வியாழன், டிசம்பர் 3, 2020

tamilnadu

நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்துக.... அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

நாகர்கோவில்:
கொரோனா காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் மறுப்பு, வேலை மறுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர் நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்க மோகன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், ஐஎன்டியுசி நகர தலைவர் மகாலிங்கம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராஜு, ஹெச்எம்எஸ் மாவட்ட பொருளாளர் லட்சுமணன், தொமுச மாவட்ட பேரவை துணைச் செயலாளர் பெருமாள், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.அந்தோணி, சந்திரபோஸ், ஹெச்எம்எஸ் நிர்வாகி குமாரசுவாமி, ஐஎன்டியூசி நகரசெயலாளர் சேவியர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், போராட்டத்தை செப்டம்பர் 25-ஆம் தேதி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம், தக்கலை, குழித்துறை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, பெருந்திரளாக தொழிலாளர்களை பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

;