tamilnadu

img

ததீஒமு ஆர்ப்பாட்டம்

ததீஒமு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 30- நெடுஞ்சாலைத்துறையின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் எல்லீஸ்பேட்டை-காஞ்சிக்கோவில் பிரி வில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின மக்கள் குடியிருப்பு என்ற பாகுபாட்டு டன் செயல்படும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தைக் கண்டித்தும், செல்வா நகரில் இருந்து பாரதிதாசன் கலை  அறிவியல் கல்லூரி வரை மின் விளக்கு அமைக்க வேண் டும். எல்லீஸ்பேட்டை எல்பிபி வாய்க்காலினை அடுத்து  வடபுறம் உள்ள 30 வீடுகளுக்குச் செல்லும் வழியில் 50  அடி நீளம் வரை இணைப்பு தார்ச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஈரோடு  மாவட்டம், எல்லீஸ்பேட்டை-காஞ்சிக்கோவில் பிரிவில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் ஞா.ம.ராஜசேகரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டத் தலைவர்  பி.பி.பழனிசாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். மாணிக்கம், விசிக திருமா.குணவளவன், பொன்னரசு, பேராயர் ஜான் விஸ்வநாதன், ஐ.இளங்கோ உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். முடி வில், எஸ்.துரைராஜ் நன்றி கூறினார்.