ஆசிரியர் உள்ளே நுழைகையில் அவரை இடித்துக் கொண்டு ஒரு மாணவர் உள்ளே நுழைய முற்பட்டார்.
“நில்லு.... என்ன ஆச்சு..”
“சார்.. ஜெராக்ஸ் எடுக்கப் போனேன்..”
“ஜெராக்ஸ்னா என்ன..”
ஆதார் கார்டு காப்பி கேட்டாங்கள்ல, சார்... அதான் அத ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன்..
மறுபடியும், “ஜெராக்ஸ்னா என்ன” என்றார் ஆசிரியர்.
கோரசாக அனைத்து மாணவர்களும் “நகல்” என்றார்கள். ஆசிரியரோ, “நீங்க எடுத்தது நகல்தான். ஆனா அதுக்குப் பேரு ஜெராக்ஸ இல்லை” என்றார்.
ஆசிரியரே தொடர்ந்தார், “ஜெராக்ஸ்ங்குறது அந்த
எந்திரத்த தயாரிச்ச நிறுவனத்தோட பேரு... அவ்வளவுதான்..”
“ஆனா எல்லாக் கடைகள்லயும் பெருசு, பெருசா எழுதி ஜெராக்ஸ்னுதான் எழுதி வெச்சுருக்காங்க...”
“சார்... நான் மட்டும் கலெக்ட்ர் ஆனா, ஜெராக்ஸ்னு எழுதிருக்குற எல்லா போர்டையும் ஜேசிபி வெச்சு தூக்கிருவேன்..”
“முதல்ல பத்தாவதுல நல்ல மார்க் வாங்கு”னு சக மாணவர்கள் கிண்டலில் அந்த மாணவரும் சிரித்துப் பங்கேற்றார்.
“ஜேசிபினா” என்ன என்ற ஆசிரியரின் கேள்வி, மாணவர்களை நன்றாக உட்கார வைத்தது.
“சார்... இதுவும் கம்பெனி பேராத்தான் இருக்கும்... சரியா...”
“ஜேசிபினா அதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கணுமே..”
அதற்குள் வலது மூலையில் இருவர் அடித்துக் கொள்வது போலிருந்தது. என்ன என்பதற்குள், “சார்.. உலகப் போரையே தீர்த்துரலாம். இவங்களோடது அக்கப்போரு சார்..” என்றார்கள் மாணவர்கள்.
“உலகப் போருனாலதான் இந்த ஜேசிபி நமக்குக் கிடைச்சுது..”
“அப்படியா,,? எந்த உலகப் போருல சார்..”
“இதுவரைக்கும் எத்தனை நடந்துருக்கு..”
“ரெண்டு சார்... முதல் போர் 1933ல ஆரம்பிச்சு 1918ல முடிஞ்சுது.. ரெண்டாவது 1939லருந்து 1945 வரைக்கும் நடந்துச்சு..”
“நிறைய பேரு செத்துப் போயிருப்பாங்களோ, சார்..”
“ஆமா... முதல் உலகப் போருல ஒன்றரைக் கோடி
பேரும், ரெண்டாவதுல 6 கோடிப் பேரும் கொல்லப் பட்டாங்க...”
“எந்த நாடு அதிகமா பாதிக்கப்பட்டுச்சு சார்..”
“இரண்டாவது உலகப் போருல சோவியத் யூனியன், அதான் இன்னிக்கு ரஷ்யா, வீரர்கள் மட்டும் 87 லட்சம் பேர் செத்துப் போனாங்க.. பொது மக்கள் 1 கோடியே 97 லட்சம் பேர் கொல்லப்பட்டாங்க..”
“என்ன சார் இது..”
“ஆனா, இவ்வளவு இழப்புகளயும் தாண்டி அந்த நாட்டு வீரர்களும், மக்களும்தான் இட்லரோட ஜெர்மனிப் படைகளத் தோக்கடிச்சாங்க..”
“ரொம்ப சின்ன மீசையோட ஒருத்தர் இருப்பாரே, அவர்தான இட்லர்..”
“ஆமா.. அவரேதான்.. அவங்க ராணுவக்
கூட்டணிக்கு அச்சு நாடுகள்னு பேரு..”
“ஜெயிச்ச கூட்டணிக்கு நேச நாடுகள்னு பேரு... படிச்சுருக்கோம் சார்..”
“ஆமா... அந்தக் கூட்டணில மூணு பெரிய நாடுன்னு பட்டியல் போடுறப்ப பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன்னு சொல்வாங்க... ஆனா, முத ரெண்டு நாடுகள்ல சில லட்சம் பேர்தான் கொல்லப்
பட்டாங்க.. அதுலயும் படைவீரர்கள்தான் அதிகமா செத்துருக்காங்க... உதாரணத்துக்கு பிரிட்டனுக்கு பல காலனி நாடுகள் இருந்துச்சு... அங்க நடந்த சண்டைகள்ல இறந்துருப்பாங்க.. அமெரிக்காவுக்கும் அதுதான் நிலைமை..”
“அவங்க பாதிக்கப்படலயா, சார்..”
“பாதிப்புங்குறத விட அமெரிக்காவுக்கு இந்தப் போர்னால கொள்ளை லாபம்.. ஆயுதங்களத் தயாரிச்சு
சண்டை போடுற நாடுகளுக்கு விநியோகம் பண்ணு
னாங்க.. அதத்தான் இப்பயும் செய்யுறாங்க..”
“சண்டை நடந்தா அவங்களுக்கு நல்லது.. அப்படித்தான சார்.. மத்த நாடுகள்ல பொணம் குவியணும்... பிணத்த அள்ளுறதுக்குதான் ஜேசிபிய வெச்சுருந்தாங்களா... சார்..”
“இல்ல... ரெண்டாவது உலகப் போருல பயன்
படுத்துன பீரங்கிகள் நிறைய பழைய பாத்திரக்கடைக்குப் போடுற அளவுக்கு வந்துருச்சு... இதப்பாத்த ஒருத்தர் அந்தப் பீரங்கிகல எப்புடி பயன்படுத்துறதுன்னு யோசிச்சாரு.. அப்புடி உருவானதுதான் ஜேசிபி..”
“ஓ... அதான் பல ஜேசிபில சக்கரம் எல்லாம் பீரங்கியோட சக்கரம் மாதிரியே இருக்குதா.. என்ற மாணவர்கள், இந்த ஜேசிபிங்குற பேரு எங்கருந்து வந்துச்சு என்று விடாமல் கேள்விக்கு வந்தனர்.”
“பீரங்கிலாம் வெச்சு அந்த எந்திரத்த செஞ்சவரு பேரு
ஜோசப் சிரில் பேம்ஃபோர்டு(Joseph Cyril Bamford)... அவரோட பேரச் சுருக்கிதான் ஜேசிபினு வெச்சாச்சு.”
“சார்... அடுத்த வாரம் நாங்க இதுமாதிரி வெச்ச
பேராக் கண்டுபிடிச்சு ஆளுக்கு ஒண்ணு சொல்றோம்..”