பார்க்கின்சன் நோய் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிதைவுகளினால் நம் இயக்க மண்டலத்தை பாதிக்கிறது. இதன் தொடக்க அறிகுறிகள் நடுக்கம்,இறுக்கம்,நடை மெதுவாகுதல் மற்றும் நடப்பதில் சிரமங்கள் ஆகியன. இது கண்டறியப்படுமுன் மாற்றமுடியாத சிதைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. இந்த வியாதியை மருத்துவ சோதனையில் கண்டுபிடிப்பதற்கு பல காலம் முன்பாகவே கண்டறியும் திறன் கைப்பட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் 103000 நபர்கள் ஒரு வாரம் மருத்துவ ரீதியான கைப்பட்டைகளை அணிந்துகொண்டனர்.
அவர்களது நடை வேகங்களை ஆய்வாளர் குழுதொடர்ச்சியாக அளவிட்டனர். இந்த தரவுகளை செயற்கை நுண்ணறிவின் மூலம் ஏற்கனவே பார்க்கின்சன் நோய் ஆளானவர்களுடன் ஒப்பிட்டனர். இன்று சாதாரணமாக அணியப்படும் திறன் கைப்பட்டைகளையே இதற்கும் பயன்படுத்தலாம் என்கிறார்கள். இந்த முறையில் நோய் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் எவ்வாறு அதிகமாகும் என்றும் கணக்கிடலாம் என்கிறார்கள்.