ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தமிழகம்

img

செப். 28 முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், செம்படம்பர் 28ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. குறிப் பாக, முதல் நாளான செப்டம்பர் 28ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கும்; செப்டம்பர் 29ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 4ஆம் தேதி வரை, பொதுப் பிரிவினருக்குமான கலந்தாய்வு நடத்தப்படும்’ என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;