திங்கள், நவம்பர் 23, 2020

tamilnadu

img

சென்னை-பெங்களூர் ஏசி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம் 

பெங்களூரு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து, விமான சேவை, ரயில் சேவைகள் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது மெல்ல மெல்ல போக்குவரத்து சேவைகள் மீண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை - பெங்களூரு ஆகிய இரு நகரங்கள் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.  இந்த நிலையில் டபுள் டெக்கர் ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில், ரயில் எண் 06075/06076 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் சிட்டி - சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படுகிறது. இதன்படி, ரயில் எண் 06075 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் சிட்டி, ஏசி டபுள் டெக்கர் சூப்பர்பாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு, மதியம் 1.10 மணிக்கு அங்கு சேர்க்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 21.10.2020 ஆம் தேதி முதல், ரயில் சேவை தொடங்குகிறது.

பெங்களூரில், ரயில் எண் 06076 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் சூப்பர் பாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் பெங்களூரிலிருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை இரவு 8.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலும் 21.10.2020 முதல் இயக்கப்படுகிறது. அதாவது இரு ரயில்களும் இன்று முதல் தினசரி பழையபடி இயக்குகிறது.
 

;