உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டு தலித் மக்கள் பொதுச்சாலையை பயன்படுத்துவதற்கான பாதை உருவாக்கப்பட்டதானது தமிழக சமூக நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இப்பாதை உருவாக்கப்பட்ட பிறகு உத்தப்புரம் தலித் மக்கள் பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கும் பிரதான சாலையை நேர்கோட் டில் எளிதாக அடைய முடிந்தது. இதற்கு முன்பு இந்த பிரதான சாலையை அடைவதற்கு தலித் மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து சுற்றி வளைத்து வெகுதூரம் நடந்து செல்ல வேண்டி யிருந்தது. உத்தப்புரத்தில் பொதுச்சாலையை பயன்படுத்தும் உரிமை கிடைத்த பிறகு அவர்கள் இதர சில ஜனநாயக உரிமைகளையும் நிலை நாட்டுவதில் கவனம் செலுத்தினர். இதற்கான போராட்டங்களையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐ (எம்) ஆகிய இயக்கங் கள் வழிநடத்தின. இக்கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் மிக கடுமையான போலீஸ் அடக்குமுறையை எதிர்கொண்டன. என்றாலும் அதனைக் கண்டு உத்தப்புரம் தலித் மக்கள் மனம் துவண்டுவிட வில்லை. உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் நுழைவு - வழிபாட்டு உரிமைக்கான போராட்டங்கள் மிகுந்த உத்வேகத்துடன் துவங்கின. கோவி லுக்குள் நுழைய, வழிபாடு நடத்த அவர்கள் யாரிடம் அனுமதியை பெற வேண்டும்? சட்டப்படி எவரின் அனுமதியும் இதற்கு தேவையில்லை. எனவே, கோவில் நுழைவுக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டன. தலித் மக்கள் - இதர ஜனநாயக சக்திகள் புடைசூழ மூன்று இடங்களிலிருந்து உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் நோக்கி செல்வது என திட்டமிடப்பட்டது.
மதுரை மாநகரிலிருந்து உத்தப்புரம் முத்தாலம் மன் கோவில் நோக்கி ஒரு குழு புறப்பட்டது. இக்குழுவிற்கு ஜி. ராமகிருஷ்ணன், (சிபிஐ (எம்) அப்போதைய மாநில செயலாளர்), பி. சம்பத் (அப்போதைய தலைவர்) தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்.நன்மாறன் எம்எல்ஏ மற்றும் இதர தலைவர்கள் தலைமையேற்றனர். இப்பய ணத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இரண்டாவது குழு டி. கல்லுப்பட்டியிலிருந்து ஏ.லாசர், சி.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், த.செல்லக்கண்ணு தலைமையில் உத்தப்புரம் நோக்கி புறப்பட்டது. இதிலும் பல நூற்றுக்கணக் கானோர் பங்கெடுத்தனர். மூன்றாவது குழு, உத்தப்புரம் ஊருக்குள் இருந்தே முத்தாலம்மன் கோவில் நோக்கி புறப் பட்டது. இக்குழுவிற்கு எஸ்.கே. மகேந்திரன் எம்.எல்.ஏ., கே.சாமுவேல்ராஜ், எஸ்.கே.பொன்னுத் தாய் மற்றும் உத்தப்புரம் தலைவர்கள் பொன் னையா, சங்கரலிங்கம் ஆகியோர் தலைமை யேற்றனர். இக்கோவில் நுழைவுப் போராட்டத்தைத் தடுக்க மிகக் கடுமையான எதிர் நடவடிக்கை களை தமிழக காவல்துறை மேற்கொண்டது. ஏறத்தாழ 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதுரை மாநகர் டி.ஐ.ஜி., மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பக்கத்து மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் என பல உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் இப்பணி யில் இறக்கப்பட்டனர்.
மதுரை மாநகரிலிருந்து உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் நோக்கி நடைபயண மாக சென்ற நூற்றுக்கணக்கானோரை காவல் துறையினர் வழிமறித்தனர். காவல்துறையின ருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளும் கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை மாநகரில் ஒரு மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். இதே போல, டி. கல்லுப்பட்டியிலிருந்து புறப்பட்ட குழு வினரையும் காவல்துறையினர் வழிமறித்தனர். வாக்குவாதம், தள்ளுமுள்ளுவிற்கு பிறகு இவர்களும் கைது செய்யப்பட்டு டி.கல்லுப் பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால், உத்தப்புரம் ஊருக்குள் நிலைமை பதட்டமானதாக இருந்தது. முந்தைய நாள் இரவே ஊரில் உள்ள பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பேரையூர் தாசில்தார் உத்தப்புரத்தில் 144 தடையுத்தரவை பிறப்பித் திருந்தார். அந்த சிறிய ஊரில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவ்வளவு கெடுபிடிகளையும் மீறி போராட்ட நாளான 30.01.2011 அன்று காலை 9 மணிக்கு ஊரில் நான்கு பக்கங்களிலிருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஒரு இடத்தில் குவிந்துவிட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல ஊழியர்கள் காவல்துறையிடம் அகப்படா மல் தலைமறைவாக இருந்தனர். எஸ்.கே. மகேந் திரன் எம்.எல்.ஏ., உத்தப்புரம் ஊருக்கு அப்பால் 7 கி.மீ. தள்ளி ஒரு பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே ஒரு குறுகலான பாதை வழியே உத்தப்புரம் வந்து சேர்ந்தார். கே. சாமு வேல்ராஜ், எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோ ரும் வெளியூரிலிருந்து காவல்துறையினரின் கண்களுக்கு அகப்படாமல் உத்தப்புரம் வந்து சேர்ந்தனர். பேரையூர், உசிலம்பட்டி கமிட்டி களில் உள்ள கட்சி தோழர்கள் பலரும் போராட்டத் தில் பங்கேற்க உத்தப்புரம் வந்து விட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற உத்தப்புரம் தலித் மக்களான ஆண்களும், பெண்களும் கையில் பூஜைக்கான தட்டுக்களுடனும், பொங்கல் வைக்க பானைகளோடும் காட்சியளித்தனர். இவ்வளவு பேர் உத்தப்புரத்தில் அணி திரள் வார்கள் என காவல்துறை எதிர்பார்க்கவில்லை. எனினும், நிலைமையை சமாளித்துக் கொண்டு கோவில் அருகே ஊர்வலத்தினர் செல்ல முடி யாத படி காவல்துறையினர் வழிமறித்து நின்றனர். ஆம். சட்டப்பூர்வமான உரிமையை பயன்படுத்த முடியாதபடி காவல்துறையினரே வழிமறித்து நின்றனர். போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டி ருந்தபோதே போலீசார் சுற்றிவளைத்துவிட்டனர். போராட்ட தலைவர்கள் காவல்துறையின் அணுகுமுறைக்கு தங்கள் கடும் போராட்டத்தில் பங்கேற்ற உத்தப்புரம் தலித் மக்களான ஆண்களும், பெண்களும் கையில் பூஜைக்கான தட்டுக்களுடனும், பொங்கல் வைக்க பானைகளோடும் காட்சியளித்தனர். இவ்வளவு பேர் உத்தப்புரத்தில் அணி திரள் வார்கள் என காவல்துறை எதிர்பார்க்கவில்லை. எனினும், நிலைமையை சமாளித்துக் கொண்டு கோவில் அருகே ஊர்வலத்தினர் செல்ல முடி யாத படி காவல்துறையினர் வழிமறித்து நின்றனர். ஆம். சட்டப்பூர்வமான உரிமையை பயன்படுத்த முடியாதபடி காவல்துறையினரே வழிமறித்து நின்றனர். போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டி ருந்தபோதே போலீசார் சுற்றிவளைத்துவிட்டனர். போராட்ட தலைவர்கள் காவல்துறையின் அணுகுமுறைக்கு தங்கள் கடும் ஆட்சேபணையை வெளிப்படுத்தினர். இருப்பினும், அனைவரும் கைது செய்யப்பட்டு உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒரு மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.
மூன்று இடங்களிலும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இப்போராட்டம் உத்தப்புரம் தலித் மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதோடு தமிழக அரசு நிர்வாகத்திற்கு கடும் நிர்ப்பந்தத்தை கொடுத்தது. தமிழகத்தின் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள், தமிழக அரசுக்கும், காவல்துறை யின் அணுகுமுறைக்கும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். உடனடியாக உத்தப்புரம் தலித் மக்களை முத்தாலம்மன் கோவிலில் நுழையவும், வழிபாடு நடத்தவும் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு இந்த இயக்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தின. இந்நிலையில் மதுரையில் செயல்படும் பெண்கள் இயக்கப்பேரவை என்ற அமைப்பின் சார்பாக நாகலெட்சுமி என்பவர் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு எதிராக உத்தப்புரம் சாதி இந்துக்கள் நீதிமன்றத்தில் நிலைபாடு எடுத்தனர். உத்தப்புரம் நிலை மையை கூர்ந்து கவனித்து வந்த மதுரை உயர்நீதி மன்றம் தலித் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்த இருதரப்பின ரும் பங்கேற்கும் அமைதிக் கூட்டத்தை நடத்தும் படி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டது.
இதன்படி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் இப்பிரச்சனை யில் தனிக் கவனம் செலுத்தி இருதரப்பும் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தி னார். தலித் அல்லாதவர்கள் தரப்பில் மாரிமுத்து, முருகேசன் ஆகியோரும், தலித் மக்கள் தரப்பில் பொன்னையா, சங்கரலிங்கம் ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் அஸ்ரா கார்க் சமூக நீதி மற்றும் சட்டப்பூர்வமான நிலைபாட்டை கடைப்பிடித்தார். பல சுற்றுப்பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு இருதரப்பினருக்கும் அஸ்ரா கார்க் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது.
உத்தப்புரம் தலித் மக்கள் முத்தாலம்மன் கோவி லுக்குள் நுழையவும், வழிபாடு நடத்தவும் சாதி இந்துக்கள் தரப்பில் ஏற்றுக் கொண்டனர். இந்த உடன்பாட்டில் 20.10.2011இல் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். இருதரப்பினரும் செய்து கொண்ட உடன் பாட்டின் படி, 10.11.2011 அன்று உத்தப்புரம் தலித் மக்கள் முத்தாலம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பான அம்சம் என்னவென்றால் தலித் மக்கள் முத்தாலம்மன் கோவிலுக்குள் நுழையும்போது தலித் அல்லாத தலைவர்கள் கோவில் வாசலில் நின்று அவர்களை வரவேற்றது தான். உண்மை யில் ஜனநாயக சக்திகளுக்கும், மனிதநேயம் உள்ளவர்களுக்கும் இது ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்தது என்றால் அது மிகை யானது அல்ல. இந்த இணக்கமான சூழலுக்குப் பிறகு கோவிலின் கும்பாபிஷேகமும் 2012 ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தி லும் தலித் அல்லாதவர்கள், தலித் மக்கள் ஆகிய இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். இத்தகைய இணக்கமான சூழல் ஏற்பட்ட பின்னணியில் உத்தப்புரம் தலித் மக்களின் இதர ஜனநாயக கோரிக்கைகளுக்கும் தீர்வு ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உத்தப்புரம் தலித் மக்கள் நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிழற்குடை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக் கூடியது தான். இதற்கான பணிகளை துவக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசை கேட்டுக்கொண்டது. ஏற்கனவே உத்தப்புரம் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க டி.கே. ரங்கராஜன் எம்.பி., ரூ. 5 லட்சம் நிதியை அரசு நிர்வாகத்துக்கு வழங்கியிருந்தார். ஆக, நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிறுத்த நிழற்குடையும் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் உத்தப்புரம் சுவரை தகர்த்து உரு வாக்கப்பட்ட பாதை - அதையொட்டி அரசு அமைத்துக் கொடுத்த சாலையை தலித் மக்கள் பயன்படுத்த முடியாதபடி பிற சாதியினர் ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டு அப்பணியும் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆக, சிபிஐ (எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள் அங்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இப்போராட்டங்களின் போது ஏராளமான அடக்கு முறைகளை எதிர்கொண்ட போதும் உத்தப்புரம் தலித் மக்கள் அதனை உறுதியாக எதிர்கொண்ட னர். இப்போராட்டங்களுக்கு பல்வேறு ஜன நாயக இயக்கங்களின் ஆதரவு மேலும் தெம் பூட்டுவதாக அமைந்தது. இதனால் தமிழக அரசு நிர்வாகத்திற்கு வலுவான நிர்ப்பந்தங்கள் உரு வாகின. இச்சூழலில் தான் மதுரை உயர்நீதி மன்றமும் இப்பிரச்சனைகளில் சட்டப்பூர்வ மான தலையீடுகளை மேற்கொண்டது. அஸ்ரா கார்க் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும், அவரது அணுகுமுறையால் ஏற்பட்ட ஒப்பந்தமும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து உத்தப்புரம் தலித் மக்களின் பல அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் கிடைத்தது. இதில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால் இப்போராட் டங்கள் அனைத்தும் ஜனநாயகத் தன்மை யோடு நடந்தன என்பது தான். அதாவது, சட்டப் பூர்வமான கோரிக்கைகள், உத்தப்புரம் தலித் மக்களின் ஒற்றுமை மற்றும் எழுச்சி, இப்போராட் டங்களில் தலித் அல்லாத கணிசமான மக்களின் பங்கேற்பு, பொருத்தமான காலங்களில் நீதிமன்ற தலையீடுகள் என இப்போராட்டங்களின் உள்ள டக்கம் அமைந்திருந்தது. இத்தகைய உறுதியான ஜனநாயகப் போராட்டங்களின் மூலம் 1. உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்பு, 2. தலித் மக்களின் முத்தாலம்மன் கோவில் நுழைவு மற்றும் வழிபாட்டு உரிமை, 3. உத்தப்புரம் அனைத்துப்பகுதி மக்களின் பொதுப்பயன் பாட்டிற்காக பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைத்தது, 4. தலித் மக்களுக்காக அமைக்கப் பட்ட பொதுச்சாலையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஆகிய பிரதான கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன.
இத்தருணத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பு முக்கியமானது என்பதை குறிப்பிட வேண்டும். சட்டத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டக் கூடிய நல்ல தீர்ப்பை அவர் வழங்கினார். உத்தப்புரம் இருதரப்பின ரும் செய்து கொண்ட உடன்பாட்டையும் தலித் மக்களின் சில ஜனநாயக கோரிக்கைகளையும் நீதிமன்றத் தீர்ப்பாக அவர் வெளியிட்டுள்ளார். உத்தப்புரம் தலித் மக்களின் பிரச்சனைகளை யும், கோரிக்கைகளையும் வெளியுலகிற்கு கொண்டு வந்து தீர்வு காண்பதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிபிஐ (எம்) வகித்த பாத்திரத்தையும் தனது தீர்ப்பில் உரிய முறையில் அவர் பதிவு செய்துள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முன் நின்ற அஸ்ரா கார்க்கிற்கும் தனது பாராட்டுதல் களை அவர் தெரிவித்துள்ளார். தலித் மக்களுக் காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறி ஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பின் இறுதிப் பகுதி யில் நீதிபதி சந்துரு பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார். “மக்களின் விருப்பம் உறுதியானதாக இருந்தால் அரசு தலையீடு இல்லாமலேயே தங்களுக்குள் தீர்வு காண முடியும் என்பதை உத்தப்புரம் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. இந்திய அரசியல் சாசனத்தின்படி இது அடிப்படை யான கடமையாகும். இறுதியாக, உத்தப்புரம் செய்தி மிகத்தெளிவானது. சாதிச்சுவர் மக்களைப் பிரித்தாலும், மக்களின் விருப்பம் அவர்களை ஒன்றுபடுத்தியுள்ளது.” உத்தப்புரம் அனுபவங்கள் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறந்த படிப்பினையாகும். தீண்டாமைக் கொடுமைகள் தலித் மக்களை மட்டும் வேதனைப்படுத்தவில்லை. சமூக நல்லி ணக்கத்தைக் கெடுத்து அனைத்து மக்களின் மன அமைதியையும் அது குலைக்கிறது. சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. எனவே, தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்கான இயக்கத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் மேலும் வலு வான முறையில் ஒருங்கிணைய வேண்டும்.