திருவனந்தபுரம், மார்ச் 18- கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ் இதுவரை ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கூறியுள்ளார்.
இதுவரை 5,00,038 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 145 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,14,893 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. லைஃப் மிஷன் என்பது கேரளா உலகிற்கு வழங்கும் மற்றொரு முன்மாதிரியான திட்டமாகும். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 70 சத விகிதம் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செலவில் கட்டப்பட்டுள் ளன. லைஃப் மிஷன் மூலம் மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு என்ற கவ சத்தை அரசு உருவாக்கி வருகிறது என்று அமைச்சர் எம்.பி.ராஜேஷ் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளார்.
அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து லட்சம் வீடுகள் (துல்லியமாகச் சொன்னால் 5,00,038 வீடுகள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 145 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,14,893 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேற்கண்ட ஐந்து லட்சங்களில் 3,805 மிகவும் ஏழ்மையான பயனாளி குடும்பங்களும் அடங்கும். அவர்களின் 1,500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2,305 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை தவிர, பட்டியல் சாதியினர் மற்றும் பழங் குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. லைஃப் மிஷன் கேரளா உலகிற்கு வழங்கும் மற்றொரு முன்மாதிரி திட்டமாக மாறி வருகிறது. நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு பிரபல மான - விரிவான வீட்டுத் திட்டம் இல்லை. கடந்த பட்ஜெட்டில், 2024 மார்ச்சுக்குள் ஐந்து லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டால் அந்த இலக்கை எட்ட முடியும்.
82 சதவீத தொகை வழங்கும் மாநில அரசு
கட்டி முடிக்கப்பட்ட 3,85,145 வீடு களில், 2,69,687 வீடுகள் (70 சத வீதம்) முழுவதுமாக மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செலவில் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. பழங்குடி யினருக்கு வீடுகள் கட்ட ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. லைப்-பிஎம்ஏஒய் கிராமப்புற திட்டத்தின் கீழ் 33,272 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. இந்த வீடுகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு தலா ரூ.72,000. மீதமுள்ள ரூ.3,28,000 மாநில அரசு மற்றும் உள் ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகி றது. அதாவது இத்திட்டத்திற்கான தொகையில் 18 சதவிகிதத்தை மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது, மீதமுள்ள 82 சதவிகித தொகையை மாநில அரசு வழங்குகிறது.
லைப்-பிஎம்ஏஒய் நகர்ப்புற திட்டத் தின் கீழ் 82,186 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக, ஒன்றிய அரசு வழங்குவது ஒன்றரை லட்சம் ரூபாய். இங்கு, உள்ளாட்சி அமைப்புக ளும், மாநில அரசும் இணைந்து இரண்டரை லட்சம் ரூபாய் சேர்த்து, நான்கு லட்சம் ரூபாயை பயனாளிக ளுக்கு வழங்குகிறது. 37.5 சதவிகித தொகையை ஒன்றிய அரசும், மீதமுள்ள 62.5 சதவிகிதத்தை மாநில அரசும் ஏற்கின்றன.
முத்திரை குத்த ஒன்றிய அரசு நிர்ப்பந்தம்
லைஃப் மிஷன் மூலம் வீடு கட்டுவ தற்கு இன்று வரை 17,209.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2081.69 கோடி மட்டுமே. இது வெறும் 12.09 சதவிகிதம். 2016 இல், லைஃப் மிஷன் தொடங்கப் பட்டதில் இருந்து, இதுவரை பிஎம்ஏஒய் (கிராமீன்) திட்டத்தில், தகுதியான 2,36,670 விண்ணப்பதாரர்களில், ஒன்றியம் இதுவரை 35,190 வீடுகளை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 33,272 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. இது கடந்த 2021-22இல் அனுமதியளிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய வீடுகள் அனுமதிக்கப்படவில்லை. பெயரளவுத் தொகை வழங்கும் லைப்- பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் முன் முத்திரை பதிக்கும்படி மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அழுத் தம் கொடுத்து வருகிறது. வீடு என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என் றும், அது ஒரு வரப்பிரசாதம் அல்ல என்றும் மாநில அரசு கருதுகிறது. எனவே, இதுபோன்ற முத்திரை குத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று மாநில அரசு பலமுறை தெரிவித்து வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, பெரும்பான்மை யான பணத்தை செலுத்தும் மாநில அரசு, இதுபோன்ற லைப் வீடுகளுக்கு எந்த அடையாளத்தையும் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. நாட்டி லேயே வீடு கட்டுவதற்கு அதிக தொகை செலுத்தும் மாநிலம் கேரளம். கேரளம் செலுத்தும் தொகையில் பாதியை கூட கொடுக்க எந்த மாநிலமும் முன்வர வில்லை.
வேலை வாய்ப்பு கண்காட்சிகள்
பயனாளிகளின் வாழ்நாளை அதி கரிக்க பல்வேறு தொடர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதி யோர் பராமரிப்பை உறுதி செய்தல், சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்துதல், பாதுகாப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட சலு கைகள் கிடைக்கும். விளிம்புநிலை குடும்பங்களுக்கு அதிகாரம் அளிப்ப தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக லைப் திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ் வாதாரத்தை உறுதிப்படுத்த குடும்பஸ்ரீ சிறப்புத் தலையீடு செய்கிறது.
ஒன்றிய அரசின் சின்னத்தை வைக்க முடியாது
ஒவ்வொரு வீட்டின் முன்பும் தங்க ளின் சின்னத்தை வைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அதற்கான ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியபோது, அந்த சின்னத்தை வைக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்தது. வீடு என்ற கனவை நன வாக்கி, ஏழைகளின் முகத்தில் நம்பிக் கையின் புன்னகையை பரப்பி உலக மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ் கிறது கேரள அரசு. வீடு என்பது ஒருவரின் பெருமை. அது குடிமகனின் உரிமை. அரசிடம் இருந்து கிடைக்கும் வரப் பிரசாதம் அல்ல.