வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

img

என்எல்சியில் இறந்தவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்: முதலமைச்சர் 

சென்னை:
என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் புதனன்று காலை திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் பழனிசாமியுடன் வியாழனன்று தொலைபேசியில் பேசினார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

;