வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : ரஜினிகாந்த்

சென்னை,டிச.8 உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகியான வி.என்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.  ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியையோ, ரஜினி பெயரையோ, புகைப் படத்தையோ பயன்படுத்தி வாக்குசேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

;