ஞாயிறு, நவம்பர் 29, 2020

tamilnadu

img

‘காலம் தாழ்த்திய ஆளுநருக்கு’ தமிழக முதல்வர் நன்றி...

சென்னை:
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்து வந்தனர். கிட்டத்தட்ட 45 நாட்கள் கடந்த நிலையில் ஒரு வழியாய் தீர்மானத்திற்கு வெள்ளியன்று பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

;