தமிழகம்

img

சனிக்கிழமை அரசு ஊழியர்களுக்கு பணி

சென்னை:
மே மாதம் 18 ஆம் தேதிமுதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்க ளுடன், வாரத்திற்கு 6 நாட்கள் இயங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, அதிகபட்சம் 33 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க, கடந்த 3 ஆம் தேதி அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 4 ஆம் கட்ட ஊரடங்கு தொடங்கும் மே 18 ஆம் தேதி முதல், 50 சதவீத பணியாளர்களுடன், சனிக்கிழமை உட்பட வாரம் 6 நாட்கள், அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஊழியர்களை இரு குழுக்களாக பிரித்து, இரண்டு இரண்டு நாட்களாக சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அலுவலகத்திற்கு வராத ஊழியர் களை எப்போது அழைத்தாலும் பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும் என்றும், அலுவல்களை மேற்கொள்ள எப்போதும் மின்னணு தகவல் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அனைத்து குரூப் ஏ அலுவலர்களும், அலுவலக தலைமைப் பொறுப்புகளில் இருப் பவர்களும் வாரம் 6 நாட்களும் பணிக்கு வரவேண்டும். இந்த உத்தரவை கண்டிப் பாக பின்பற்ற வேண்டும் என்றும், அலுவலகம் வரும்ஊழியர்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப் படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

;