வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தமிழகம்

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி பாண்டிச்சேரி பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மாணவர்கள் மூன்றாம் நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆறு மாணவர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர் மயக்கம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
மாணவர்களின் கோரிக்கை கீழ்வருமாறு
விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்
மாணவர்களின் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது அதனால் மாணவர்களுக்கு நிரந்தரமாக சொந்த விடுதி கட்டிக் கொடுத்திட வேண்டும். நூலகத்தில் தரமான மற்றும் புதிய புத்தகங்கள் வாங்கி வைக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு தரமான இணைய வசதி செய்து தந்திட வேண்டும்
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் முதலுதவி பெட்டி வைத்திட வேண்டும்
 பல்கலைக்கழகத்திற்கு என தனியாக விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும்
மாணவர்கள் விடுதியில் உள்ள உணவகத்தில் தரமான உணவு அளித்த உறுதி செய்ய வேண்டும் என மேலும் உணவின் தரம் குறித்து மாணவர்களின் கருத்துகளை கேட்டு விட வேண்டும்
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாலைகளுக்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டும்
புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் கற்பிக்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் 25 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும்
காரைக்காலை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தர வேண்டும்
கல்லூரி கட்டணத்திலேயே போக்குவரத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது
கல்லூரியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கணினி அறைக்கு குளிர்சாதன வசதி செய்து தந்திட வேண்டும்
மாணவர்களின் போராட்டம் மூன்று நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது
வளாக தலைவரின் பதில்கள் திருப்திகரமாக இல்லை மாணவர்கள் தங்களின் போராட்டத்தை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அல்லது பதிப்பாளர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை  வைத்துள்ளார்கள்
 

;