வியாழன், நவம்பர் 26, 2020

img

பொருளாதார சரிவு; மந்தம் இருப்பது உண்மைதான்!

மும்பை:
இந்திய ரிசர்வ் வங்கி, 2018-19-ஆம் ஆண்டுக்கான, தனது ஆண்டு நிதி நிலையறிக்கையை, வியாழனன்று வெளியிட்டுள்ளது.அதில், உள்நாட்டு நுகர்வு சரிவடைந்திருப்பதும், தேவைக் குறைபாட்டினால் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதும் உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளது.

அதேநேரம், இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்தம் என்பது, சுழற்சியின் கீழ்நோக்கிய மென்மையான சரிவுதான்; மற்றபடி, ஆழமான கட்ட மைப்பு சார்ந்த மந்த நிலையல்ல என்றும் சமாளித்துள்ளது.2019-20 நிதியாண்டில் நுகர்வுத் தேவை மற்றும் தனியார் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதன் மூலம் அந்த நிலையை மாற்றிவிடலாம் என்றும் நம்பிக்கையை வெளிப் படுத்தியுள்ளது.“நுகர்வுதான் இந்தியாவில் தேவையை அதிகரிக்கும் என்றாலும், பொருளாதாரத்தில் நீடித்த உயர் வளர்ச்சியை எட்ட, முதலீடு அதிகரிப்பு அவசியம். அந்த வகையில், வங்கி மற்றும் வங்கி சாரா துறைகளை வலுப்படுத்துவது, உள்கட்டமைப்பிற்கான செல வினங்களுக்கான ஒரு பெரிய ஊக்கம் தருதல் மற்றும் தொழிலாளர் சட்டங்கள், வரிவிதிப்பு போன்ற துறைகளில் மிகவும் தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவது ஆகிய நட வடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். 

குறிப்பாக, சுலபமாக வர்த்த கம் செயல்படுவதை உறுதி செய்தால்,2024-25 வாக்கில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாக மாறும்” என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.ரிசர்வ் வங்கியின் அதிகப்படி யான நிதி இருப்புக்களில் இருந்து (கையிருப்புத் தொகை) அரசிற்கு,6​​52,637 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. தற்போது இருப்பு நிதி 91,96,344 கோடியாக உள்ளது. புழக்கத்தில் உள்ள கரென்சி 17 தவிகிதம் உயர்ந்து 21.10 டிரில்லி யன் டாலர் மதிப்பாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி, அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

;