ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தமிழகம்

img

குறுவை சாகுபடிக்கு அமராவதி அணையில் இருந்து  நீர்திறப்பு

திருப்பூர்:
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக  அமராவதி அணையில் இருந்து ஞாயிறன்று தண்ணீர் திறக்கப்பட்டது.திருப்பூர் மாவட் டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர் மட்டம் 89 அடியாகஉள்ளது.  வினாடிக்கு ஆயிரத்து 300கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர்திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், ஞாயிறன்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்டஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று, அணையின் மதகுகளை திறந்து வைத்தனர். 

;