்க ளுக்கு அனுமதிக்கப்பட்ட 1108 நீதிபதிகளில் 96 பெண் நீதிபதிகள் உள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்தி யாவிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் 14 பெண் நீதிபதிகள் இருக்கின்றனர். அதே வேளையில் 25 உயர்நீதிமன்றங்களில் பாட்னா, மணிப்பூர், மேகா லயா, திரிபுரா, உத்தரகண்ட் உள்ளிட்ட 5 உயர்நீதி மன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்ப தும், ஒரிசா, சிக்கிம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளனர்.  இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற் றும் நீதிபதிகளில் 32 சதவீதம் பெண்கள்,

அமெரிக்கா வில் 34 சதவீதம். ஆனால், இந்திய உயர்நீதிமன்றங்க ளில் வெறும் 11.5 சதவீதம் தான் பெண்கள். மேற்படி புள்ளி விபரங்கள் பெண் நீதிபதிகள் நியமனம் குறித்து நாம் செல்ல வேண்டிய தூரத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்றாலும் நீதித்துறையில் பெண்களின் மிகக் குறை வான பங்கேற்பு ஜனநாயகத்தின் மிக பெரிய தோல்வி யாகும். நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும் தேர்வுக்குழுவான ‘கொலீஜியம்’ போதுமான தகுதி யுள்ள பெண் நீதிபதிகளை கண்டுபிடிக்கும் வெளிப் படைத் தன்மையோடு செயல்படுவதன் மூலமே பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஓரளவு உதவி புரியும். இதைத் தவிரபெண்கள் வழக்கறிஞர்க ளாகவும், நீதிபதிகளாகவும் ஆவதற்கு தடையாக உள்ள பல சமூக காரணங்களையும் நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டியுள்ளது. சமூக சமத்துவமின்மையும் பாலின பாகுபாடுக ளும் நிறைந்த நம் சமூகத்தில்,சரியான பாலின கண் ணோட்டமும், சமூகப்புரிதலும் உள்ளவர்கள் நீதிபதிக ளாக தேர்வு செய்யப்படுவது அவசியம். பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கும் ஒரு வருத்தமான சூழலில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்களில் தீர்ப்பு சொல்லும் இடத்தில் பெண் நீதிபதிகள் அதிகமாக இருப்பது  பாதிக் கப்பட்ட பெண்களுக்கு நீதித்துறையின் மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். 

அதிக சமநிலை அணுகுமுறை சரியான கூடுதல் புரிதல்

இந்திய அட்டர்னி ஜெனரலாக இருந்த கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது ‘‘பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிக சமநிலையான அணுகுமுறைக்கு’’ அதிக பெண் நீதிபதிகள் நியமிக் கப்பட வேண்டும் என்று கூறினார். ஒரு பெண்ணை துன் புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இனிப்பு டன் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்புக் கேட்குமாறு உயர்நீதிமன்றத்தின் ஆண் நீதிபதி ஒருவர் சில மாதங்க ளுக்கு முன்பு உத்தரவிட்ட விவகாரம் உச்சநீதிமன்றம்  வரை சென்றதை தொடர்ந்து இந்த கருத்தை  வேணு கோபால் பதிவு செய்தார். பாலியல் வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்க ளை அவமானப்படுத்தும் வகையிலோ அல்லது சமர சம் செய்ய பரிந்துரைக்கும் வகையிலோ இதுபோன்ற  உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு  எதிராக ஜனநாயக அமைப்புகள் பலமுறை நீதிமன்றங்களை விமர்சித் துள்ளனர். இந்தச் சூழலில்,இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த வழக்குகள் பெண் நீதிபதிகள் முன்னிலையில் வரும் போது அவர்களால் பாலியல் கன்ணோட்டம் குறித்த சரியான கூடுதல் புரிதலோடு தீர்ப்பு வழங்க முடியும் என்பதே பெருவாரியான ஜன நாயகவாதிகளின் கருத்தாகும். நீதித்துறையில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது சரியான பாலியல் கண்ணோட் டத்தோடு தீர்ப்பு வழங்குவதற்கு உதவி புரியும்.  ஆண், பெண் இருபாலரும் சமமான எண்ணிக்கை யில் நீதித்துறையில் அமருவது நீதித்துறை கூடுதல் ஜனநாயக தன்மையோடு செயல்பட உதவி புரியும். சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப் படும் நிலையிலும், சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் மார்ச் 10 அன்று கொண்டாடப் படும் நிலையிலும் இந்திய  நீதித்துறையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை  உயர்த்துவதற்கான ஜனநாயக கோரிக்கையை முன் னெடுப்பது அனைத்து ஜனநாயக அமைப்புகளின் கடமையாகும்.

கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர்,  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 



 

;