திங்கள், நவம்பர் 30, 2020

tamilnadu

img

வேளாண் மசோதாக்கள்: ககன்தீப் சிங் பேடி விளக்கம்

சென்னை:
வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் விளக்கம் அளித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் ஆதரவு தெரிவித்தார் என்று அமைச்சர் துரைக் கண்ணு கூறினார்.வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங், “வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. விவசாயிகளுக்கு நன்மையே. ஒப்பந்த வேளாண்மை குறித்து தமிழக அரசு சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது. அவைதான் மத்திய அரசின் சட்டத்திலும் உள்ளன.

முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டாலும், மார்க்கெட் விலை அதிகரித்தால் அந்த விலைக்கே பொருட்களை விற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த வேளாண்மை முறையில் விளைபொருட்களுக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயிக்கலாம்” என்றார்.

;