தமிழகம்

img

கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி முடிவுகள்

தேனி:
 கவிஞர் கலை இலக்கியாவின்  நினைவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், அறம் கிளையின் சார்பாக அக்டோபர் மாதம் நூல் விமர்சனப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் தேர்வான கட்டுரையாளர்களின் பட்டியலை நடுவர் மணிமாறன், கிளைச் செயலாளர் அ.உமர் பாரூக், கிளைத் தலைவர் அ.புனிதவதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.சிறந்த விமர்சனக் கட்டுரைக்கான முதல் பரிசு (ரூ.7,000) ரஞ்சனி பாசு (மதுரை), இரண்டாவது பரிசு (ரூ.5,000) அன்பாதவன், கர்நாடகா, மூன்றாம் பரிசு (ரூ.3,000) மாதா, ஆண்டிபட்டி.  கூடுதல் பரிசுக்கான கட்டுரையாளர்களாக ஜி.ஹேமலதா, தேனி மற்றும் பா.ஸ்ரீதர்,சேலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரா.கதைப்பித்தன் (ராஜபாளையம்), க.செல்வராஜ் (ராசிபுரம்), பொன்.குமார் (சேலம்), கீதா பத்மநாபன் (சென்னை), அ.பாலமுரளி (சென்னை) ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் பெறுகின்றனர்.பரிசளிப்பு விழா நவம்பர் 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நடைபெறுகிறது.

;