வியாழன், செப்டம்பர் 24, 2020

தமிழகம்

img

சென்னையிலிருந்து வேறு பகுதிக்கு சென்றால் பரிசோதனை கட்டாயம்

சென்னை:
சென்னையில் இருந்து வெளி ஊருக்கு சென்றால் கட்டாயம் பரிசோதனை செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வருமாறு:-
ஜூன் 1 ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.பேருந்துகளில் பின் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற இருக்க வேண்டும். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே பணிக்கு அனுமதிக்க வேண்டும்.மண்டலத்திற்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. பிற மண்டலங்களுக்கு செல்வோருக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை கட்டாயம்.சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்.பேருந்தில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம். ஒவ்வொரு பயணத்துக்கு பின்னரும் பேருந்துகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வது அவசியம்.
பேருந்து நிலையங்களில் பயணிகள் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில் மாதாந்திர பாஸ் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.இயன்ற வரையில் கியூ ஆர் கோடு முறையில் டிக்கெட் வழங்குவதை ஊக்குவிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

;